தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 14:30

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு பொறாமை உள்ளத்தில் எழும்பாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.மணவாட்டி சபையாகிய நமக்கு பொறாமை உள்ளத்தில் எழும்பாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டு, அவருடைய வார்த்தைகளினால் சத்துருவை ஜெயிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அப்படித்தான் தாவீது கோலியாத்தாகிய பெலிஸ்தியனை ஜெயித்தான்  என்று பார்க்கிறோம்.  

அல்லாமலும் தாவீது கோலியாத்தை ஜெயித்த பிற்பாடு சவுல் தாவீது யாருடைய மகன் என்று விசாரித்த பின்பு, தாவீது சவுலோடே பேசுகிறான்.  பின்பு 

1சாமுவேல் 18:1- 9

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.

யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்.

யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை  தியானிக்கையில்  தாவீது சவுலோடே பேசி முடித்த பின்பு யோனத்தானுடைய ஆத்துமா தாவீதுடைய ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது யோனத்தான் தாவீதை தன் உயிரை போல் சிநேகித்தான்.  அவன் தன் உயிரை போல் சிநேகித்ததினால் அவனும், இவனும் உடன்படிக்கைப் பண்ணிக்கொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையை கழற்றி, அதையும், தன வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும் தன் கச்சையும்கூட தாவீதுக்குக் கொடுத்தான். தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய் காரியத்தை நடப்பித்ததினால் சவுல் தாவீதை யுத்த மனுஷரின் மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனங்களின் கண்களுக்கும் சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்குங்கூட பிரியமாயிருந்தான்.   அல்லாமலும் தாவீது பெலிஸ்தியனை கொன்று திரும்பி வந்த பின்பு, ஜனங்கள் திரும்பி வரும் போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலிருந்து  ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும், கீத வாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர் கொண்டு வந்தார்கள்.   அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில் சவுல் கொன்றது ஆயிரம், தாவீதுக் கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாக பாடினார்கள்.  மேலும் சவுலுக்கு இந்த வார்த்தைகளை கேட்க விசனமாயிருந்தது, அவன் எரிச்சலடைந்து, தாவீதுக்கு பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கம் மாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்க்கொண்டு சவுல் தாவீதை காய்மகாரமாக பார்த்தான்.  

பிரியமானவர்களே மேற்க்கூறிய  தேவனுடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நம்முடைய ஆத்துமா தேவனுடைய வார்த்தைகளால் தேவனோடு ஒன்றாய் இணைந்து இருக்கும் போது நம் உள்ளத்தில் எந்த அந்நிய கிரியைகளும் வளர விடாமல் காத்துக்கொள்வார்.  அவ்விதம் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து பரிசுத்த படுத்துகிறாரென்றால் நாம் புத்தியாய் நடந்துக் கொண்டால் மாத்திரமே அப்படி நடக்கும்.  அப்படியானால் கர்த்தர் நம்மை அவருடைய ராஜ்யத்திலே உயர்த்துவார்.  அதுமட்டுமல்லாமல் ஜனங்களுடைய கண்களுக்கு முன்பாக பிரியமாயிருப்போம், தேவனுக்கும் பிரியமாயிருப்போம்.  அல்லாமலும் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கர்த்தர் நம்மை அவருடைய கிருபைகளினால் ஆசீர்வதிக்கும் போது, கர்த்தரால் பொல்லாத ஆவி அனுப்பட்டவர்கள், நல் ஆவி உள்ளவர்களிடம்  சவுலை பொல பொறாமை கொள்வார்கள்.  அதுமட்டுமல்ல காய்மகாரமாகவே பார்ப்பார்கள்.  

ஆனால் கர்த்தருடைய வார்த்தையாவது 

நீதிமொழிகள் 24:1 ,2 

பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் நன்றாக தியானித்து வரும் போது பொல்லாத ஆவி உள்ளவர்களின் உள்ளம் கொடுமையை யோசிக்கும், நாவு தீவினையை பேசும்.  

பிரியமானவர்களே எவ்விதத்திலும் நாம் அவர்களோடு இருக்க விரும்பக்கூடாது.  ஏனென்றால் அவர்களில் இருக்கிற பொல்லாத ஆவி நம்மை தொடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்டவர்களை குறித்து நாம் பொறாமைக் கொள்ளாதபடி நம்முடைய ஆத்துமாவை ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.