தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 78:25

தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் அப்பம் புசித்து புத்திமானாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய பிராணனை அழிவுக்கு விலக்கி காக்கிறவர் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 சாமுவேல் 21:1-4 

தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான்.

தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.

இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான்.

ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் தாவீதை கர்த்தர்  சவுலின் கையிலிருந்து யோனத்தான் மூலம் விடுவித்து, பின்பு தாவீது ஒளித்து இருந்த இடத்திலிருந்து எழுந்து புறப்பட்டு போன பின்பு நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்.  அப்போது அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்க்கொண்டு போய்: ஒருவரும் உம்மோடே வராமல் நீர் ஒண்டியாய் வருகிறது என்னவென்று  கேட்க தாவீது அகிமெலேக்கை பார்த்து சொன்னது; ராஜா எனக்கு ஒரு காரியத்தை கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும்; உனக்கு கட்டளையிட்டது இன்னதென்று ஒருவரும் அறிய வேண்டாம் என்று என்னோடே சொன்னார். ஆதலால் இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்கு சொல்லியிருக்கிறேன்; இப்போதும் உம்முடைய கையில்  இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும் இருக்கிறதை என்னிடத்தில் கொடும் என்றான்.  ஆசாரியன் தாவிதுக்கு பிரதியுத்தரமாக பரிசுத்த அப்பம் இருக்கிறதேயல்லாமல் சாதாரண அப்பம் என்னிடத்தில் இல்லை.  வாலிபர்கள் ஸ்திரீகளோடே சேராதிருந்தால் கொடுப்பேன்.  

அதற்கு தாவீது சொன்ன வார்த்தையாவது 

1சாமுவேல் 21:5  

தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான்.

அதனால் ஆசாரியன் 1சாமுவேல் 21:6 

அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.

இவ்விதம் நடந்த பின்பு அங்கு சவுலின் வேலைக்காரனாகிய ஏதோமியனாகிய தோவேக்கு அன்றைய தினம் கர்த்தரின் சந்நிதியில் தடைப்பட்டிருந்தான்.  அவன் சவுலின் மேய்ப்பருக்கு தலைவனாயிருந்தான்.  தாவீது அகிமெலேக்கை பார்த்து உம்முடைய கையில் ஒரு பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால் கையில் எதையும் எடுத்து வரவில்லை என்ற போது ஆசாரியன் சொன்னது நீர் ஏலே பள்ளதாக்கிலே கொன்ற பெலிஸ்தியனாகிய கோலியாத்தின் பட்டயம்; இதோ ஏபோத்திற்கு பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டு போம், அதை அல்லாமல் வேறொன்றும் இல்லை என்ற போது; தாவீது அதற்கு நிகரில்லை, அதனை எனக்கு தாரும் என்றான்.  பின்பு தாவீது எழுந்து சவுலுக்கு தப்பியோடி காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.  அப்போது ஆகீசின் ஊழியக்காரர்  அவனைப்பார்த்து தேசத்து ராஜாவாகிய தாவீது இவனல்லவா? சவுல் கொன்றது ஆயிரம்,  தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.  இந்த வார்த்தைகளினால் தாவீது ஆகீசுக்கு முன்பாக மிகவும் பயந்து அவர்கள் கண்களுக்கு முன்பாக தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவனை போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியிலே விழப்பண்ணிக்கொண்டிருந்தான்.  அப்போது ஆகீஸ் தன் ஊழியக்காரரை நோக்கி இவன் பித்தங்கொண்டவன்  என்று கண்டபிறகு என்னிடத்தில் ஏன் கொண்டு வந்தீர்கள்; எனக்கு முன்பாக பைத்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனை என்னிடத்தில் கொண்டு வருவதற்கு, பயித்தியக்காரர் எனக்கு குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமோ என்றான்.  

பிரியமானவர்களே மேற்கூறியவைகளின் கருத்துக்களை நாம் தியானிக்கையில் சத்துருவின் கையிலிருந்து விடுதலையான நாம், ஆசாரியராகிய கிறிஸ்துவின் பாதம் அமர்ந்து, அவர் கையில் நமக்கு அருளிய அப்பம் வாங்கி புசிப்போமானால் மீண்டும் சத்துருவின் கண்ணின் முன் நாம் அகப்படாதபடியாக கர்த்தர் நம்மை காத்துக்கொள்வார் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தி,  மேலும் அவருடைய கையிலிருந்து ஆவியின் பட்டயம் நமக்கு தருவார் என்பதும்; அல்லாமலும் நாம் போகிற பாதையிலெல்லாம் நம்முடைய ஆத்துமா இளைப்பாற விடாமல் சத்துரு பின் தொடருவான்; அப்படி பின் தொடரும் போது; தாவீது ஆகீஸ் ராஜாவினிடத்தில் புத்திமானாய் நடந்துக்கொண்டதால் எந்த ஜாதிகளாகிய சத்துருவின் கையில் கையில் கர்த்தர் ஒப்புக்கொடுக்காமல் இருந்தது போல, நாமும் பரிசுத்த அப்மம் புசித்தால் புத்திமான்களாய் நடந்துக்கொள்வோம்; அப்படியானால் கர்த்தர் நம்மையும் சத்துருக்களின் கையில் ஒப்புப்கொடுக்காமல் பாதுகாப்பார். இவ்விதம் நம்மை எல்லாவித பயத்தினின்றும் விடுதலையாக்கி இரட்சிக்கிறார்.  மேலும் நாமும் அப்படியே கர்த்தரின் கிரியைகளுக்கு ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.