தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர்  12:21

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், நமக்கு எதிராக வருபவர்கள் மேல் பொறாமைக்கொள்ளாதபடி அவர்களோடு நாமாகவே ஒப்புவாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் மற்றவர்களை ஒரு போதும் குற்றபடுத்தாதபடி நம்முடைய இருதயத்தை நாம் சுத்தமாக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 24:13-22 

முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.

இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?

கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,

தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.

நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.

ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.

நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான்.

அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சவுல் தாவீதை துரத்தி வரும்போது, இருவரும் சந்தித்த ஒரு இடத்தில் வைத்து தாவீது  சவுலிடத்தில் ஒப்புரவாகலாம் என்று நினைத்த சவுலிடம் சொன்னது கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து  கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியை சரிகட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. மேலும் தாவீது சொன்னது முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்தில் ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை; ஆகாமியம்  என்றால் என் உதடுகளுக்கு அருவருப்பானது என்று கர்த்தருடய வார்த்தை; அல்லாமலும் தான் ஒரு செத்த நாய் என்றும், தெள்ளுப்பூச்சி என்றும்; இஸ்ரவேலின் ராஜா தன்னை துரத்துவது அவசியமில்லை என்றும்; கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து எனக்காக வழக்காடி,நான் உம்முடைய கைக்கு என்னை தப்புவித்து விடுவிப்பாராக என்ற போது; சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே,  இது உன் சத்தமல்லவா என்று  சத்தமிட்டு அழுது, தாவீதை பார்த்து; நீ என்னை பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய் நானோ தீமை செய்தேன்.  மேலும் சவுல் சொன்னது; நீ எனக்கு செய்த நன்மையை இன்றைக்கு விளங்க பண்ணினாய்.  கர்த்தர் என்னை உன் கையில்  ஒப்புக்கொடுத்திருந்தும் நீ என்னை கொன்று போடவில்லை.  ஒருவன் தன் மாற்றானை கண்டுபிடித்தால் சுகமாக விடமாட்டான்; ஆனால் நீ இன்று எனக்கு செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.  நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும்;  இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைப்படும் என்றான். அதுமட்டுமல்லாமல் எனக்கு பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்து போடுவதில்லை என்றும், கர்த்தர் பேரில் ஆணையிட சொன்னதற்கு தாவீது ஆணையிட்டு கொடுக்கிறான்.  பின்பு சவுல் தன் வீட்டிற்கு போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்குப் போனார்கள்.

பிரியமானர்களே மேற்கூறப்பட்டவைகளின் கருத்துக்கள் என்னவென்றால் யார் நமக்கு விரோதமாக எழும்பினாலும், அவர்களிடத்தில் நமக்கு ஆதரவு கிடைக்க வேண்டுமானால் நம்மை மிகவும் அவர்களுக்கு முன்பாக  தாழ்த்தி கொடுக்கும் போது அவர்கள் உள்ளம் நொறுங்குதலடையும்.  அதனால் தான் கர்த்தர் சொல்கிறார் உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால் அவனுக்கு பானங்கொடு; நீ இப்படி செய்வதினால் அக்கினிதழலை அவன் தலையின் மேல் குவிப்பாய் என்று ரோமர் 12:20-ல் கூறுகிறார். இவ்விதமாக தாவீது சவுலிடத்தில் ஆதரவு பெற்றுக்கொள்கிறான். இவ்விதமாக நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.