தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 143:10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் யாரைக்குறித்தும் தவறான எண்ணங்கொள்ளாதபடி நம் உள்ளத்தை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் அப்பம் புசித்து புத்திமானாக வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 22:1-8
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,
அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,
சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
தாவீது ஆகீஸ் ராஜாவிடத்திலிருந்து தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்கு போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவ்விடத்துக்கு போனார்கள். ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடேக் கூடிக்கொண்டார்கள், அவன் அவர்களுக்கு தலைவனனான். இவ்விதமாக ஏறக்குறைய நானூறுப்பேர்க் கூடிக்கொண்டார்கள். ஆகையால் தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரை சேர்ந்த மிஸ்பேக்கு போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து தேவன் எப்படி நடத்துவார் என்பதனை அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்தில் தங்கியிருக்கும்படி செய்யும் என்று சொல்லி அவர்களை மோவாப் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய் விட்டான். அவர்கள் தாவீதோடே அரணில் இருந்தார்கள். பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப்பார்த்து சொன்னது நீர் அரணில் இராமல் யூதா தேசத்திற்கு புறப்பட்டு வாரும் என்ற போது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்; தாவீதும் அவனோடிருந்தவர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டபோது, சவுல் கிபியாவை சேர்ந்த ராமாவிலே ஒரு தோப்பிலே உட்கார்ந்து; தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னை சூழ்ந்து நிற்கும் போது, தன் ஈட்டியை தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது, தன்னண்டையில் நிற்கிறவர்களை பாரத்து: பென்யமீன் புத்திரரே கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும், திராட்ச தோட்டங்களையும் கொடுப்பானோ; உங்களெல்லாரையும் ஆயிரத்து அதிபதிகளும், நூற்றுக்கதிபதிகளுபாக வைப்பானோ? நீங்கள் எல்லாரும் எனக்கு விரோதமாக கட்டுபாடு பண்ணிக்கொண்டது என்ன? மேலும் யோனத்தானும், தாவீதும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டதை யாரும் அவனுக்கு வெளிப்படுத்தாதைக் குறித்தும்; வெளிப்படுத்தும்படி ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்ககிறபடி என் குமாரன் எனக்கு சதிப்பண்ண என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துக்கொண்டானே என்றான்.
பிரியமானவர்களே மேலே கொடுக்கப்பட்ட வார்த்தைகளை நாம் ஆராய்ந்து வரும் போது, இப்படிப்பட்ட காரியங்கள் நம்மேலும் சுமந்து வரும். ஏனென்றால் மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாக எப்போதும் போராடும் என்பது தேவனுடைய வார்த்தை. இதன் காரியம் என்னவென்றால் ஆபிரகாம் வீட்டிற்குள்ளும் இரண்டு காரியங்கள் இருந்ததை பார்க்கிறோம். இப்படி ஒரு வீட்டிற்குள் இரண்டு காரியம் இருந்தால் நம்முடைய வாழ்க்கை எப்போதும் போராட்டம். அதனால் கர்த்தர் ஆபிரகாமிடத்தில் மாம்ச சந்ததியை வெளியே அனுப்ப கூறுகிறார். அதுமட்டுமல்ல இங்கு நாம் பார்க்கும் போது கர்த்தர் இஸ்ரவேலுக்கு ராஜாவாக சவுலை அபிஷேகம் பண்ணி, பின்பு அவனுடைய கீழ்படியாமையும், பொறாமையினிமித்தமாக பொல்லாத ஆவியை அவனுக்குள் அனுப்புகிறார். அதுமட்டுமல்லாமல் தாவீதையும் இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார். முந்தின சில தினங்களாக இதனை நாம் தியானித்துக்கொண்டிருக்கிறோம். இதனை உலக கிரியைகள் என்று நாம் நினைக்காமல் நம் உள்ளத்தில் இருக்கிற போராட்டத்திற்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருந்தால் பொல்லாத ஆவியும், அவர் சத்தத்திற்கு கீழ்படியும் போது கர்த்தரின் ஆவியும் ஊற்றப்படுகிறது. எப்படியெனில் பொல்லாத ஆவி நம்மில் எழும்பும் போது, கர்த்தருடைய ஆவியானவர், அவருடைய வீணையினாலும், தம்புருவினாலும், சுரமண்டலத்தினாலும் தேவனை மகிமைப்படுத்தும் போது பொல்லாத எண்ணங்கள் நம்மை விட்டு மாறிப்போகும். இந்த பொல்லாத ஆவி நம் ஆத்துமாவை அழிக்கும் படி வகை தேடும். ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அதன் கையில் நம்மை ஒப்புக்கொடுப்பதில்லை. கர்த்தருடைய ஆவியானவர் தான் நம்முடைய உள்ளத்தில் எழும்பும் பெலிஸ்திய கிரியைகளை அழிப்பவர். சத்திய ஜீவிதம் இல்லாத சவுலின் ஆவியால் வெற்றியெடுக்க முடியாது; அது எப்போதும் நம்மை போராட்டத்திற்குள்ளாக்கும்.
மேலும் தவறான எண்ணம் உள்ளத்தில் கர்த்தரின் ஆவி உள்ளவர்களுக்கு விரோதமாக எழுப்பிக் கொண்டிருக்கும். அப்படிதான் தாவீது யோனத்தான் என்பவர்கள் சவுலுக்கு விரோதமாக எதையும் சிந்திக்கவிலலை, அவர்கள் தப்பிக்கொள்ள வகைதேடினார்களேயல்லாமல் சதி செய்ய விரும்பவில்லை; ஆனால் பொல்லாத ஆவி உள்ள சவுல் அவர்களை சதிக்கும்படியாகவே எண்ணங்கொள்கிறான். இப்படியே நமக்கு விரோதமாக யாராவது மறைவாகவோ, வெளிப்படையாகவோ சதி தீட்டுகிறார்கள் என்றால் அவர்கள் கிறிஸ்துவின் ஆவி உள்ளவர்கள் அல்ல என்பதனை நிரூபித்துக்கொண்டு வாழ்வில் கவனமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும் நம் உள்ளத்தில் இரண்டு கிரியைகளுக்கு இடம் கொடாதபடி முழுமையும் பரிசுத்தமான வாழ்வை தெரிந்து நல் ஆவி பெற்று கொள்ள வேண்டும். மேலும் நல்ல ஆவி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வரும் நிலைமையை குறித்து வருகிற நாட்களிலே கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம். ஆதலால் நாம் நல்ல ஆவியை பெற்று கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழ ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.