தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 2:42

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் பரிசுத்த வான்களின் ஐக்கியத்தில் காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் தேவ கிருபையில் வளர்ந்து சத்துருவை ஜெயித்து பரிசுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 30:1-9  

தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,

அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.

தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.

தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.

தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது தாவீதையும் அவன் மனுஷரையும் ஆகீஸ் யுத்தத்திற்கு சம்மதியாமல் திருப்பி அனுப்புகிறான்.  பின்பு அவர்கள் இங்கு வரும் போது பெலிஸ்தர்கள்  இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தத்திற்கு போனார்கள்.  தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்கு முன்னே அமலேக்கியர் தென்புறத்து சீமையின் மேலும், சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகை கொள்ளையடித்து, அதனை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும், பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களை பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போனார்கள்.  அப்போது தாவீதும், அவன் மனுஷரும் அந்த பட்டணத்திற்கு வந்த போது அந்த பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், குமாரரும், குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.  அப்பொழுது தாவீதும்,அவன் மனுஷர்களும் தங்களுக்கு பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.  தாவீதின் இரண்டு மனிவிகளாகிய அகினோவாமும்,அபிகாயிலும் சிறைபிடித்து கொண்டு போகப்பட்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர், குமாரத்திகளினிமித்தம் மனகிலேசமானதினிமித்தம் அவனை கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்.  தாவீது தன்னை தேவனாகிய கர்த்தருக்குள்ளே திடப்படுத்திக்கொண்டான்.  பின்பு தாவீது அகிமெலேக்கின்  குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனிடத்தில் ஏபோத்தை கொண்டு வர சொல்லி; கர்த்தரிடத்தில் தாவீது அந்த தண்டை பின்தொடர வேண்டுமா? அதை பிடிப்பேனா? என்று கேட்டதற்கு; கர்த்தர் அதை பின் தொடர்; நீ அதை பிடித்து சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.  இதனை கேட்ட தாவீதும், அறுநூறு பேரும் போனார்கள்;   அவர்கள் பேசோர் ஆற்றண்டையில் வந்த போது சிலர் நின்று போனார்கள். ஆனால் தாவீதோ நானூறு பேரோடுங்கூட தொடர்ந்து போனான்.  இருநூறு பேர் விடாய்த்து போனபடியால் ஆற்றை கடக்கமாட்டாமல் நின்று போனார்கள். 

பிரியமானவர்களே நம்மிடத்தில் தேவ கிருபை இல்லையென்றால் சத்துரு மனவாட்டி சபையாகிய நம்மை சிறைப்பிடித்துக் கொண்டு செல்லும்.  அவ்விதம் நம்முடைய ஆத்துமா சிறைப்பட்டு போகும்.  அப்படியென்றால் நாம் தேவனோடு உள்ள தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடக்கூடும்; மற்றும் உலகவிதமான ஐக்கியம் வைத்துக்கொள்ளக்கூடும்.  உலக ஞானத்தில் பிரியங்கொள்ளகூடும்.  பரிசுத்த வாழ்வை தவிர்தது விடக்கூடும்.  ஆதலால் இவ்விதம் எல்லாம் நம்முடைய வாழ்வில் நடக்காமல் இருக்க வேண்டுமானால் நாம் கிறிஸ்துவோடு அவருடைய அன்பில் இணைக்கப்பட்டவர்களாகி, பரிசுத்தவான்களோடு உள்ள ஐக்கியத்தில் ஒன்றிணைந்து காணப்பட கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு அனுதினம் சபை கூடி கர்த்தரை ஆராதிப்பதும்,  நம்முடைய உள்ளத்தில் எழும்புகிற துர்கிரியைகளை அழிக்கும் படியாக கிறிஸ்துவின் நீதி நியாயத்தால் நிறையப்படுவோமானால் அவர் உள்ளத்தில் சிங்காசனத்தில் இருந்து நம்மில் ஆளுகை செய்து அஞ்ஞானிகளின் கிரியைகளை அழித்து சிறைப்பட்ட நம் ஆத்துமாவை மீட்டுக்கொள்வார்.  இவ்விதம் நம் ஆத்துமா மீட்கபட ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.