தேவனுக்கே மகிமையுண்டாவதாக
2 நாளாகமம் 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரோடிருந்தால் கர்த்தர் நம்மோடிருப்பார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் தீமைக்கு நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 19:9-24
கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி,
மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.
மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து,
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது தாவீது பெலிஸ்தியரோடு யுத்தம் செய்து மகா சங்காரம் பண்ணி முறிந்தோடின பிறகு கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின் மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியை கையிலே பிடித்துக் கொண்டிருந்தான்; தாவீது தன் சுரமண்டலத்தை கையிலே பிடித்திருந்தான் அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவ குத்திப் போட பார்த்தான்; ஆனால் தாவீது சவுலுக்கு விலகினதாலே அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது. தாவீது அன்று இராத்திரியிலே ஓடிப்போய் தன்னை தப்புவித்துக் கொண்டான். தாவீதைக் காவல் பண்ணி, மறுநாள் காலமே அவனைக்கொன்றுப் போடும்படி, சவுல் அவன் வீட்டிற்கு சேவகரை அனுப்பினான்; இதனை தாவீதின் மனைவியாகிய மீகாள் அவனுக்கு அறிவித்தாள். எப்படியென்றல் இன்று இராத்திரி உம்முடைய பிராணனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளை நீர் கொன்றுப்போடப்படுவீர் என்று மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கி விட்டாள். பின்பு மீகாளோ ஒரு சொருபத்தை எடுத்து தன் கட்டிலின் மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலை போட்டு, துப்பட்டியினால் மூடிப்போட்டாள். தாவீதை கொண்டு வரும்டி சவுல் சேவகரை அங்கு அனுப்பும் போது, சுரூபமும், வெள்ளாட்டு தோலும் இருந்ததை அவர்கள் சவுலிடம் அறிவிக்க, அவன் மீகாளிடம் நீ என்னை ஏன் ஏய்த்து என் பகைஞனை தப்ப விட்டது என்ன என்றபோது; மீகாள் தன் தகப்பனிடம், என்னை போகவிடு; நான் உன்னை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் என்னிடத்தில் கேட்டார் என்றாள். தாவீது அங்கிருந்து தப்பி ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் போய், நடந்த எல்லாவற்றையும் அறிவித்த பின்பு சாமுவேலும், தாவீதும் நாயோதிலே தங்கினார்கள். பின்பு தாவீது நாயோதிலே இருக்கிறான் என்று அறிவிக்கப்பட்ட பின்பு, சவுல் தாவீதை கொண்டு வரும்படி சேவகரை அனுப்பினான்; அவர்கள் போகும் போது தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டமும், அவர்களுக்கு தலைவனாக சாமுவேலும் நிற்கிறதை கண்டு, அவர்களும் அந்த கூட்டத்தாரோடே தீர்க்கத்தரிசனம் சொன்னார்கள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்ட பின்பு, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். பின்பு மூன்றாந்தரமும் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்,. அப்பொழுது அவனும், ராமாவுக்கு போய் சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து சாமுவேலும், தாவீதும் எங்கே என்று கேட்டதற்கு, அவர்கள் நாயோதிலே இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன் ராமாவிலிருக்கிற நாயோதிற்கு போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால்; நாயோதிற்கு போய் சேருமட்டும் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டே நடந்து வந்து தன் வஸ்திரங்களை கழற்றிப்போட்டு; சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கத்தரிசனம் சொல்லி; அன்று பகல் முழுவதும், இராமுழுவதும் வஸ்திரம் இல்லாதவனாய் விழுந்து கிடந்தான; அவன் இவ்விதம் கிடந்ததினால் சவுலும் தீர்க்க தரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
பிரியமானவர்களே, பழைய ஏற்பாட்டில் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துனது மாம்சபிரகாரமான யுத்தம். ஆனால் கிறிஸ்து நமக்காக மரித்து, நம்மில் உயிர்த்தெழும்பின பின்பு நாம் செய்வது ஆவிக்குரிய யுத்தம். இதனை திருஷ்டாந்தபடுத்தவே தாவீதை, பொல்லாத ஆவி பிடித்த சவுல் ஈட்டியினால் குத்தும் போது அது சுவரில் படுகிறது, அடுத்தபடி அவன் விலகி போகிறான். இதனை நாம் சிந்திக்கும் போது அநேகர் நம்மை வார்த்தைகளினால் குத்துவார்கள்; அவ்விதம் குத்தப்படும் போது நாம் நினைக்க வேண்டும் சவுலின் மேல் இருந்த பொல்லாத ஆவி அவர்களை பிடித்திருக்கிறது. ஆனால் கர்த்தரின் ஆவி கண்டித்து உணர்த்து மேயல்லாமல், எப்போதும் நமக்கு நன்மைக்காகவே செய்வார். ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் நம்மை பொல்லாதவர்களின் கையில் ஒப்புக்கொடாமல் நம்மை விடுவித்து இரட்சிப்பார். அல்லாமலும் நாம் மணவாட்டி சபையோடு இருப்போமானால் நம்முடைய பிராணனை தப்புவிக்கிற தேவன். மேலும் எத்தருணத்திலும் பகைவன் நம்மை நெருங்கி வந்தாலும் அவர் அவர்கள் கையில் நாம் விழுந்து போகாதபடி, அவர்களை நம் பக்கத்தில் விழும்படி வைக்கிற தேவன் என்பதனை வேதவசனத்தில் கூட நாம் வாசிக்கிறோம். ஆதலால் யார் நம்மை சதிக்க பின்தொடர்ந்து வந்தாலும் நாம் கர்த்தரோடிருப்போமானால் கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பாதுகாப்பார். இவ்விதம் நாம் கர்த்தரோடிசைந்து வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.