தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஓசியா 6:1,2

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய சித்தத்தின் படி செய்து முழுமையான விசுவாசத்தில் வளருவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் எந்த காரணத்தாலும் சவுலை போல குறி கேட்கவும், அஞ்சனம் பார்க்கவும் நம் உள்ளத்தில் இடம் கொடுக்காதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

1சாமுவேல் 28:15-25 

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?

கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.

நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.

அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.

இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.

அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,

சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் பூமிக்குள்ளிலிருந்து ஏறி வந்த சாமுவேல், சவுலை நோக்கி: நீ என்னை எழும்பி வரபண்ணி, என்னை கலைத்தது என்ன என்று கேட்டான்.  அதற்கு சவுல் சொன்னது நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன். பெலிஸ்தர் எனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள்; தேவனும் என்னை கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினிலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை. ஆதலால் நான் செய்ய வேண்டியதை எனக்கு அறிவிக்கும்படி உம்மை அழைப்பித்தேன் என்றான்.  அதற்கு சாமுவேல் கர்த்தர் உன்னை விட்டு விலகி உனக்கு சத்துருவாய் இருக்கும் போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? கர்த்தர் என்னைக் கொண்டு சொன்னபடியே செய்து முடித்து , ராஜ்யபாரத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்தார்.  

மேலும் சாமுவேல் சொன்னது, 1சாமுவேல் 28:19 

கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

இந்த வசனத்தில் கர்த்தர் இஸ்ரவேலரை பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றும் நாளைக்கு நீயும், உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் பெலிஸ்தரின் கையில் ஒப்புக் கொடுப்பார் என்கிறான்.  இதனை கேட்டவுடனே சவுல் நெடி தாங்கிடையாய் தரையிலை விழுந்து; சாமுவேலின் வார்த்தைகளினாலே பயப்பட்டு இரவும் பகலும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியினால பலவீனமாயிருந்தான்.  அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் கலங்கியிருக்கிறதை கண்டு; அவனிடத்தில் உம்முடைய அடியாளாகிய,நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை கையிலே பிடித்துக்கொண்டு; நீர் எனக்கு சொன்ன வார்த்தைகளின் படி செய்தேன்.  இப்பொழுது நீர்,  நான் சொல்லும் என் வார்த்தைகளை கேளும், நான் உமக்கு முன்பாக வைக்கிற கொஞ்சம் அப்பம் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழி நடந்து போக தக்க பெலன் உமக்குள் இருக்கும்.  ஆனால் அவனோ தட்டுதல் பண்ணி,  நான் புசிக்கமாட்டேன் என்றான்.  அப்பொழுது அவன் ஊழியக்காரரும், அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்தி கேட்டுக்கொண்டதால், அவன் அவர்கள் சொற்கேட்டு தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.  அந்த ஸ்திரீ தன் வீட்டிலிருந்த கொழுத்த கன்றை தீவிரமாய் அடித்து, மாவெடுத்து பிசைந்து, புளிப்பில்லா அப்பங்களாக சுட்டு, சவுலுக்கும், அவனுடைய ஊழியக்காரர்களும் முன்பாக கொண்டு வந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து அந்த இராத்திரியிலே புறப்பட்டுப் போனார்கள்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட  கருத்துக்களை நாம் வாசிக்கும் போது சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததை பார்க்கிறோம். பெலிஸ்தர்கள் இஸ்ரவேலருக்கு விரோதமாக படையெடுத்து பாளயமிறங்குவது, நம் உள்ளத்தில் உலக கவலைகள், ஐசுவரியத்தின் மயக்கம், சிற்றின்பங்கள் எல்லாம் தாராளமாக வரும்; அப்படி இருந்தால் இஸ்ரவேலின் ராஜா தான், அந்த எண்ணங்களை நிர்மூலம் பண்ணி ஜெயம் எடுப்பார் என்பதற்காக திருஷ்டாந்தமாய் ராஜாவாக சவுல் அபிஷேகம் பண்ணபட்டான்.  ஆனால் கர்த்தர் அவனுக்கு கொடுத்த கிருபையை இழந்து விட்டான்.  பின்பு கர்த்தர் தாவீதை அங்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார்.  அவனும் சவுலின் உபத்திரவத்தால் பெலிஸ்திய நாட்டில் போகிறான்.  இப்போது மனுஷர்கள் யாரும் இதனை நிறைவேற்ற முடியாது என்பதனை கர்த்தர் நிரூபித்து இயேசு கிறிஸ்து ராஜாவாக தாவீதின் சிங்காசனத்தில் எல்லாவற்றிற்கும் எல்லாவுமாக வருகிறார்.  ஆனால் அவர் வருவதற்கு முன்பு கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை வைத்து பெலிஸ்தர்களோடு உள்ள யுத்தத்தை நடத்தி வருகிறார்.  இதே நேரத்தில் சாமுவேலுடைய மரணம் வந்து விட்டது.  அவர் இப்போது பூமிக்குள்ளிலிருக்கிறார்.  ஆனால் சவுலுக்கு கர்த்தர் எந்த உத்தரவும் கொடுக்காத காரணத்தால் அவன் மரித்து போன சாமுவேலை நாடுகிறான்.  ஆனால் சாமுவேல் மரித்தாலும், அவன் எழும்பி வந்த போதும், சவுலுக்கு தீர்க்கதரிசனம் சொல்கிறதை பார்க்கிறோம். இது கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு திருஷ்டாந்தம்; என்னவென்றால் அவர்கள் எப்படிபட்டவர்களாக இருந்தாலும், குறிப்பாக அஞ்ஞானிகளாக இருந்தாலும் அவரை விசுவாசத்தோடு கூப்பிட்டால் இயேசு எழுந்தருவார் என்பது நிச்சயம் நமக்கு காட்டிய ஆதாரம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்து பின்பு மூன்றாம் நாளில் எழுந்திருக்கும் போது, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய மரித்தவர்கள் உயிரோடு எழும்புகிறார்.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின்பு அவரை விசுவாசிக்கிறவர்கள் யாவருக்கும் உயிர்தெழுதலை நம் உள்ளத்தில் கட்டளையிடுகிறார்.  அப்போது நம் உள்ளத்தில் கிறிஸ்து எழுந்தருளி பொல்லாத பெலிஸ்திய கிரியைகளை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மில் இருந்து தீர்க்கதரிசனம் சொல்கிறார்.  அவர் தான் எல்லாவற்றையும் நடப்பிக்கிறவர் என்பதனை நாம் அறிந்துக்கொண்டு கர்த்தருக்கு பிரியமானபடி வாழ்ந்தால் கர்த்தர் நம்மையும் அவரோடுகூட உயிர்ப்பித்து எழுப்புகிறார்.  இவ்விதமாக நாம் யாவரும் அவர் பேரில் முழுமையான விசுவாசம் வளர ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.