தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய பிராணனை அழிவுக்கு விலக்கி காக்கிறவர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவ சித்தம் செய்தால் சத்துருக்கள் கையினின்று விடுதலையாகி இரட்சிக்கப்படுவோம் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 20:24-27
அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்.
ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்கும் போது, தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான், அமாவாசியான போது ராஜாப் போஜனம் பண்ண உட்கார்ந்தான். ராஜா சுவரண்டையில் எப்போதும் போல தன் இடத்தில் உட்கார்ந்த போது, யோனத்தான் எழுந்திருந்தான். அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; வழக்கமாக தாவீது இருக்கிற இடம் காலியாயிருந்தது. ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும்; அவன் தீட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று சவுல் அன்றையதினம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அமாவாசிக்கு மறுநாளிலும் அந்த இடம் காலியாயிருந்ததினால், தன் மகன் யோனத்தானை சவுல் அழைத்து ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனம் பண்ணுவதற்கு வராதே போனதென்ன என்று விசாரித்தான். அப்போது யோனத்தான் தாவீது சொல்லி வைத்த பிரகாரம் சொல்கிறான் அதனைக் குறித்து
1சாமு 20:28-29
யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
இதனை கேட்ட சவுல் யோனத்தான் மேல் கோபமூண்டவனாகி, அவனைப்பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமுண்டாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமுண்டாகவும், ஈசாயின் மகனை நீ தோழனாக தெரிந்துக்கொண்டிருக்கிறதை நான் அறியேனோ என்று சொல்லி, அவன் உயிரோடிருக்கும் நாள்வரையும், நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை: ஆதலால் இப்போதே அவனை அழைத்து வா அவன் சாக வேண்டும் என்றான். இப்படியாக அவன் சொன்னதிற்கு யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலிடம் அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவன் என்ன செய்தான் என்று கேட்க, அவன் தன் மகன் யோனத்தானை குத்திப்போட அவன் மேல் ஈட்டியை எறிந்தான். ஆதலால் தாவீதை கொன்று போட தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்று யோனத்தான் அறிந்து கோபதாபமாய் பந்தியை விட்டெழுந்து அமாவாசியின் மறுநாளாகிய அன்றைய தினம் போஜனம் பண்ணாதிருந்தான். தன் தகப்பன் தாவீதை நிந்தித்தது அவனுக்கு மனநோவாயிருந்தது.
மறுநாளில் காலமே யோனத்தான் தாவீதிடத்தில் சொல்லியிருந்த பிரகாரம் அம்புகளை எய்யும்படியாக
1சாமுவேல் 20:35-43
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்;
பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக் கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.
யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.
நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்.
அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான்.
பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகள் பிரகாரம் அடையாள அம்பு எய்யப்பட்டது, அந்த பிள்ளையாண்டான் போன பின்பு தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று விசை வணங்கினான்; அவர்கள் ஒருவரையொருவர் முத்தம் செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான். அப்போது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடு நிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டு போனான்; யோனத்தானோ பட்டணத்திற்கு போய் விட்டான்.
பிரியமானவர்களே நம் பிராணனை அழிக்க வகை தேடுகிற பொல்லாத கூட்டங்களை பற்றி கர்த்தர் திருஷ்டந்தப்படுத்துகிறார். ஆனால் கர்த்தர் நம்மை சிநேகித்திருக்கிறபடியினால் நம் பிராணனை அழிவிலிருந்து விலக்கி காப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம் பிராணன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் எப்படி காக்கபடுகிறது என்பதின் திருஷ்டாந்தமும், அதற்கு ஜீவனுள்ள நம்முடைய ஆத்துமாவை, கர்த்தர் கையின் கருவியாக உபயோகப்படுத்துகிறார். அல்லாமலும் காக்கப்பட்ட நாம் கர்த்தராகிய தேவனை எப்போதும் முத்தம் செய்து மகிமைப்படுத்துகிறவர்களாக வேண்டும். மேலும் சமாதானமில்லாமல் நெருக்கத்தில் இருந்த நமக்கு கர்த்தர் சமாதானம் அருளுகிறார். இவ்விதமாக கர்த்தர் நமக்கு சமாதானம் அருளும்படியாக நாம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.