தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 30:19,20

அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.

அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினிடத்தில் திடப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காக வாழுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் , 

1சாமுவேல் 31:1-13 

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,

தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.

சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.

அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.

வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,

அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,

அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.

பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,

அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்துபோய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,

அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

மேற்கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளில் பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள்.  இந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.  இது எப்போது என்றால் ராஜாவாக இருந்த சவுலை விட்டு கர்த்தர் தூரம் போய் விட்டார்.  கர்த்தருடைய தாசனாகிய தாவீதும் யுத்தத்தில் இல்லாமலிருக்கிறான்.  இதனை போலே நம் வாழ்விலும் கர்த்தர் நமக்கு துணையாயிராவிட்டால் நம்மை உலக மோக இச்சைகளாகிய பெலிஸ்திய கிரியைகள் நம்முடைய ஆத்துமாவை கீழே விழ தள்ளும்.  இவ்விதம் தள்ளியிடுகிற இடம் தான் கில் போவா மலை.  

பெலிஸ்தர்கள் சவுலையும், அவன் குமாரனாகிய யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூகாவையும் நெருங்கி தொடர்ந்து பிடித்து வெட்டிப்போட்டார்கள். மேலும் சவுலுக்கு விரோதமாக யுத்தம் பலத்தது; வில்வீரர்கள் அவனை நெருக்கினார்கள்; சவுல் வில் வீரர்களால் காயப்பட்டு; தன் ஆயுததாரியை நோக்கி; அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னை குத்திப்போட்டு அவமானபடுத்ததாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி என்னை குத்தி போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டு அப்படி செய்யமாட்டேன் என்றான்.  அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அவன் மேல் விழுந்தான்.  சவுல் செத்து போனதை அவன் ஆயுததாரி கண்ட போது; அவனும் தன் பட்டயத்தின் மேல் விழுந்து, அவனோடேக்கூட செத்துப்போனான்.  அப்படியே அன்றைய தினம் சவுலும் அவன் குமாரர் மூன்று பேரும், அவன் ஆயுததாரியும் அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்க செத்துப்போனார்கள்.  இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் மூன்று குமாரரும் செத்துப்போனார்கள் என்றும் பள்ளதாக்குக்கு இப்பாலும், யோர்தானுக்கு இப்பாலும் இருக்கிற இஸ்ரவேலர்கள்  கண்ட போது பட்டணங்களை விட்டு ஓடிப் போனார்கள்;  அப்போது பெலிஸ்தர்கள் வந்து அங்கே குடியிருந்தார்கள்.  வெட்டுண்டவர்களை உரிந்துக்கொள்ள மறுநாள் பெலிஸ்தர்கள் அங்கு வந்த போது சவுலும், அவன் மூன்று குமாரரும்  கில்போவாவிலே விழுந்துக்கிடக்கிறதை கண்டு அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும், ஜனங்களுக்குள்ளும் செய்தியை பிரசித்தம் செய்யும் படி அவைகளை பெலிஸ்தர் தேசத்திலும் சுற்றிலும் அனுப்பி, அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து அவன் உடலை பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப் போட்டார்கள்.  ஆனால் பெலிஸ்தர் சவுலுக்கு செய்ததை கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்ட போது, அவர்களில் பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுவதும் நடந்து பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும், குமாரரின் உடல்களையும் எடுத்து யாபேசுக்கு கொண்டு வந்து, அங்கே தகனம் பண்ணி, அவர்களுடைய எலும்புகளை எடுத்து யாபேசிலே உள்ள தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள். 

மேலும் நாம் அறிநதுக்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்றால்  நம்முடைய ஆத்துமாவில் கர்ததருக்கு சித்தமான செயல்கள் இல்லாவிடடால் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை பெலிஸ்தியமாகிய மோக இச்சைக்கு முழுமையாக அடிமைப்படுத்தும் போது இஸ்ரவேலராகிய கர்த்தரின் செயல்கள் அவர்களை விட்டு அற்றுபோகும் என்பதற்கு திருஷ்டாந்தம் தான் இஸ்ரவேலர் முறிந்தோடி வெட்டுண்டு விழுந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

பிரியமானவர்களே கர்த்தரின் ஆவி நம்மில் இல்லாமல் பொல்லாத ஆவியாகிய சவுலின் ஆவி நம்மில் இருக்குமானால் நாம் பெற்றிருந்த  ஆவிக்குரிய செயல்கள் முழுவதும் அகற்றப்பட்டு பெலிஸ்திய கிரியைகளாகிய மோக இச்சைக்குட்படுகிற காரியங்கள் எல்லாம் நம் உள்ளத்தில் இடம் பிடிக்கும்.  அவ்விதம் இஸ்ரவேல் சபை திடப்படாமல் அழிக்கப்படும்.  ஆதலால் நாம் ஒரு போதும் பொல்லாத ஆவி நம்மை வஞ்சித்து நாம் அழிந்து போகாதபடி கர்த்தர், நமக்கு தந்த அபிஷேகத்தை ஜாக்கிரதையாக காத்துககொள்வோம். ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.