தேவனுக்கே மகிமையுண்டாவதாக

பிலிப்பியர் 2:8 

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தருக்கு கீழ்ப்படிகிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படிந்து, தன்னை தான் முழுமையும் வெறுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 15:10-21   

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.

சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.

அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.

இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.

இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.

சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.

ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

மேற்கூறிய வசனங்களில்  சவுல் அமலேக்கியர்களில் முக்கியமானவைகளை அழித்து போடாமல் இருந்ததால், கர்த்தர் சாமுவேலிடம்  சொன்னது, நான் சவுலை ராஜாவாக்கினது  எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னை விட்டு திரும்பி  என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் என்றார்.  அவ்விதம் நிறைவேற்றாமற் இருந்ததால்; சாமுவேல் மனம்நொந்து இராமுழுவதும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டான்.  மறு நாள் அதிகாலையிலே சாமுவேல், சவுலை சந்திக்க போன போது அங்கு கர்மேலிலே வந்து சவுல் ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களுக்கும் சென்று கில்காலுக்கு போனான்  என்று சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலிடத்தில் வந்த போது சவுல், சாமுவேலை பார்த்து; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர், கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று சொன்னதற்கு சாமுவேல் சவுலிடம்,  அப்படியானால் என் காதில் விழுகிற ஆடுகளின் சத்தமும், மாடுகளின் சத்தமும் என்ன என்று கேட்டதற்கு, சவுல் சொன்ன மறுபடி என்னவென்றால் அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளை கொண்டு வந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படிக்கு கொண்டு வந்தார்கள் என்று சொன்னதற்கு சவுல் அதனை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல், கர்த்தருடைய வார்த்தையை சவுலுக்கு சொல்லும் போது; நீர் சிறியவராயிருந்த போது இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே; இப்போதும் கர்த்தர்; நீ போய் அமலேக்கியராகிய அந்த பாவிகளை சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.  

ஆனால் நீர் அந்த சொல்லை கேளாமல், கொள்ளையின் மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தது என்ன என்ற போது, சவுல்   சாமுவேலை நோக்கி; கர்த்தர் என்னை அனுப்பின வழியாய் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டு வந்து, அமலேக்கியரை சங்காரம் பண்ணினேன்.  ஆனால் ஜனங்களோ, உம்முடைய கர்த்தருக்கு கில்காலிலே பலியிடும் படிக்கு கொள்ளையிலே சாபதீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளை பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.  

அப்பொழுது சாமுவேல் 1சாமுவேல் 15:22, 23  

அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

மேற்கூறப்பட்ட கருத்துகளினால் கர்த்தர் சவுலை ராஜாவாயிராதபடிக்கு புறகணித்நு தள்ளினார்  என்பதனை பார்க்கிறோம்.  என்னவென்றால் சவுல், கர்த்தருக்கு கீழ்படியவில்லை என்றும்; அவர் வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்கவில்லை என்றும், இரண்டகம் பண்ணினதாகவும், அவபக்தியுள்ளவன் என்றும் அவனைக்குறித்து கூறப்படுகிறது.  ஆதலால்  நாமும் அழிக்க வேண்டிய காரியங்களை அழிக்காமல் இருந்தால் நாமும் சவுலை போலே இருக்கிறோம்.  ஆதலால் நம்மில் கிறிஸ்து ராஜாவாக இருப்பாரானால் நமக்கு கீழ்படிதலை கற்று தந்து, கர்த்தருக்குரிய காரியங்களில் உண்மையாகவே வாழ முடியும்.  இவ்விதமாக நாம் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.