தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 21:8 

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் பெலிஸ்தியன் வார்த்தைக்கு பயப்படாதபடி தேவபெலன் தரித்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் எடுத்துப்போடாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 17:1-11 

பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.

அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.

அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.

அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.

அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.

அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.

அவன் என்னோடே யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,

பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான்.

சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் விளக்கம் என்னவென்றால் பெலிஸ்தர் யுத்தம் பண்ணுவதற்கு தங்கள் சேனைகளை சேர்த்து யூதாவிலுள்ள சோக்கோவிலே கூடி, சோக்கோவுக்கும், அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.  சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்து கூடி, ஏலா பள்ளதாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு விரோதமாக அணிவகுத்து நின்றார்கள்.  பெலிஸ்தியர் அந்த பக்கத்து ஒரு மலையின் மேலும், இஸ்ரவேலர் இந்த பக்கத்து ஒரு மலையின் மேலும் அவர்களுக்கு நடுவே ஒரு பள்ளதாக்கு இருந்தது.  அப்போது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தியரின் பாளயத்திலிருந்து இறங்கி வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும்  ஒரு ஜாணுமாயிருக்கும்.  அவன் தலையின் மேல் வெண்கல சீராவை போட்டு, ஒரு போர் கவசம் தரித்திருப்பான்.  அந்த கவசத்தின் நிறை ஐயாயிரம் நிறை வெண்கலமாயிருக்கும்.  

அவன் தன் கால்களிலே வெண்கல கவசத்தையும், தன்  தோள்களின் மேல் வெண்கல கேடகத்தையும்  தரித்திருப்பான்.  அவனுடைய ஈட்டிதாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும்,  அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்.  பரிசை பிடிக்கிறவன் அவனுக்கு முன்பாக நடப்பான்.  அவன் வந்து நின்று, இஸ்ரவேல் சேனைகளை பார்த்து சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணி வகுத்து நிற்கிறதென்ன? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனை தெரிந்துக் கொள்ளுங்கள்; அவன் என்னிடத்தில்  வரட்டும்; அவன் என்னோடே யுத்தம் பண்ணவும், என்னைக்கொல்லவும்  சமர்த்தனனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்.  நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால் நீங்கள் எனக்கு வேலைக்காரராயிருந்து எங்களை சேவிக்க வேண்டும் என்று சொல்லி; பின்னும் அந்த பெலிஸ்தியன்: நான் இன்றைய தினம் இஸ்ரவேலுடைய சேனையை நிந்தித்தேன், நாம் ஒருவரோடொருவர் யுத்தம் பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.    அதனால் சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்த பெலிஸ்தனுடைய வார்த்தைகளை கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வார்த்தைகளினிமித்தம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிற காரணம் என்னவென்றால் பெலிஸ்தியன்  இஸ்ரவேலராகிய மீண்டெடுக்கப்பட்ட  ஆத்துமாவிற்கு விரோதமாக துர் செயல்கள் செய்வதற்காக காலையிலும் , மாலையிலும் நம் மனதை மாற்றுகிற சிந்தைகள் வந்து நிற்கும் என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் வந்துக்கொண்டிருக்கும் என்பதை குறித்து தான் அவன் காலையிலும் மாலையிலும் வந்து நிற்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அல்லாமலும் ஒருவன் அணிகிற ஆயுதத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறது  என்னவென்றால் பெலிஸ்தியன்  என்றால் அவனும் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியையும் விரும்புகிறவன்.  காரணம் என்னவென்றால் பெலிஸ்தியர்கள் என்றால் இருவழிகளில் நடக்கிறவர்கள், எப்படியென்றால் கர்த்தரின் வார்த்தைகளும், மற்றும் அவர்கள் வாழ்வில் விக்கிரகராதனையும் செய்வார்கள்.  

மேலும் முழுமையும் கர்த்தரின் வழிகளில் நடக்கிறவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தின் நடுவில் தோன்றும்.  ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் பெலிஸ்திய கிரியைகளால் விழுந்து போகாத படி  அந்நேரத்தில் தேவ பெலன் தரித்துக் கொண்டு நின்று வெற்றி எடுக்க கர்த்தர் கிருபையளிக்கிறார்.   இவ்விதமாக எல்லா நாட்களிலும் பெலிஸ்தர்களுடைய வார்த்தைகளை குறித்து இஸ்ரவேலர் பயப்படுகிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  நாம் ஒரு போதும் பெலிஸ்தியனுடைய  வார்த்தைக்கு நாம் பயப்படாதபடி கர்த்தரின் வார்த்தைகளுக்கு பயப்படுவோமானால் கர்த்தர் எப்போதும் நம்மோடிருப்பார்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.