தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சத்திய சபையை பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், நமக்கு எதிராக வருபவர்கள் மேல் பொறாமைக்கொள்ளாதபடி நாமாகவே ஒப்புரவாக வேண்டுத் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 25:1-9
சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,
அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட சாமுவேல் மரணமடைகிறான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடி அவனுக்காக துக்கம் கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளைவிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது எழுந்து பாரான் வனாந்தரத்திற்கு புறப்பட்டு போனான். மகாப்பாரி குடித்தனக்காரனாகிய ஒரு மனுஷன் மாகோனிலே இருந்தான். அவனுடைய தொழிற்துறை கர்மேலில் இருந்தது. அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது. அவன் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். அந்த மனுஷனுடைய பெயர் நாபால், அவனுடைய மனைவியின் பெயர் அபிகாயில். அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும், ரூபவதியுமாயிருந்தாள். ஆனால் அவள் புருஷனாகிய நாபால் முரடனும், துராகிரதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான். தாவீது வனாந்தரத்தில் இருந்த போது நாபால் கர்மேலில் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிறான் என்ற செய்தியை கேள்விப்பட்டு வாலிபரில் பத்துபேரை அழைப்பித்து, அவர்களிடம் நீங்கள் கர்மேலுக்கு நாபாலிடத்தில் போய் என்பேரை சொல்லி; அவன் சுகசெய்தியை விசாரித்து, அவனுக்கு வாழ்த்துதல் சொல்லும்படியாக, உமக்கு சமாதானம், உம்முடைய வீட்டுக்கு சமாதானமும் , உமக்கு உண்டான யாவற்றிற்கும் சமாதானம் சொல்லி வாழ்த்துங்கள். அதன் பின்பு தாவீது சொல்ல சொன்னது; இப்பொழுது மயிர் கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் உண்டு என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடுக்கூட இருந்தார்கள். அவர்கள் எங்களோடு கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தபடுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற் போனதும் இல்லை. உம்முடைய வேலைக்காரரை கேளும், அவர்கள் எல்லாம் உம்மிடத்தில் சொல்வார்கள். ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களில் தயை கிடைக்க வேண்டும். நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறான். அவ்விதமே அந்த வாலிபர்கள் சொல்லி பினனொன்றும் பேசாதிருந்தார்கள்.
ஆனால் நாபால் சொன்ன மறுபடி 1சாமுவேல் 25:10-12
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.
தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளையெல்லாம் அந்த வாலிபர்கள் போய் தாவீதினிடம் அறிவித்தார்கள்.
பிரியமானவர்களே நமக்கு திருஷ்டாந்தமாக முன்கூறபட்டவைகளை காட்டுகிறார். இஸ்ரவேலரில் ஒரு பகுதி வேறே இடத்தில் நாபாலின் கருத்துகளோடு கர்த்தரை தொழுதுகொள்ளுகிறதால் தாவீது அதனை அறிந்து, கிறிஸ்துவாகிய ஒரே சபையாக, ஒரே ஆவியில் ஆராதிக்கும்படி ஒன்றிணைக்கும்படியாக அங்குள்ள பத்து கர்த்தரின் ஊழியக்காரரை அனுப்பி காரியங்களை சொல்லி கேட்கிறான். நாபால் முரடனும், துராகிருதனுமாயிருக்கிறான். அப்படியிருந்து கர்த்தரின் சபையை நடத்தினால் கர்த்தரின் ஆவி அவர்களிடம் இராது, ஒரே கர்த்தரின் உபதேசம் அவர்களுக்குள் வராது என்பதற்காக தாவீது தன் ஊழியக்காரரை அங்கு அனுப்புகிறதை பார்க்கிறோம். ஆனால் நாபாலிடம் இருககிறவர்கள் வேலைக்காரர்கள், என்றால் கர்த்தரின் வேலை செய்கிறவர்கள். ஆனால் தாவீது அனுப்பினவர்கள் ஊழியக்காரர்கள், கர்த்தரை ஆராதிக்கிறவர்கள். ஆதலால் ஊழியக்காரர்களுக்கு வேலைக்காரர்கள் வேண்டும் ஆகையால் சொல்லி அனுப்புகிறான் ஆனால் அவன் தாவீதை ஏளனமாக பேசி, வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுகிறான்.
ஆதலால் பிரியானவர்களே நம் உள்ளம் கிறிஸ்துவின் சபையை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாபாலை போன்றவர்களிடத்தில் போய் சிக்கிக்கொள்ளாதபடி தங்களை காத்துக்கொளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.