தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 20: 28

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காக வாழுகிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவோடு இருக்கிற சகல காரியங்களையும் கிறிஸ்துவினிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.

 அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

1சாமுவேல் 30:21-22

விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.

அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்;  அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது தாவீதின் மனுஷரில் இருநூறு பேர் அமலேக்கியரோடு யுத்தத்திற்கு போகிற வழியில் விடாய்த்து போனபடியால் பேசோர் ஆற்றண்டையில் கடக்ககூடாமல் அங்கு தங்கியிருந்தார்கள். தாவீதும் அவனுடைய மனுஷரும் கொள்ளை முடித்து வருகிற போது அவர்களுக்கு எதிர் கொண்டு வரும்போது தாவீது அவர்களிடத்தில் சுகசெய்தியை விசாரிக்கிறான்.  அப்போது தாவீதோடே நடந்துவந்த மனுஷரில் பொல்லாதவர்களும், பேலியாளின் மக்களுமான எல்லோரும் அவர்கள் எங்களோடே கூட வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்டு வந்த பொருள்களில் ஒன்றும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தங்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு போகட்டும் என்றதற்கு தாவீது சொன்னது 

1சாமுவேல் 30:23 

அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்னவென்றால் கர்த்தர் நமக்கு நன்மைகள் தருவாரானால்; அந்த நன்மைகள் தேவனுடைய சபையின் எல்லா ஜனங்களுக்கும் பொதுவாக பகிர்ந்து கொடுக்க வேண்டும். மேலும் தாவீது சொன்னது யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ, அதே போல் ரஸ்துக்களண்டையில் இருக்கிறவர்களுக்கும் பங்கு வீதம் கிடைக்க வேண்டும்; அது சரி பங்காக பங்கிடுவீர்களாக என்று சொல்கிறான்.  அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.இப்படி தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தல ஊழியத்தை தொடங்கினார்.  மேலும் அப்போஸ்தலர்கள் அவர்கள் தங்களுக்கு கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதத்தை கர்த்தரின் பாதத்தில் வைத்து; எல்லாரும் பொதுவாக அனுபவித்தார்கள்; அதனால் அவர்களுக்குள் பூரண கிருபை உண்டாயிருந்தது.  மேலும் கொடுக்கிறதில் யாருக்கும் குறைவாக காணப்பட்டதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.  

அல்லாமலும், மத்தேயு 20:8-15  

சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.

அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.

முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.

வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:

பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?

உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.

என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.

இதனை விளக்கும்படியாகவே இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் பிரமாணமாக திருஷ்டாந்தமாக ஏற்படுத்தியிருக்கிறது.  மேலும் தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளயாடினவைகளிலே சிலதை அவன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்கு சிலவற்றை அனுப்பி. இதோ கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதம் என்று சொல்லி அனுப்பினான். 

மேலும் அவை யார் யாருக்கு அனுப்பப்பட்டதென்றால் 

1சாமுவேல் 30:27-31 

யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,

ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,

ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,

ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,

எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துகளை நாம் பார்க்கும் போது கர்த்தரின் சபையில் சகோதரர்கள் ஒருமித்து ஒருமனதோடு ஆராதிக்கும் போது தேவனுக்கு மிகுந்த மகிமையண்டாகும்; அந்த தேவ மகிமையினால் நாம் நிறையப்படுவோம்.  அப்படியாக நாம் தேவ மகிமயினால் நிறையப்படும் போது நமக்கு எதிரான துர்கிரியைகள் அழிக்கப்பட்டு நாம் பரிசுத்தமாக்கப்படுவோம்; இந்த பிரகாரம் நாம் ஆவிக்குரிய யுத்தம் செய்து அந்நிய ஜாதிக கிரியையை நம்மில் வசிக்கிற ஆவியானவர் முறியடிக்கிறார்.  இதன் திருஷ்டாந்தத்துக்காகவே கர்த்தர் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கும் மற்றும் புற ஜாதிகளுக்கும் யுத்தம் நடப்பிக்கிறார்.  பரிசுத்த வேதாகமம் பரலோகத்துக்குரியதே அல்லாமல் அது உலகத்துக்குரியதல்ல.  இதனை ஆவிக்குரிய வரங்கள் உள்ளவர்களே அறியமுடியும்.  மற்றவர்கள் அறிந்துக்கொள்ள முடியாது.  மேலும் கர்த்தர் தரும் நன்மைகள் யாவும் கர்த்தருக்கே உரியது என்பதை உணர்ந்துக்கொண்டு கர்த்தருக்காக வாழும்படி ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.