தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 97:10

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் உள்ளம் நய வஞ்சக கிரியைகள் எழும்பாத படி, கபடற்ற உள்ளமாக பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் புத்திமான்களாய் பரிசுத்த ஆவியின் நிறைவாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 18:17-21 

என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.

மேற்கூறப்பட்டவைகளை நாம் தியானிக்கையில் தாவீது இஸ்ரவேல், யூத ஜனங்களிடையில் போக்கும் வரத்துமாக நடந்துக் கொண்டதினால் சவுல்  நினைத்தது என்னவென்றால் என் கை அல்ல பெலிஸ்தரின் கையே அவன் மேல் விழட்டும், மேலும் சவுல் தாவீதை நோக்கி சொன்னது என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய் மட்டும் இருந்து யுத்தத்தை நடத்து என்றான்.  அப்போது தாவீது சவுலை பார்த்து;  ராஜாவுக்கு மருமகனாவதற்கு நான் எம்மாத்திரம்; இஸ்ரவேலின் நம் தகப்பன் வம்சம் எம்மாத்திரம்  என்றான்.  ஆனால் சவுல் தன்மூத்த மகளாகிய மேராப்பை மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுத்தான்.  ஆனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்ததை சவுல் அறிந்து சந்தோஷப்படுகிறான்.  சவுல் நினைத்தது என்னவென்றால் அவள் அவனுக்கு கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன் மேல் விழவும் அவளை அவனுக்கு கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதிடம் சொன்னது என்னுடைய இரண்டாம் குமாரத்தி மூலம் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான். 

மேலும்  சவுல் தன் ஊழியக்காரரிடம், தாவீதிடம் சொல்ல வேண்டிய காரியங்களை குறித்து சொல்லி அனுப்பியது என்னவென்றால் 

1 சாமுவேல் 18:22-30 

பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.

சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.

தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.

அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.

அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டுவந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

ஆகையால் சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.

பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

மேற்கூறிய  வார்த்தைகளை கேட்ட தாவீது நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும் அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; தாவீது சொன்னதை சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க; அவன் சொன்னது ராஜா பரிசத்தை விரும்பாமல் பெலிஸ்தரின் நூறு நுனிதோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்கு சொல்லுங்கள் என்றான்.  எப்படியெனில் தாவீதை பெலிஸ்தரின் கையினால் பழிவாங்குவதே சவுலின் எண்ணமாயிருந்தது. இந்த வார்த்தைகளை தாவீதுக்கேட்டவுடன் ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு பிரியமாயிருந்தது. அதற்கு குறிக்கப்பட்ட நாட்கள் வருவதற்கு முன்னே தாவீது எழுந்து தன் மனுஷரை கூட்டிக்கொண்டு போய் பெலிஸ்தரின் இருநூறு நுனித்தோல்களை கொண்டு வந்து, ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு எண்ணி செலுத்தினான்.  அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.  கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துக் கொண்டான்.  மீகாளும் அவனை அதிகமாக நேசித்தாள்.  ஆகையால் சவுல் இன்னும் அதிகமாக தாவீதுக்கு பயந்து, அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் தாவீதுக்கு சத்துருவாயிருந்தான்.  அல்லாமலும் பெலிஸ்தியருடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம், தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நட்துக்கொண்டான்.  அவன் பேர் மிகவும் பனம் பெற்றது.  

பிரியமானவர்களே இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது பொல்லாத ஆவி பிடித்த சவுல் தாவீதிடம் நல்லவனை போல் நடித்து; உள்ளத்தில் நய வஞ்சகத்தை வைத்துக்கொண்டு தாவீது எப்போது மடிந்து போவான் என்று எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதனை பார்க்கமுடிகிறது.  இவ்விதமாக கர்த்தரால் மீட்கப்பட்டவர்களில், நல் ஆவி பெற்றுக்கொள்ளாதவர்களின் உள்ளம் சவுலை போல தான் யோசிக்கும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆனால் கர்த்தருடைய ஆவியுள்ள தாவீது கபடற்ற மனுஷனாக காணப்படுகிறான்.  மேலும் சவுல் உறவுகாரனாக தாவீதை மடியபண்ணும்பொருட்டாக  வெளிப்படுகிறதை வாசிக்க முடிகிறது.  இப்படிதான் நம்மில் அநேகர் நெருங்கின உறவு போல் வந்து நம்மை ஏமாற்றுவார்கள்,  அதற்கு ஜாக்கிரதையாக இருக்கவே கர்த்தர் இதனை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இவை யெல்லாம் நம் உள்ளத்தில் எழும்பும் மாம்சத்தின் கிரியைகள்.  

ஆதலால் சில பேர் தங்கள் வாழ் நாளெல்லாம் மாம்ச கிரியைகளினாலே, தேவனுடைய ஜனங்களை சத்துருக்களாவே நினைத்துக்கொண்டே அழிந்து போவார்கள்.  ஆதலால் நம் உள்ளத்தில் துர் எண்ணங்கள் எழும்பாதபடி; கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட நாம் ஒரு போதும் மாம்சத்திற்கு அடிமைப்பட்டு போகக்கூடாது.  இவ்விதமாக ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.