தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசெயர் 1:16,17

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவோடு இருக்கிற சகல காரியங்களையும் கிறிஸ்துவினிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் காணப்பட்டால் தான் நம்முடைய ஆத்துமாவை சிறைப்படுத்துகிற சத்துருவின் கையிலிருந்து கர்த்தர் நம்மை மீண்டெடுக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 30:10-20 

தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.

ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,

அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.

தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான்.

தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.

இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களில் தாவீது கர்த்தரிடத்தில் ஆலோசனை கேட்ட பின்பு சிறைப்படுத்தி கொண்டு போகப்பட்டவர்களை மீட்கும் படியாக புறப்பட்டு போகிறான்.  அப்படியாக அவர்கள் போகும் போது ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனை தாவீதினிடத்தில் கொண்டு வந்து , புசிக்க அப்பமும், குடிக்க தண்ணீரும் குடித்து அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சபழகுலைகளையும் அவனுக்கு கொடுத்தார்கள்; அதனை அவன் சாப்பிட்ட பின்பு அவனுக்குள் உயிர் திரும்ப வந்தது; அவன் இரவும் பகலும் இராபகல் அப்பம் சாப்பிடாமலும் இருந்தான்.   தாவீது அவனிடத்தில் எவ்விடத்தான் என்றதற்கு; அவன் சொன்ன மறுபடி என்னவென்றால் அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்.  அல்லாமலும் அவன் சொன்னது மூன்று நாளைக்கு முன்னே நான் வியாதிப்பட்டபோது என் எஜமான் என்னை கைவிட்டான் என்று சொல்லி அக்கினியால் சுட்டெரித்த இடங்களையும் விளக்குகிறான்; அதற்கு தாவீது அவனிடத்தில் நீ என்னை அந்த தண்டினிடத்தி்கு கொண்டு போவாயா என்று கேட்க; அவன் சொன்ன மறுபடி என்னவென்றால் நீர் என்னை கொன்றுபோடுவதில்லை என்று என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதில்லை என்று தேவன் மேல் ஆணையிடுவீரானால் , உம்மை அந்த தண்டினிடத்தற்கு கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.   இவன் அவனை கொண்டு போய் விட்ட பிறகு, அமலேக்கியர் வெளியில் எங்கும் பரவி புசித்து குடித்து, தாங்கள் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான கொள்ளைக்காகவும் ஆடிபாடிக்கொண்டிருந்தார்கள்; அவர்களை தாவீது அன்று சாயங்காலம் தொடங்கி மறுநாள் சாயங்காலம் மட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்களின் மேல் ஏறிப்போன நானூறு பேரை தவிர வேறு யாரும் தப்பவில்லை.  பின்பு  அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும் விடுவித்தான். பின்பு அவர்கள் கொள்ளையாடி போன எல்லாவற்றிலும், சிறியதிலும்,  பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.   எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளை தங்கள் மிருக ஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.  

பிரியமானவர்களே, இதன் கருத்துக்கள் என்னவென்றால் அமலேக்கியர்களால் சிறைப்படுத்தப்பட்ட நம்முடைய ஆத்துமாவை கர்த்தராகிய இயேசுவால் பிதாவாகிய தேவன் நம்முடைய ஆத்துமா எந்த விதமான வயதாக இருந்தாலும் மீட்டு எடுக்கிறார் என்பதின் திருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அல்லாமலும் நம்முடைய ஆத்துமா  சிறைப்பட்டு போனால், நம்முடைய பொருட்களாலும் நன்மைகள்  வராமல் இருக்கும்படியாக சத்துருவானவன் கொள்ளையாடி வைத்திருப்பான்.  நம்மில் அநேகர் அதனை உணர்ந்துக்கொள்ளமாட்டாமல், அவர்கள் ஏதோ போராட்டம் என்று நினைத்துக்கொள்வார்கள். நாம் நிச்சயமாக அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய விடுதலைப் பெற்றுக்கொள்ளாமல் இருந்தால் நாம் பெற்றுக்கொள்ளவேண்டிய பரலோக நன்மைகளும், பூமிக்குரிய நன்மைகளும் பெற்றுக்கொள்ள முடியாது. 

அதனால் அதனைக்குறித்து எஸ்றா 8:21 

அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

ஆதலால் பல மோகங்களினால் சிக்குண்டு சிறைப்பட்டு இருக்கிற நாம் கிறிஸ்துவின் வசனத்தாலும், அவருடைய இரத்தத்தினாலும், அவருடைய உபதேசங்களினாலும் நாம் நம்முடைய ஆத்துமாவை தப்பித்துக்கொள்ள வேண்டும்.  இதனை திருஷ்டாந்தப்படுத்தவே தாவீது இழந்து போன காரியங்களை மீட்க வரும் போது ஒரு எகிப்தியனை கொண்டு வந்து அவனுக்கு அப்பமும் தண்ணீரும், அத்திபழ அடையின் ஒரு துண்டும், வற்றலான இரண்டு திரட்சபழகுலைகளையும் அவனுக்கு கொடுத்து; அவன் அதனை வாங்கி புசிக்க அவன் உயிர் திரும்ப வந்தது.  அவன் ஒரு எகிப்தியன், அவனைக்கொண்டு தாவீது அமலேக்கியர் கொள்ளையாடினதை கண்டு பிடிக்கிறான்.  இப்படியாக கர்த்தர் நாம் கிறிஸ்துவினால் மீண்டெடுக்கபட திருஷ்டாந்தம்.  ஆதலால் நம்மை எல்லாவிதத்திலும் மீண்டெடுக்கும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.