தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 11:17

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சத்துருக்களை ஜெயிக்கவேண்டுமானால், கிறிஸ்துவின் கிருபைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்டவர்களுக்கு விரோதமாக ஒரு நாளும் தீங்கு நினைக்கக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 27: 1 – 12 

பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

அங்கே தாவீதும் அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.

தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.

தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.

அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர்மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப் போனார்கள்; சூருக்குப் போகிற எல்லை துவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே.

தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.

இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும் கேனியருடைய தென்திசையிலும் என்பான்.

இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டுவராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.

ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.

மேற்கூறிய வசனங்களில் நாம் தியானிப்பது என்னவென்றால் தாவீது தன் மனதில் யோசிக்கிற காரியம் என்னவென்றால்; நான் எந்த ஒரு நாளிலாகிலும் சவுலின் கையினால் மடிந்து போவேன்; இனி சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாகிலும் என்னை கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தியரின் தேசத்திற்கு போய் தப்பித்து கொள்வதை பார்க்கிலும் வேறில்லை என்று யோசிக்கிறான்.  அவ்விதம் அவன் யோசித்து மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் தன்னோடிருந்த அறுநூறுபேரோடேங்கூட போய் சேர்ந்தான்.    அங்கே தாவீதோடுகூட அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீஸிடத்தில்  தங்கியிருந்தார்கள்.  பின்பு சவுல் தாவீது காத் பட்டணத்திற்கு ஓடி போனான் என்று அறிந்தபின்பு அவன் தாவீதை தேடவில்லை.  ஆனால் தாவீது ஆகீஸிடம் உம்முடைய கண்களில் எனக்கு தயை கிடைக்குமானால், நான் வாசம் பண்ணும்படி, நாட்டிலே உள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பேன் என்றான்.  அப்பொழுது ஆகீஸ் அன்றைய தினம் சிக்லாகை அவனுக்கு கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள்வரைக்கும் யூதாவின் ராஜாக்களை சேர்ந்திருக்கிறது.  தாவீது பெலிஸ்தியரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் தங்கியிருந்தார்கள்;  அங்கு தங்கியிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர் மேலும் படையெடுத்து போனார்கள்.  இவர்கள் தான் பூர்வ காலம் முதல் சூருக்கு போகிற எல்லை துவக்கி எகிப்து தேசமட்டும் இருக்கிற  நாட்டிலே குடியிருந்தவர்கள்.  ஆனால் தாவீது அந்த நாட்டை கொள்ளயடிக்கிறபோது புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயரோடே வைக்காமல் ஆடுமாடுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு ஆகீடத்துக்கு திரும்பி வருவான்.  ஆனால் ஆகீஸ் இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று கேட்கும் போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும் கேனியருடைய தெனை திசையிலும் என்பான்  என்னவெனில் தாவீது இன்ன இன்னபடி தங்களுக்கு விரோதமான செய்தியை  அறிவிக்கதக்க ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்கு கொண்டுவராதபடிக்கு புருஷரையாகிலும், ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்.  அவன் பெலிஸ்தியரின் நாட்டு புறத்திலே இருந்த நாளெல்லாம் இவ்வண்ணமாகவே   செய்து வந்தான். ஆனால் ஆகீஸ் தாவீதை நம்பி  அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியகாரனாயிருப்பான் என்பான். 

பிரியமானவர்களே மேற்கூறிய வார்ததைகளின் கருத்துக்கள் என்னவெனில் சவுல் இரண்டுமுறை தாவீதிடம் ஒப்புரவாகினாலும் தாவீதுக்கு அவனிடத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தது; காரணம் என்னவெனில் சவுலிடத்தில் இருந்த கிருபையை அவன் இழந்துவிட்டதால் அவனுககுள் தேவ அன்பு பூரணப்படாமல் இருக்கிறதால் அவனில் பொறுமை இல்லாமலிருக்கிறது; அது மட்டுமல்ல அவனுக்குள் பொல்லாத ஆவி இருப்பதால் தாவீது,  சவுல் மனந்திரும்பினது போல் பேசினாலும் நம்பவில்லை.  இப்படி தான் நம்மிலும் அநேகர் மனந்திரும்பினோம் என்று அவர்கள் தங்களை திருப்திப்படுத்திக்கொள்வார்கள்;  அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை குற்றம் சொல்லியும், கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்டவர்கள் மேல் பொறாமையும் வஞ்சனையுள்ளவர்களுமாயிருப்பார்கள்.  இவ்விதம் நாம் யாரும் சவுலை போல் இல்லாமல்; தேவ அன்பில் பூரணப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சவுலின் கிரியைகள் பொல்லாதவைகளாக இருந்ததால் தாவீது அவனை நம்பாமல் பெலிஸ்தியர் தேசத்திற்கு தன்மனைவிகளும், தன்னுடைய மனுஷர்களுமாக போனதை பார்க்கிறோம்.  ஆனால் நாம் நினைக்கலாம் அவன் பின் மாறி போனான் என்றும்; ஆனால் அப்படியல்ல அவன் புத்திமானாய் ஆகீஸ் ராஜாவிடம் நடந்துக்கொண்டான்.  பெலிஸ்திய தேசத்திலும் போய் கர்த்தருக்கு சித்தமானதை செய்துக்கொண்டான்.  அது போல நாமும் புத்திமானாய் கிறிஸ்துவின் கிருபையில் இருப்போமானால் சத்துருவினிடத்திலிருந்து தப்பித்துக்கொள்வது மட்டுமல்லாமல் கர்த்தருக்கு சித்தமானதை செய்கிறவர்களாயிருந்து, கர்த்தர் நம்மூலம் தேசத்தில் மகிமைப்படுவார்.  இவ்விதம் வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.