தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லேவியராகமம் 20:6
அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் எந்த காரணத்தாலும் சவுலை போல குறி கேட்கவும், அஞ்சம் பார்க்கவும் நம் உள்ளத்தில் இடம் கொடுக்கக்கூடாது.
கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் சத்துருக்களை ஜெயிக்க வேண்டுமானால் கிறிஸ்துவின் கிருபைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 1சாமுவேல் 28:1-11
அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.
தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான்.
பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.
சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பி வரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.
மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்கு கூட்டினார்கள். அப்போது ஆகீஸ் தாவீதிடம், நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். அவ்விதம் ஆகாஸ் சொன்னதற்கு தாவீது ஆகீஸைப் பார்த்து உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்று சொன்னதற்கு, ஆகீஸ் தாவீதை நோக்கி: யுத்தத்திற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். ஆனால் சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப் போனான்: இஸ்ரவேலர் சாமுவேலுக்காக துக்கம் கொண்டாடி அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தை விட்டு துரத்தி விட்டான். பெலிஸ்தர் சூநேமிலே கூடிவந்து பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான். அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். ஆனால் சவுல் பெலிஸ்தர் பாளயமிறங்கியதை கண்டு பயந்து அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது. சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தரிடத்திலிருந்து எந்தவிதத்திலும், சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரோடு; அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயை தேடி விசாரித்து அங்கே போய், வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடுகூட இரண்டு பேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய் சேர்ந்து; அவளிடம் நீ அஞ்சனம் பார்த்து குறிசொல்லி நான் சொல்லுகிறவனை எழுப்பு என்று சொல்கிறான். அதற்கு அந்த ஸ்திரீ சவுலிடம் குறிசொல்லுகிறவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கினதை நீர் அறிவீரோ; என்னை கொன்றுப்போடும்படிக்கு எனக்கு கண்ணி வைக்கிறது என்ன என்றாள். பின்பு சவுல் அவளிடம் சொன்னது இந்த காரியத்தில் உனக்கு பொல்லாப்பு வராது என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று கர்த்தர் மேல் ஆணையிட்டான். இதனை கேட்ட ஸ்திரீ யாரை எழும்பி வர பண்ண வேண்டும் என்று கேட்கிறாள்; அதற்கு அவன் சாமுவேலை என்கிறான். ஆனால் 1சாமுவேல் 28:12
அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
மேற்கூறபட்ட வசனங்களில் சாமுவேல் எழும்பி வருகையில் அவனை கண்ட மாத்திரத்தில் அந்த ஸ்திரீ மகா சத்தமாய் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம் போக்கினீர்? நீர் தான் சவுலாச்சுதே என்றாள். அதற்கு ராஜா அவளைப் பார்த்து 1சாமுவேல் 28:13-14
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்
மேற்கூறிய வசனங்களில் சவுலிடம் அந்த ஸ்திரீ பூமிக்குள்ளிலிருந்து தேவர்கள் ஏறி வருகிறதை காண்கிறேன் என்னு சொல்ல; அவருடைய ரூபம் என்ன என்று சவுல் கேட்க சால்வையை போர்த்துக்கொண்டிருந்த ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் என்று சொல்ல ;அது சாமுவேல் தான் என்று சவுல் அறிந்துக்கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். பிரியமானவர்களே பெலிஸ்தர்கள் என்றால் விருத்தசேதனம் இல்லாதவர்கள். இஸ்ரவேல், உண்மையாக இருந்தால் பெலிஸ்தர்களுக்கு எவ்விதத்திலும் பயப்படவேண்டாம். ஆனால் சவுல் பெலிஸ்தர்கள் பாளயமிறங்கியிருக்கிறதைக் கண்டு பயப்படுகிறான். இதன் காரணம் யுத்தத்தை ஜெயிக்க தாவீது அங்கு இல்லை; அவன் காத் பட்டணமாகிய ஆகீஸிடத்தில் சவுலுக்கு பயந்து போய் விட்டான். ஆனால் அவன் ஆகாஸுக்கு தெரியாமல் அமலேக்கு கெசூரியர் கெஸ்ரியர் மேலும் ரகசியமாக படையெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தாவீதை இஸ்ரவேலரோடு யுத்தத்திற்கு அழைக்கிறான். சவுல், தான் கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு அவர் மறுபடி கொடுக்காமல் இருந்ததால், அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயை தேடுகிறான். என்னவெனில் கர்த்தரின் கட்டளைப்பிரகாரம் இஸ்ரவேலருக்குள் அஞ்சனம், குறிசொல்லுதல் இவ்வித துர் கிரியைகள் இருக்கக்கூடாது. ஆதலால் சவுல் இப்படிபட்டவர்களையெல்லாம் தேசத்தில் இராதபடி அகற்றி விடுகிறான். ஆதலால் அவன் விசாரித்து வேஷம் மாறி அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயினிடத்தில் போய் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படியாக சாமுவேலை எழும்பி வரபண்ணும்படி சொல்ல, பூமிக்குள்ளிலிருந்து சாமுவேல் சால்வையை போர்த்துக்கொண்டவனாக வருகிறான். இதனைப்போல அநேகருக்கு கர்த்தர் மறுபடிக்கொடுக்காவிட்டால் கர்ததரின் கட்டளையை மீறி தவறான துர் உபதேசத்திற்கு உள்ளத்தில் இடம் கொடுத்து தங்கள் வாழ்க்கையில் கெடுதி செய்துக்கொள்ளுகிறார்கள். இதனை திருஷ்டாந்தபடுத்துகிற காரியம் என்னவெனில் நம் உள்ளத்தை பெலிஸ்திய கிரியைகள் வஞ்சிக்கும்போது பலவிதமான உலகத்தின் இச்சைகளோடு பரஸ்திரீயானவள் கிரியை செய்வாள்; ஆனால் அநேகர் அதனை தவிர்க்க முடியாமல் விழுந்து போகிறதால் கர்த்தர் அவர்களை விட்டு மாறி போகிறார். அப்படியாக கர்த்தர் மாறி போகிறபடியால் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களாக குறிகேட்கவும், அஞ்சனம் பா்க்கவும் போய் கர்த்தரின் கிருபைகளை இழந்து விடுகிறார்கள். அவர்களால் சவுலை போல பின் கர்த்தரின் கிருபைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் ஆத்துமா மரண பாதாள அறைக்குள் விழுந்துவிடுகிறது. ஆனால் நாம் அப்படி செய்யாமல் கர்த்தரையே நம்பி வாழ்கிறவர்களாக மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.