தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 6:7  

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் எப்போதும் புத்திமான்களாய் (பரிசுத்த ஆவியின் நிறைவோடு) நடந்து கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் யாரிடமும் எந்த காரணத்தாலும் மற்றவர்களிடம் பொறாமைக் கொள்ளக் கூடாது என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமு 18 :9 - 16

அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.

அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.

கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,

அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.

தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.

இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சவுலுடைய உள்ளத்தில் இருந்த  பொறாமையின் காரணத்தால் தாவீதை காய்மகாரமாக பார்த்தான்.  அதன் மறு நாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின் மேல் இறங்கினது.  அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்;  ஆனால் அந்நேரம் தாவீது  தினந்தோறும் செய்கிறபடி தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.  அந்நேரம் சவுலின் கையில் ஈட்டி இருந்தது;  அந்த ஈட்டியினால் சவுல் தாவீதை சுவரோடே சேர்த்து உருவ குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன் மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது இரண்டு தரம்  விலகி அவனுக்கு தப்பினான்.  பின்பு சவுல் கர்த்தர் தாவீதோடேக்கூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகி போனார் என்றும் சவுல் கண்டு தாவீதுக்கு பயந்து , தன்னை விட்டு அப்புறப்படுத்தி, அவனைஆயிரம்பேரு்கு அதிபதியாகவைத்தான்.  அந்தபடி அதிபதியாக வைத்ததினால் ஜனத்தின் முன்பாக போக்கும் வரத்துமாயிருந்தான்.  தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்துக்கொண்டதினால் கர்த்தர் அவனோடேக் இருந்தார்.  தாவீது மகா புத்திமானாய் நடக்கிறதை சவுல் கண்டு தாவீதுக்குப் பயந்திருந்தான். இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும் தாவீதை அதிகமாக சிநேகித்தபடியினால் ஜனங்களின் முன்பாக போக்கும் வரத்துமாயிருந்தான்.  

ஆதலால் பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் பொறாமையின் காரணமாக கர்த்தர் பொறாமை உள்ளத்தில் பொல்லாத ஆவியை அனுப்புகிறார்.  ஆனால் உண்மையான ஆவியாகிய கர்த்தரின் ஆவியைப் பெற்றிருந்தால் எல்லா இடங்களிலும் பொறுமையாகவும், புத்தியாயும் நடந்துக்கொள்வோம்.  அவ்விதம் உண்மையும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் நாம் நடந்துக் கொள்வோமானால், பொல்லாதாவி உள்ளவர்கள் நல் ஆவி உள்ளவர்களுக்கு விரோதமாக பொறாமையின் காரணமாக பொய்யாக பலவித தந்திரங்களோடு நமக்கு விரோதமாக பேசுவார்கள்; பல காரியங்களை செய்வார்கள்.  பல தந்திரமான பொய் உபதேசங்களால் மக்களை தங்கள் வழியில் இழுத்து கொள்வார்கள்.  ஆனால் இப்படிப்பட்ட காரியங்கள் வரும் போது நாம் எதற்கும் கலங்கக்கூடாது, சோர்ந்து போகக் கூடாது.  கர்த்தரிடத்தில் அதிகமாக நெருங்கிக் கொண்டு பரிசுத்தத்தில் அதிகமாக வளருவோமானால் நம்மை குறித்து யார் யார் எதை விதைத்தாலும் அதற்கேற்ற பலனை நிசசயமாய் அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  இப்படி தான் சவுல் தாவீதுக்கு விரோதமாக நடந்தான்; ஆனால் தாவீதுக்கு தற்சமயம் சவுலால் உபத்திரவங்கள் இருந்தாலும் கர்த்தர் தாவீதோடே இருந்தார்.  ஆனால் சவுல் தாவீதிடத்தில் பொறாமை கொண்டதால் அதே தாவீதிடத்தில் சவுல் போக வேண்டியதாயிருந்தது. 

அதனால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் யாவரும் ஜாக்கிரதையாய் கர்த்தரிடத்தில் திரும்புவோம்.   எப்படியாயினும் கர்த்தரை அறிந்த பின் அவரவர் விதைத்த விதைப்பின் பலன் பெற்றுக்கொள்ளதான் செய்வோம்.  ஆதலால் இன்றே மனந்திரும்பி மன்னிப்பு பெற்று சவுலை போல் அழிந்து போகாதபடி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.