தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசெயர் 2:2  

அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பழைய பாவ பழக்கவழக்கங்களை விட்டு, கிறிஸ்துவின் அன்பில் கட்டபட்டு இணைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சத்திய சபையை பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 25: 13 - 17

அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.

அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.

அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.

நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.

இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் உள்ளபடி தாவீது தன் வாலிபரிடம் சொல்லியனுப்பியவைகளை சவுல் கேட்காமல் அவர்களை திருப்பி அனுப்பியதால், தாவீது யுத்தத்திற்கு புறப்படும்படி ஆயத்தமாகிறான்.  ஆதலால் தன் மனுஷரைப் பார்த்து அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றப்போது அவர்கள் தங்கள் பட்டயத்தை கட்டிக்கொண்டார்கள்;  தாவீதும் தன் பட்டயத்தை கட்டிக்கொண்டான்.  தாவீது ஏறக்குறைய நானூறு பேரோடே யுத்தத்திற்கு புறப்பட்டான்; இருநூறு பேர் தங்கள் ரஸ்துக்களண்டையில் இருந்து விட்டார்கள்.  அப்போது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.  ஆனால் அந்த மனுஷர் எங்களுக்கு மிகவும் உபகாரிகளாகயிருந்தார்கள்; நாங்கள் வெளியில் இருக்கும் போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் குறைவானதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்தபோது இரவும் பகலும் அவர்கள் எங்களை சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். வேலைக்காரன் அபிகாயிலிடம் சொல்வது; இப்போதும் நீர் செய்யவேண்டியதை கவனித்து பாரும். நம்முடைய எஜமான் மேலும். அவர் வீட்டார் யாவர் மேலும் ஒரு பொல்லாப்பு நிச்சயமாய் வருகிறதாயிருக்கிறது; இவரோ தம்மோடே பேசக்கூடாதபடிக்கு பேலியாளின் மகனாயிருக்கிறார். 

அபிகாயிலோ தீவிரமாய் செய்த காரியம் 

1சாமுவேல் 25:18,19  

அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,

தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

மேற்கூறப்பட்ட காரியங்களை அபிகாயில் நாபாலுக்கு தெரியாமல் கழுதையின் மேல் ஏறி மலையின் மறைவில் இறங்கி வருகையில் தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்;அவர்களை சந்தித்தாள்.  

பின்பு தாவீது தன் ஜனங்களை நோக்கி சொன்னது 

1சாமுவேல் 25:21,22

தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.

அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.

அப்பொழுது அபிகாயில்  தாவீதை காண்கையில் தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து; தன் புருஷனாகிய நாபாலின காரணமாக வந்த பாதகம் என்மேல் சுமரட்டும். உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக, உம்முடைய அடியாள் மீது செவிகேட்க பேசட்டும்.  

பின்னும் அபிகாயில்  சொன்னது 

1சாமுவேல் 25:25-31 

என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.

இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.

இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.

உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.

உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.

கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது,

நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.

மேற்கூறிய கருத்துக்களை நாம் தியானிக்கும் போது அபிகாயில் மகா புத்திசாலியும், செளந்தரியவதியுமாயிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து ஆண்டவனே என்று அழைக்கிறாள், மற்றும் தாவீதை ஆசீர்வதிப்பதையும், நாபாலை சபிப்பதையும் பார்க்கிறோம். 

மேலும் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது, என்னவென்றால் கிறிஸ்துவின் ஒரே உபதேசத்தில் ஜனங்கள் கர்த்தரை தேடும்படி தாவீது நினைத்ததை நாபால் ஒத்துக்கொள்ளாத காரணத்தால், நாபாலின் வேலைக்காரன் அவன் மனைவியாகிய அபிகாயிலிடம் தாவீது யுத்தத்திற்கு ஆயத்தபடுவதை குறித்து சொல்லவும், அபிகாயில் நாபாலை அறியாமல் தாவீதுக்கு தேவையான பொருட்களோட கூட  மலையின் மறைவிலிருந்து இறங்கி வருகிறாள். அந்த பொருட்கள் என்னவென்றால் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணபட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும் வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சகுலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பட அடைகளையும் எடுத்து கழுதைகளின் மேல் ஏற்றி வருகிறாள்.  இவை என்னவென்றால்  மணவாட்டி சபைக்குரிய ஆசீர்வாதங்களுக்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். எப்படியெனில் கிறிஸ்துவோடு இணைக்கப்பட வேண்டுமானால் பழைய பாவ வாழ்க்கையாகிய நாபாலை போன்ற பாவ பழக்கவழக்கங்கள் விட்டு விட்டு கர்த்தராகிய இயேசுவை பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். அல்லாமலும் கர்த்தரண்டையில் சேரும்படி விருப்பமில்லாமல் இருப்போமானால் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து நம்மை பாவ பிடியினின்று விடுதலையாக்கி இரட்சிக்கிறவர் என்பதனை அறிந்துக் கொண்டு, எப்போதும் கர்த்தரோடுகூட வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.