தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 105:15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் அபிஷேகம் பண்ணினவர்களுக்கு விரோதமாக ஒரு நாளும் தீங்கு நினைக்கக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் அபிஷேகம்பண்ணபட்டு, அந்நிய கிரியைகளை அழிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானி்த்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 26:1-13
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
அப்பொழுது சவுல்: சீப் வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,
தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.
பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்.
தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.
பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய,
நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.
தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுபோனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள்.
தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே,
மேற்கூறப்பட்ட பகுதிகளை வாசிக்கும் போது தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலா மேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் சீப் ஊரார் செய்திக்கொடுக்கிறார்கள். சவுல் சீப் வனாந்திரத்திலே சவுலை தேடும்படி எழுந்து இஸ்ரவேலிலே தெரிந்துக்கொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடும் கூட புறப்பட்டு போகிறான். பின்பு சவுல் ஆகிலா மேட்டில் பாளயமிறங்குகிறான். ஆதலால் சவுல் தன்னை தொடர்ந்து வருகிறதை தாவீது கண்டு, வேவுக்காரரை அனுப்பி தொடர்ந்து வருகிறது நிச்சயம் தான் என்று அறிந்துக்கொண்டு, தாவீது எழுந்து சவுல் பாளயமிறங்கின இடத்திற்கு போய் சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேராகிய அவன் படைதலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தை பாரத்தான். சவுல் இரதங்களிலிருக்கிற இடத்தில் படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனை சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள். தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயியையும் பார்த்து என்னோடே கூட சவுலினிடத்திற்கு பாளயத்திற்கு இறங்கி வருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய் நான் வருகிறேன் என்றான். அவ்விதம் தாவீ்து போகும் போது சவுல் இரதங்களிலிருக்கிற இடத்தில் நித்திரையாயிருந்தான்; அவன் தலைமாட்டில் அவன் ஈட்டி குத்தியிருந்தது; அவனை சுற்றிலும் அப்னேரும் அவன் ஜனங்களும் படுத்திருக்கிறதை கண்ட அபிசாய் தாவீதினிடத்தில் இன்று உன் சத்தருவை உன் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை இரண்டு குத்தாக அல்ல; ஒரே குத்தாக நிலத்தில் உருவ குத்தட்டுமா என்று கேட்டான். அப்பொழுது தாவீது அபிசாயிடம் அவரை கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர் மேல் கைபோட்டு குற்றமில்லாமல் போகிறவன் யார் என்றான். பின்பு தாவீது அபிசாயிடம் சொன்னது; கர்த்தர் அவனை அடித்து அல்லது அவருடைய காலம் வந்து மரித்து அல்லது யுத்தத்திற்குப்போய் மாண்டலொழிய நான் என் கையை கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு கர்த்தர் என்னை காக்ககடவர் என்று சொல்லி இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், செம்பையும் எடுத்துகொண்டு போவோம் என்று சொல்லி எடுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் இந்த காரியத்தை யாரும் அறியவில்லை, யாரும் விழித்துக்கொள்ளவுமில்லை. கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரைக் கொடுத்திருந்ததால் அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள்.
பின்பு தாவீது அப்னேரை கூப்பிட்டு 1சாமுவேல் 26:14-16
ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.
அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.
நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொல்ல சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்து
1சாமுவேல் 26:17
அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,
அதற்கு தாவீது 1சாமுவேல் 26:18-20
பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?
இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய், அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே.
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.
மேற்கூறபட்ட வார்த்தைகளை தாவீது சொல்ல சவுல் சொன்னது
1சாமுவேல் 26:21
அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளினால் சவுல் இரண்டாம் விசை தாவீதிடம் உடன்படிக்கை செய்த போது தாவீது சொல்வது
1சாமுவேல் 26:22-24
அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும்.
கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளினால் தாவீது சவுலிடத்தில் தன்னுடைய ஜீவன் கர்த்தருக்கு அருமையானது என்றதால் எல்லா உபத்திரவங்களுக்கும் என்னை நீங்கலாக்கி விடுவாராக என்றான். அதற்கு சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கபட்டவன். நீ பெரிய காரியங்களை செய்வாய்; மென்மேலும் பலப்படுவாய்; என்று சொல்லி தாவீது தன் வழியே போனான். தாவீதும் தன் ஸ்தானத்திற்கு போனான்.
பிரியமானவர்களே இதன் கருத்துக்களை பார்க்கும் போது நம்மிலும் அநேகர் கர்த்தரால் அபிஷேகிக்கபட்டு, பின்பு அவர் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் இருப்பதால் பொல்லாத ஆவிகளால் சிக்குண்டு கர்த்தருக்கு விரோதமான காரியங்களை செய்து, அவர்களை எப்போதும் வாக்காலும் செய்கையாலும் துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள்.. அவ்விதம் இருக்கும் போது கர்த்தரால் எச்சரிக்கப்பட்டு, அப்போது அவர்கள் மனந்திரும்பி பின்பு கர்த்தரிடத்தில் ஒப்புரவாகி உடன்படிக்கை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் சவுலை போல அதனை நினைக்காமல் மீண்டும் கர்த்தருக்கு விரோதமாக அவருடைய ஜனங்களுக்கு விரோதமாக செயல்ப்படுவார்கள். மீண்டும் கர்த்தருடைய எச்சரிப்பை பெற்றுக்கொண்டு தாங்கள் ஸ்தானத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் சமாதானம் கிடைக்காது. நாம் பார்க்கும் போது கர்த்தர் தாவீதிடத்தில் சவுலை ஒப்புக்கொடுக்கும்படியாக சமயங்களை வாய்க்கப்பண்ணி தாவீதை சோதித்தறிகிறார். ஆனால் தாவீது இந்த இடத்திலும் அபிஷேகிக்கபட்டவர் மேல் கைபோடாதபடி கர்த்தர் என்னை காத்துக்கொள்வாராக என்றான். இது நமக்கு காட்டிய திருஷ்டாந்தம். என்னவென்றால் நமக்குள் அபிஷேகிக்கபட்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆதலால் நம்முடைய வாழ்வில் எப்போதும் ஜாக்கிரதையாய் கிறிஸ்துவின் கிருபையை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.