தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 28:26 

தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய விசுவாச பயணத்தில் அமலேக்கின் கிரியைகளால்  நித்திய ஜீவன் இழந்துபோகாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை நம்முடைய தேவனாக முழு மனதோடும், முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் மனதார ஏற்றுக்கொண்டு, அவரை பின்பற்றி வாழ வேண்டும் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 15:32-35  

பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.

சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப்போட்டான்.

பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

மேற்க்கூறிய வார்த்தைகள் பிரகாரம் சாமுவேலை சவுல் கர்த்தரை பணிந்துக்கொள்ள வேண்டுமென்று மீண்டும் அழைத்ததினால், அவனோடுகூட  சவுலுக்கு பின் சென்றான்; சவுல் கர்த்தரை பணிந்துக்கொண்டான்.   பின்பு சாமுவேல் அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்;  ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து மரணத்தின் கசப்பு அற்று போனது நிச்சயம் என்றான்.  பிரியமானவர்களே இப்படி தான் நம்மிலும் அநேகர், அமலேக்கின் கிரியைகள் உள்ளவர்கள் ஆத்துமா மரணத்திற்கேதுவான பாவங்களை செய்தாலும், நாம் நிர்விசாரமாக ஒன்றுமில்லை என்று நினைக்கிறோம்.  பின்பு சாமுவேல்: உன் பட்டயம் ஸதிரீகளை பிள்ளையற்றவர்களாக்கினது போல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகை துண்டித்து போட்டான்.  பின்பு சாமுவேல் ரமாவுக்கு போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலே தன் வீட்டுக்கு போனான்.  ஆனால் சவுல் மரணமடையுமட்டும் சாமுவேல் அவனை கண்டு பேசவில்லை.  இஸ்ரவேலின் மேல் சவுலை ராஜாவாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம்,  சாமுவேல் சவுலுக்காக துக்கித்துக்கொண்டிருந்தான். 

பிரியமானவர்களே, சவுல் செய்யாததை கர்த்தர் சாமுவேலை வைத்து செய்து அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை துண்டித்ததை பார்க்கிறோம்.  ஆகையால் விசுவாச பயணத்தில் அனுதினம் நம் உள்ளத்தின் எண்ணங்களில் ஆகாகின் கிரியைகள் (நம்முடைய ஆத்துமா இரட்சிப்பை தடை செய்கிற கிரியைகள்) அழிக்கப்பட்டால் கர்த்தர் நம்மேல் பிரியமாயிருப்பார்.  இவ்விதமாக ஒவ்வொரு காரியமும் நாம் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.