தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 94:22

கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டு, அவருடைய வார்த்தைகளால் சத்துருவை ஜெயிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவிலிருக்கிற துர்உபதேசம் அகற்றப்படும்படியாக கர்த்தரிடத்திலிருந்து இரக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

1சாமுவேல் 17: 46 - 58

இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,

தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.

இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.

ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.

தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.

தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.

தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.

அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

மேற்க்கூறிய வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில்  தாவீது பெலிஸ்தியனிடம்  இன்றையதினம் கர்த்தர் உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக்கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தியருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்து பறவைகளுக்கும்,  பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலின் தேவன் ஒருவர் உண்டென்று  பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.  மேலும் தாவீது சொன்னது கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துக் கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.  அப்பொழுது அந்த பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராக கிட்டி வருகையில், தாவீது பெலிஸ்திய சேனைக்கும், அந்த பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துக் சுழற்றி, பெலிஸ்தியனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்த கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.  

இப்படி தாவீது ஒரு கவணினாலும்,  ஒரு கல்லினாலும்  பெலிஸ்தியனை மேற்க்கொண்டு அவனை மடங்கடித்து அவனை கொன்றுப் போட்டான்; தாவீதின்  கையில் பட்டயம் இல்லாதிருந்தது பின்பு தாவீது பெலிஸ்தியனண்டையில் ஓடி அவன் மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்;  அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தியர் கண்டு ஓடி போனார்கள்  அப்பொழுது இஸ்ரவேலரும் யூத மனுஷரும் எழும்பி ஆர்ப்பரித்து, பள்ளதாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள் மட்டும் பெலிஸ்தியரை துரத்தினார்கள்  ஈராயீமின் வழிகளிலும், காத் பட்டண மட்டும், எக்ரோன் பட்டணம் மட்டும் பெலிஸ்தியர் வெட்டுண்டு விழுந்தார்கள்.  பெலிஸ்தியர்களை துரத்தின பின்பு, இஸ்ரவேலர் அவர்கள் பாளயங்களை கொள்ளையிட்டார்கள்.  அதன் பின்பு பெலிஸ்தியனுடைய தலையை தாவீது எடுத்து அதை எருசலேமுக்கு கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்தில் வைத்தான்.  தாவீது பெலிஸ்தியனுக்கு எதிராக புறப்பட்டு போகிறதைச் சவுல் கண்ட போது, அவன் சேனாபதியாகிய அப்னேரை பார்த்து, அப்னேரே இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்.  அதற்கு அப்னேர் ராஜாவே எனக்கு தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். பின்பு சவுல் அப்னேரிடம் இது யாருடைய மகன் என்று விசாரிக்க சொன்னதற்கு , அவன் தாவீதை சவுலிடத்தில் அழைத்து சென்றான்.  அப்போது பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.  அப்பொழுது சவுல், வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனை கேட்டதற்கு, தாவீது நான் பெத்லேகேம் ஊரானாயிருக்கிற அடியாராகிய ஈசாயின் மகன்.  

பிரியமானவர்களே கர்த்தரை விட உயர்ந்து எந்த கிரியை நிற்கிறதோ அதனை கர்த்தர் அவருடைய வார்த்தையாகிய வல்லமையை அனுப்பி அதனை மடங்கடித்து, அந்த தலையை அதனிடத்தினின்று வெட்டி மாற்றுகிறார் என்பதும், மேலும் ஒவ்வொரு நீதியின் கிரியைகள் நாம் தரித்துக்கொள்ளும் போது பெலிஸ்திய கிரியைகள் அழிந்துப் போகிறதையும் பார்க்கிறோம்.  அதனால் நாம் கர்த்தரின் அபிஷேகத்தால் மட்டுமே நம் உள்ளில் எழும்புகிற சத்துருக்களை நிர்மூலம் பண்ணமுடியும்.     அதனால் நம்முடைய  ஆத்துமா கிறிஸ்துவின் அபிஷேகத்தால் நிரப்பப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.