தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 2:12
நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் தேவ கிருபையில் வளர்ந்து சத்துருவை ஜெயித்து பரிசுத்தத்தை காத்துக்கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய சித்தத்தின் படி செய்து முழுமையான விசுவாசத்தில் வளருகிறவர்களாக வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
1சாமுவேல் 29:1-5
பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.
அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.
அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடேகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
மேற்கூறப்படுகிற வசனங்களில் பெலிஸ்தர் இஸ்ரவேலோடே யுத்தம் செய்யும் படியாக ஆப்பெக்கிலே கூடிவர செய்தார்கள். இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும், ஆயிரமுமான சேவர்களோடே போனார்கள். தாவீதும் அவன் மனுஷரும் ஆகீஸோடே பின் தண்டில் இருந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் தாவீதையும், தாவீதோடே இருந்த மனுஷரையும் கண்டவுடனே, இந்த எபிரெயர் என்னத்திற்கு என்று கேட்டதற்கு ஆகீஸ் அவர்களிடம் சொன்னது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்த தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? அவன் சொன்னது இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இவனிடத்தில் ஒரு குற்றமும் கண்டுபிடிக்கவில்லை என்று சொன்னதற்கு பெலிஸ்தரின் பிரபுக்கள் அவனிடம் கடுங்கோபமாகி சொன்னது; தாவீதை ஆகீஸிடம் நீர் குறித்த இடத்திற்கு அனுப்பிவிடும். யுத்தத்தில் நமக்கு சத்துருவாயிராதபடிக்கு நம்மோடேகூட வரவேண்டியதில்லை என்றார்கள். பின்னும் அவர்கள் சொன்னது இவன் எதினாலே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா என்று கூறி, சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனை குறித்தல்லவோ ஆடி பாடினார்கள் என்று சொன்னார்கள்.
பின்பு ஆகீஸ் தாவீதை அழைத்து சொன்னது
1சாமுவேல் 29:6,7
அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொல்லி ஆகீஸ் தாவீதிடம் திரும்பி போய் விடு என்கிறான். அதற்கு தாவீது ஆகீசிடம் கேட்கும் காரியம் என்னவென்றால்
1சாமுவேல் 29:8
தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.
இப்படியாக தாவீது பேசின பின்பு ஆகீஸ் தாவீதுக்கு பிரதியுத்தரமாக
1சாமுவேல் 29: 9,10
ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக்கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
இந்த வார்த்தைகளை கேட்ட தாவீது அதிகாலையில் தன் மனுஷரை கூட்டிக்கொண்டு பொழுது விடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்கு திரும்பி போக புறப்பட்டான். பெலிஸ்தரோவென்றால் யெஸ்ரயேலுக்கு போனார்கள்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் இவையெல்லாம் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தியிருக்கின்றார்; எதற்கென்றால் நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைய நம்முடைய எண்ணங்கள் நல்லவைகளும், சுத்தமானவைகளும், தேவனுக்குரியவைகளுமாயிருக்க வேண்டும். ஆனால் பெலிஸ்தியர் எண்ணங்களோவென்றால் அவைகள் பொல்லாதவைகளும், உலகத்துக்கு உரியவைகளுமாயிருக்கிறது. எப்படியென்றால் உலகத்துக்குரிய மாம்ச கிரியைகள் அழித்து தான், ஆவிக்குரியவைகளை அணிந்துக்கொள்ள முடியம். ஆதலால் இந்த இரண்டும் உள்ளத்தில் பலமாக போராடும். இவ்விதமாக இருந்தால், கிறிஸ்துவின் கிருபையால் தான் நாம் உலகத்தை ஜெயிக்க முடியும். மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு உலகத்தை ஜெயிக்கிறார். அவ்விதம் உலகத்தை ஜெயிக்கும் போது பாதாளம் மரணம் இந்த இரண்டிலிருந்து ஜெயித்தெழும்புகிறோம் இவைகளை ஜலஸ்நானத்தால் மட்டும் ஜெயிக்கமுடியும்.
இதனைக்குறித்து, யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
மேலும் நாம் தியானிக்கையில் தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசுடன் கூட யுத்தத்திற்கு போனதை கண்டவுடன் பெலிஸ்திய பிரபுக்கள் அவனை ஏற்க மறுத்து ஆகீசுடன் அவனை திருப்பி அனுப்பிவிடும் என்று சொல்கிறார்கள். காரணம் தாவீது எபிரெயன் ஆனதால் இஸ்ரவேலருக்காக பெலிஸ்தருக்கு எதிர்த்து நின்றால் பெலிஸ்தியன் விழுந்து விடுவான் என்பதை நினைத்து அவர்கள் அவனை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறார்கள். ஏனென்றால் அவன் கர்த்தரின் ஆவியினால் அபிஷேகம் பெற்றவன். முன்பும் பெலிஸ்தியர்களை மடங்கடித்தான் என்பதனை தெரிந்து அவர்களோடு நிற்க அவர்கள் சம்மதிக்கவில்லை. ஏனென்றால் ஆகீசுக்கு அறியாத காரியம் பெலிஸ்தரின் எண்ணத்தில் இருக்கிறது.
இப்படி தான் பெலிஸ்திய கிரியை நம் உள்ளத்தில் பற்பல தோற்றங்களில் எழும்பும். தாங்கள் செய்வது தான் சரி என்று தங்களை திருப்திபடுத்திக் கொள்வார்கள். அப்படிபட்டவர்கள் தேவனுடைய கிருபைக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் தேவ கிருபையினால் சத்துரு அழிக்கபடுவான்.
ஆதலால் பிரியமானவர்களே தேவனுடைய கிருபையை இழந்து விட்டால் சத்துருவை தகர்க்க முடியாது. ஆதலால் நாம் எல்லாரும் தேவ கிருபையை பெற்று சத்துருக்களை ஜெயிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.