தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தருக்காக வேலைசெய்யும் படியாக உற்சாகமுள்ளவர்களாய் வைராக்கியத்தோடு சபையோடு இணைந்து வேலை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் காலையிலும், மாலையிலும் கர்த்தரை ஆர்ப்பரிப்போடு சத்திய வசனங்களால் நிறைந்தவர்களாய் கர்த்தரை மகிமைப்படுத்தி, சத்துருவை தோற்கடிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது தாவீது, தன் சகோதரர்கள் இஸ்ரவேல் ஜனங்களுமாய் யுத்தத்திற்கு அணிவகுத்து பெலிஸ்தியர்களோடு யுத்தம் செய்வதற்கு ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கும் போது, தான் கொண்டு வந்தவைகளை இறக்கி; ரஸ்துகளை காக்கிறவன் வசமாய் வைத்து விட்டு, தன் சகோதரர்கள் நின்ற சேனைக்குள் ஓடி, அவர்களை பார்த்து சுகமாயிருக்கிறீர்களா என்று நலம் விசாரித்து அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில், இதோ காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு பெலிஸ்திய வீரன், பெலிஸ்திய சேனைக்குள்ளிலிருந்து எழும்பி ஓடி வந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான், அந்த வார்த்தைகளை தாவீது கேட்டான்.
அப்போது 1சாமுவேல் 17:25
அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.
மேற்கூறிய வார்த்தைகளை தாவீது கேட்டப்பொழுது
1சாமுவேல் 17:26
அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.
இவ்விதமாக தாவீது சொல்ல ஜனங்கள்
1சாமுவேல் 17:27
அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
மேற்கூறிய வார்த்தைகளை ஜனங்கள் தாவீதுக்கு சொன்னார்கள். இப்படியாக தாவீது அவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், அதனை கேட்ட தாவீதின் மூத்த சகோதரன் எலியாப், தாவீதின் மேல் கோபமூண்டவனாகி நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்த கொஞ்சம் ஆடுகளை யார் வசமாய் விட்டாய்? யுத்தத்தை பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். அதற்கு தாவீது நான் செய்தது என்ன என்று சொல்லி, நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, அவ்விடம் விட்டு வேறொருவனிடத்தில் அந்தபிரகாரமே கேட்டதற்கு அவர்கள் முந்தின பிரகாரமே உத்தரவு சொன்னார்கள்; அவன் சொன்ன வார்த்தைகளை சவுலுக்கு அறிவித்த போது, சவுல் தாவீதை அழைப்பித்தான்.
பிரியமானவர்களே கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட தாவீது என்பது, நம்முடைய ஆத்துமாவைக் குறித்து தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் நாம் எந்த வேலையில் இருந்தாலும் தேவனுடைய சபையோடு நெருங்கின தொடர்பு உள்ளவர்களாக காணப்பட வேண்டும். அல்லாமலும் சபை ஆராதனையில் ஆவியிர் நிறைந்தவர்களாய் தேவனை மகிமைபடுத்துவதோடுகூட கர்த்தர் சத்துருக்களோடு யுத்தம் செய்கிறார். ஆகையால், மேலும் கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட ஆத்துமா, கர்த்தரோடு இசைந்து அவரின் வேலை செய்வதற்கு எப்போதும் ஆவியில் உற்சாகமுள்ளதாக காணப்படும்; ஒருபோதும் அமர்ந்திருக்க விடாது. அப்படி தான் தாவீது இருந்தான் என்பது தெரிய வருகிறது.
இவ்விதமாக இந்த கருத்துக்களை வாசிக்கிற நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வேலையில் உற்சாகமுள்ளவர்களாக இருந்து, எந்த சூழ்நிலைமையிலும் சத்துருவுக்கு பயப்படாதபடி தைரியமாகவே இருந்து சத்துருக்களோடு போராடி, சத்துருக்களை மேற்க்கொள்ள வேண்டும். இவ்விதமாக நாம் கர்த்தரின் வேலையை செய்வதற்கு நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.