தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 16:4 

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் அபிஷேகிக்கப்பட்டு அந்நிய கிரியைகளை நிர்மூலம் பண்ணவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பழைய பாவ பழக்கவழக்கங்களை விட்டு, கிறிஸ்துவின் அன்பில் கட்டபட்டு இணைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 25:32-38 

அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.

நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

பொழுது விடிந்து, நாபாலின் வெறிதெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.

கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.

மேற்கூறிய வசனங்களில் எழுதப்பட்டவைகள் என்னவென்றால்  நாபாலின் மனைவியாகிய அபிகாயில் தாவீதை ஆசீர்வதித்த பின்பு, தாவீது அபிகாயிலை நோக்கி உன்னை இன்றைய தினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.  பின்பு அவன் சொன்னது நீ சொன்ன யோசனை  ஆசீர்வதிக்கபடுவதாக.  என்னவெனில்  தாவீது இரத்தம் சிந்தாதபடிக்கும், அவன்  கை பழிவாங்காதபடிக்கும் அவள் தடைபண்ணினபடியால் அவளை குறித்தும் ஆசீர்வதிக்கபடுவாயாக என்கிறான்.  இதனை திருஷ்டாந்த படுத்துவது எதற்கென்றால் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சபையை ஆசீர்வதிக்கிறவர்களாக வேண்டும்.    ஆனால் தாவீது நாபாலைக் குறித்து அபிகாயிலிடம் சொன்னது  அவள் தாவீதை தீவிரமாய் சந்திக்க போகாமல் இருந்திருந்தால் நாபாலுக்கு ஒரு நாயாகிலும் மீதியாக உயிரோடே வைக்கப்படுவதில்லை என்றும், அபிகாயிலுக்கு பொல்லாப்பு செய்யாதபடிக்கு காத்துக்கொண்டார் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக் கொண்டு சொல்கிறேன் என்று சொல்லி  அவள் தாவீதுக்கு கொண்டு வந்ததை கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து  நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்கு போ; நான் உன் முகத்தை பார்த்து உனக்கு இப்படி செய்தேன் என்றான்.  அபிகாயில் நாபாலிடம் வந்த போது ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டில் நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் இரவு முழுதும் வெறித்திருந்த காரணத்தால் அவள் சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் ஒன்றும் அவனுக்கு அறிவிக்கவில்லை.  பொழுது விடிந்து நாபால் வெறித்தெழிந்து எழுந்திருந்தபோது வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தபோது அவனுடைய இருதயம் அவனுக்குள்ளே செத்து கல்லைபோலாயிற்று.  கர்த்தர்  நாபாலை வாதித்ததினால் பத்து நாளுக்கு பின்பு அவன் செத்தான். 

நாபால் செத்து போனான் என்று அறிந்த தாவீது சொன்ன வார்த்தையாவது 

1சாமுவேல் 25:39 

நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில்  தான் பொல்லாப்பு செய்யாதபடி தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தேவனை மகிமைபடுத்துகிறான்.  அல்லாமலும் அவன் சொன்னது நாபால் செய்த பொல்லாப்பை அவன் தலையின் மேல் திரும்ப பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம் பண்ணுகிறதற்கு பேசுவதற்காக ஆட்களை அனுப்புகிறான்.  

தாவீதின் ஊழியகாரர் கர்மேலில் இருக்கிற  அபிகாயிலிடத்தில் விவாகத்தின் காரியங்களை குறித்து சொன்னபோது அவள் மறுக்காமல் 

1சாமுவேல் 25:41-44 

அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.

யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.

சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.


பிரியமானவர்களே, அபிகாயிலை தாவீது விவாகம் பண்ணுவது அந்நிய புருஷர்களாகிய தெய்வங்களின் கிரியைகளை அழித்து, கர்த்தரின் ஆவியினால் அபிஷேகிக்கபட்டவர்களை கர்த்தர் வேறுபடுத்தி கிறிஸ்துவாகிய மணவாளனோடு மணவாட்டியை சேர்த்துக்கொள்கிறார் என்பதனை கர்த்தர் நமக்கு தெளிவுப்படுத்துகிறார்.  ஆதலால் நாமும் கிறிஸ்துவின் ஆவியால் அபிஷேகிக்கபட்டு மணவாளனாகிய கிறிஸ்துவோடு கூட மணவாட்டி சபையாக சேர்க்கபட்டவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.