தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கலாத்தியர் 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவை தரிக்க வேண்டும், அப்போது சத்துருவின் கையில் கர்த்தர் நம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் ஏதோமிய கிரியைகள் வராமல் பாதுகாத்துக்கொள்ள வண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 23:1-14
இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.
ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.
அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
கேகிலா பட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான்.
தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
மேற்கூறிய வசனங்களில் சவுலால் தோவேக்கைக்கொண்டு கொல்லப்பட்டவர்களில், தப்பி தாவீதினிடத்தில் ஓடிவந்த அபியத்தாருக்கு தாவீது ஆதரவுக் கொடுக்கிறான். இவ்விதம் இஸ்ரவேலருக்குள் ஒற்றுமை குறைச்சல் இருக்கிறதை கண்ட பெலிஸ்தர் கேகிலாவின் மேல்யுத்தம் பண்ணி களஞ்சிங்களை கொள்ளயிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது தாவீது கர்த்தரிடத்தில் நான் போய் பெலிஸ்தியரை முறியடிக்கலாமா என்று விசாரிக்கிறான்; அதற்கு கர்த்தர் நீ போய் பெலிஸ்தியரை முறியடித்து கேகிலாவை இரட்சிப்பாயாக என்றார். அதற்கு தாவீதின் மனுஷர் நாங்கள் யூதாவிலே இருக்கும் போதே பயப்படுகிறோம்; அப்படியிருக்க நாங்கள் பெலிஸ்தியருடைய சேனைகளை எதிர்ப்பதற்கு கேகிலாவுக்கு போனால் எவ்வளவு அதிகம் என்றபோது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரவாக: நீ எழும்பி கேகிலாவுக்கு போ, நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றான். அப்படியே தாவீது தன் ஜனத்தைக் கூட்டிக்கொண்டு கேகிலாவுக்கு போய் பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணி, அவர்களில்அநேகம் பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிகொண்டு போனான். இவ்விதமாக கேகிலாவின் குடிகளை கர்த்தர் தாவீதைக்கொண்டு இரட்சிக்கிறார். அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பி ஓடி போகும் போது அவன் கையில் ஒரு ஏபோத் இருந்தது. தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுல் அறிந்த போது, கர்த்தர் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும், தாழ்ப்பாள்களுள்ள பட்டணத்தில் பிரவேசித்ததினால் அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி; தாவீதையும், அவன் மனுஷரையும் முற்றுகைப்போடும் படி கேகிலாவுக்கு யுத்தத்திற்காக தன் ஜனத்தை அழைக்கிறான். தாவீது சவுலின் பொல்லாப்பைககுறித்து அறிந்துக்கொண்டபோது; ஆசாரியனாகிய அபியத்தாரிடம் இருந்த ஏபோத்தை கொண்டுவர சொல்லி, சவுல் கேகிலாவுக்கு வருவானோ என்று கர்த்தரிடத்தில் கேட்டதற்க்கு வருவான் என்றார். பின்பு தாவீது கர்த்தரிடத்தில் என்னையும் என் ஜனத்தையும் கேகிலா பட்டணத்தார் பெலிஸ்தியரின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று கேட்டதற்கு கர்த்தர் ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். ஆகையால் தாவீது, தன் ஜனங்களில் ஏறக்குறைய அறுநூறு பேரோடுக்கூட கேகிலாவை விட்டு புறப்பட்டு போகவேண்டிய இடத்துக்கு போனார்கள். அந்த காரியம் சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான்.
பின்பு தாவீது 1சாமுவேல் 23:14
தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கூறப்பட்டவைகள் பிரகரம் வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலத்திலே தங்கி, சீப் ஒரு மலையிலே தரித்திருந்தான். சவுல் அனுதினம் அவனை தேடியும் கர்த்தர் தாவீதை சவுலின் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
பிரியமானவர்களே, நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் கர்த்தரின் சபைக்குள் சாத்தான் பிரிவினைகளைக் கொண்டுவருவான் என்பதற்கு, சவுலும் தாவீதும் நமக்கு திருஷ்டாந்தம். இதற்கு காரணம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படியாமையும்,உள்ளத்தில் எழும்புகிற பிசாசின் செயலால் வருகிற பொறாமை தான் என்பதனை தெரிந்துக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த காரணத்தாலும் கர்த்தரிடம் கேட்காமல் எதையும் செய்ய முன் வரக்கூடாது. ஏனென்றால் சத்துரு நம்மை எப்போது விழுங்கலாம் என்று வகை தேடுவான். அவ்விதம் தாவீதை சவுல் பின் தொடருகிறான். அல்லாமலும் கேகிலா பட்டணத்தை இரட்சிக்கும் படிக்கு கர்த்தர் தாவீதை உபயோகிக்கிறார். என்னவென்றால் பெலிஸ்திய ஆவி மக்களின் உள்ளத்தை வஞ்சித்து சத்தியத்தை விட்டு மாற்றி பாதாளத்தில் தள்ளிப்போடும்படியாக, சபைக்குள் வருகிற பிரிவினையை உபயோகப்படுத்தி சத்தியத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறவர்களை வைராக்கியம் செய்ய வைத்து கீழே தள்ளி போடுவான். இவ்விதமாக அநேகர் விழுந்து விடுகிறார்கள். மேலும் கேகிலா இரட்சிப்புக்கேற்ற இடமாக இருக்கிறதால், பெலிஸ்தியன் அங்கு உள்ள களஞ்சியங்களை கொள்ளயிடுவதற்கு நினைக்கிறான். ஆனால் கர்த்தர் தாவீதை கொண்டு கேகிலாவை இரட்சித்து, அந்த சபை தேவனுக்கு முன்பாக கொண்டு வரப்படுகிறது. ஆனால் கேகிலா பட்டணத்தாரும் தாவீதை சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று கர்த்தர் தாவீது கேட்டதற்கு பதில் சொன்னதால் தாவீது சீப் என்னும் வனாந்தரமான ஒரு மலையிலே தரித்திருந்தான். சீப் வனாந்தரத்திரம் என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு திருஷ்டாந்தம். ஆதலால் சவுல் அனுதினம் தாவீதை தேடியும், கர்த்தர் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
அதை போல் நாம் கிறிஸ்துவை தரித்திருந்தால் கர்த்தர் நம்மை எந்த சத்துருவின் கையிலும் ஒப்புக்கொடுக்கமாட்டார். கிறிஸ்துவை தரித்தல் என்பது ஞானஸ்நானம். இப்படியாக நாம் கிறிஸ்துவை தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.