தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 3:6
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தினமும் காலையிலும், மாலையிலும் ஆர்ப்பரிப்போடு கர்த்தரை மகிமைப்படுத்தி சத்துருவை தோற்க்கடிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் பெலிஸ்தியன் வார்த்தைக்கு பயப்படாதபடி தேவபெலன் தரித்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 17:12-21
தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.
ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.
தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.
தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.
ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.
அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.
மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை தியானிக்கும் போது சவுலும், இஸ்ரவேல் ஜனங்களும் பெலிஸ்தனுடைய வார்த்தைகளை கேட்டு பயப்பட்டதினால், தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகமியனாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான். ஈசாய்க்கு எட்டு குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாயிருந்தான். ஈசாயினுடைய மூத்த மூன்று குமார்களும் சவுலோடேக்கூட யுத்தத்திற்கு போயிருந்தார்கள். அவர்களில் மூத்தவன் எலியாப், இரண்டாம் குமாரன் அபினதாப், மூன்றாம் குமார் சம்மா என்பவர்கள் ஆகும். தாவீது எல்லாருக்கும் இளையவன், அவன் சவுலை விட்டு போய் தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான். அந்த பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் வந்து வந்து நிற்பான். அப்போது ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி; சகோதரருக்கு ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு பாளயத்திற்கு, உன் சகோகரரிடத்தில் ஓட்டமாய் போய், இந்த பத்து பால்கட்டிகளை ஆயிரம் பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகசெய்தியை விசாரித்து அங்கிருந்து அடையாளம் வாங்கிக்கொண்டு வா என்று சொல்லி அனுப்பினான். அந்நேரத்தில் சவுலும், இஸ்ரவேலரும் பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்போது தாவீது அதிகாலையில் எழுந்து ஆடுகளை காவலாளி வசமாய் விட்டு, தன் தகப்பன் தனக்கு கற்ப்பித்த பிரகாரம் எல்லாம் எடுத்துக்கொண்டு போய், இரதங்கள் இருக்கிற இடத்திலே அணிவகுத்து நின்று யுத்தத்திற்க்கென்று ஆரப்பரித்தார்கள். இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள்.
பிரியமானவர்களே மேற்கூறியவற்றின் கருத்துக்களை நாம் தியானிக்கும் போது நம்முடைய உள்ளத்திலுள்ள போராட்டங்களை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். இந்த பெலிஸ்திய கிரியைகள் நம் உள்ளத்தை வஞ்சிக்கும்படி, காலையிலும் மாலையிலும் போராடுவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனை நாம் ஜெயமெடுக்கும்படியாக கிறிஸ்துவின் சபையாக நாம் காலையிலும் மாலையிலும் கர்த்தரை சத்தியத்தால் நிறைந்தவர்களாய் தேவாவியால் நிறைந்து தேவனை ஆராதிக்க வேண்டும். ஆராதிக்கும் போது ஆர்ப்பரிப்போடு கர்த்தரை நாம் மகிமைப்படுத்தினால் சத்துரு நம்மை விட்டு ஓடிப்போவான், நம்முடைய உள்ளம் சுத்தம்பண்ணப்படும். இவ்விதம் நாம் கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.