தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 9:9

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் செய்தால் சத்துருக்களின் கையிலிருந்து தப்பித்துகொள்ளும்படியான போக்கை கர்த்தர் நமக்கு உண்டுபண்ணுவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கர்த்தர் நம்மில் நீதியை நடப்பிக்குமட்டும் கர்த்தரில் காத்திருப்போம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 20:14-23  

மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல்,

கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.

இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,

யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.

பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும்.

அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:

நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.

நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கையில் தாவீது சவுலுக்கு பயப்பட்டவனாக இருந்த போது, தான் தன்னுடைய ஆத்துமாவைப் போல் சிநேகித்த சவுலுடைய குமாரனாகிய யோனத்தான் தாவீதை ஆறுதல் வார்த்தைகளைக் கொடுத்து சமாதானத்தோடே அனுப்பி விடும் போது யோனத்தான் சொல்வது நான் உயிரோடிருக்கையில் நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தம் எனக்கு தயை செய்ய வேண்டியதுமல்லாமல், தாவீதின் சத்துருக்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் பூமியின் மேல் இராதபடிக்கு வேர் அறுக்கும் போது உமது தயவை என் வீட்டை விட்டு அகற்றி விடாமலும் இருக்க வேண்டும் என்றான்.  இப்படியாக யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கை பண்ணி, தாவீதின் சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்கு கேட்பாராக என்று சொன்னதுமல்லாமல், யோனத்தான் தாவீதை தன் உயிரை போல சிநேகித்தபடியினால் பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்.  பின்பு யோனத்தான் மறுநாள் அமாவாசியானதால் தாவீது போஜனத்துக்கு வராமல் இருக்கும் போது, தாவீது இருக்கும் இடம் காலியாயிருப்பதினால் சவுல் அதனை பார்த்தால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும் என்று  சொல்லி, சொன்ன காரியம் நடந்த போது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்கு தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்காரும், அப்போது நான் குறி வைத்து அதற்கு பக்கமாக மூன்று அம்புகளை எய்து விட்டு ஒரு பிள்ளையாண்டானை  அனுப்பி அந்த அம்புகளை தேடிவா என்று சொல்லும் போது, அது இப்புறத்திலே கிடக்கிறது அவைகளை எடுத்து வா  என்று சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை; உமக்கு சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைகொண்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு;  பின்பு அம்புகள் உனக்கு அப்புறத்தில் கிடக்கிறது என்று நான் அந்த பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய் விடும்; அப்போது கர்த்தர் உம்மை போக சொல்லுகிறார் என்றான். 

என்னவென்றால் மூன்று அம்புகளும் த்ரியேக தேவனுடைய வசனங்களும், பிள்ளையாண்டான் நம்முடைய இரட்சிக்கப்பட்ட நம்முடைய ஆத்துமாவுக்கும் தேவன் திருஷ்டாந்தபடுத்தி,  நம்முடைய ஆத்துமாவிற்குள் நாம் தப்பித்து கொள்ளும் படியான எண்ணங்கள் தோன்றும்.  பின்பு யோனத்தான் தாவீதிடம் சொன்ன காரியங்கள் என்னவென்றால் நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு என்றைக்கு்ம் கர்த்தர் நடுநிற்கும் சாட்சி என்றான்.  

பிரியமானவர்களே, சத்துருக்களால் நாம் ஒடுக்கப்படும் போது, நம் ஆத்துமாவில் சமாதான குறைவுக் காணப்படும்; அந்த சமாதானகுறைவை நீக்கும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய ஆத்துமாவில் அவருடைய ஜீவனை நமக்கு நல்கி, நம்மை கவலைகள் ஒடுக்கும் போது, நம் ஆத்துமாவிற்குள் கிறிஸ்து ஆறுதலும் சமாதானம் நல்கி தருகிறவர் என்பதின் வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தமாகக் கொடுக்கப்படுகிறது.  அது மட்டுமல்லாமல் நம்மை கிறிஸ்து மூலமாக தப்பித்துக் கொள்கிறார் என்பதின் அடையாளங்களும் கொடுக்கிறார். மேலும் நாம் கர்த்தரின் சித்தம் செய்தால் சத்துருக்களின் கையிலிருந்து கர்த்தர் நம்மை தப்பித்துக்கொள்வார்.  இவ்விதமாக கர்த்தரால் தப்பித்துக்கொள்ளும்படியான போக்கை நமக்கு நம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.