தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டிசபையாகிய நாம் பிறருக்கு தீமை வரும்போது சந்தோஷப்படக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினிடத்தில் நம்மை திடப்படுத்த வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 1:1-5
சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு,
மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.
தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.
சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,
மேற்கூறிய வசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்னவென்றால் சவுல் மரித்தபின்பு தாவீது அமலேக்கியரை முறியடித்து சிக்லாக்குக்கு திரும்பி வந்து, இரண்டு நாள் அங்கே இருந்த பிற்பாடு மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் பாளயத்திலிருந்து புறப்பட்டு தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு, தன் தலையின் மேல் புழுதியை போட்டுக்கொண்டு தாவீதினிடத்தில் வந்து தரையிலே விழுந்து வணங்கினான். தாவீது அவனைப் பார்த்து : நீ எங்கேயிருந்து வருகிறாய் என்று கேட்டதற்கு இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான். அப்போது தாவீது அவனிடம் நடந்த செய்தி என்ன என்று கேட்டதற்கு இஸ்ரவேலர் யுத்தத்தை விட்டு முறிந்தோடிப் போனார்கள் என்றும், அநேகம் பேர் மடிந்து விழுந்தார்கள் என்றும், சவுலும் அவன் குமாரன் யோனத்தானும் மடிந்தார்கள் என்றும் அவன் தெரிவித்தவுடன் தாவீது அவனிடம் சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தனும் மடிந்த செய்தியை எப்படி நீ அறிந்தாய் என்று கேட்க அந்த வாலிபன் சொன்னது தற்செயலாய் கில்போவா மலைக்கு போனேன்
2 சாமுவேல் 1:6-17
அந்த வாலிபன்: நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்.
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,
வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு: நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து, அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.
தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.
தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும், புலம்பல் பாடினான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை அவன் சொன்னவுடன் தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு சவலும், அவன் குமாரன் யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும் பட்டயத்தினாலே விழுந்தபடியினால் அவர்கள் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசித்தார்கள். பின்பு தாவீது அதனை அறிவித்த வாலிபனை, விசாரித்து அவன் அந்நிய ஜாதியானுடைய மகன் அமலேக்கியன் என்று அறிந்துக்கொண்ட பின் வாலிபனிடம் கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை கொன்று போடும் படி நீ உன் கையை நீட்ட பயப்படாமற் போனதென்ன? என்று சொல்லி, வாலிபரில் ஒருவனை கூப்பிட்டு, நீ கிட்டப்போய் அவன் மேல் விழுந்து அவனை வெட்டு என்று சொன்னதால் அவன் அப்படியே செய்தான்; அவன் செத்தான். பின்பு தாவீது அவனை பார்த்து: உன் இரத்தபழி உன் தலையின் மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்று போட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமாக சாட்சி சொல்லிற்று என்றான். பின்பு தாவீது சவுலின் பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தான் பேரிலும் புலம்பல் பாடினான்.
பிரியமானவர்களே இங்கு நாம் பார்க்கிற காரியம் என்னவென்றால் கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் சவுலையும் அவன் குமாரர்களையும் குறிப்பிட்டு கூறின காரியம் நிச்சயமாக நடந்தது என்பதனை அறிந்துக்கொள்கிறோம். மேலும் கர்த்தர் தம்முடைய தாசனாகிய தாவீதுக்கு விரோதமாக சவுல் செயல்பட்டதை பார்த்துக்கொண்டிருந்து, அவன் கையில் இருந்த பட்டயமே அவனை கொன்றுபோடுகிறது. ஆனால் சவுலால் தாவீது எவ்வளவு கஷ்டம் அனுபவித்தாலும் அவனை கொல்ல தாவீதின் மனம் சம்மதிக்கவில்லை. மேலும் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட சவுல், விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய கையாலே மடிந்து விழுகிறான், அவர்களாலே கொல்லப்படுகிறான்; அதுமட்டுமில்லாமல் அவன் தலையை பெலிஸ்தர்களால் துண்டிக்கபடுகிறது; இதன் காரணம் இஸ்ரவேலனுடைய பொறாமையும், கர்த்தருக்கு கீழ்படியாமையும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அல்லாமலும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் சவுல் மரித்துப்போன செய்தியை அறிந்த தாவீது சந்தோஷப்படவில்லை; அங்கு அவனும், அவன் மனுஷரும் புலம்புகிறார்கள். ஆனால் இந்நாட்களில் நாம் எப்படிபட்டவர்களாக இருக்கிறோம் என்று நம்மை நாமே சோதித்தறிய வேண்டும். மேலும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்டவர்களுக்கு விரோதமாக செயல்ப்படுவோமானால் அது நமக்கு தேவனுடைய கோபமாகிவிடும். இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் கர்த்தருக்கு கீழ்படியாமலும், உள்ளத்தில் பொல்லாத ஆவிக்கு இடம்கொடுத்தால், நம் உள்ளத்தில் பெலிஸ்திய துர்கிரியைகளினிமித்தம், கர்த்தர் தந்த அபிஷேகம் நஷ்டமடையும். அப்போது பெலிஸ்திய ஆவியிடத்தில் போராடி வெற்றியடைய முடியாமல் தவிப்போம்; காரணம் கர்த்தரும் நம்மை விட்டு தூரம் போய் விடுவார். மேலும் நிற்க நிலையில்லாமல் அமிழ்ந்து போவோம்; கைதருவார் யாருமிராது. அவ்விதமாக நம்முடைய ஆத்துமா பெற்ற ஜீவனை இழந்து விடும்; நாம் வெட்கப்பட்டுவிடுவோம்; ஆதலால் நாம் எப்போதும் கிறிஸ்துவுக்குரிய பிள்ளைகளாக மனந்திரும்பி நம்மை புதுபித்து கர்த்தருக்கு எப்போதும் கீழ்படிகிறவர்களாகவும், பொறாமை இல்லாதவர்களாகவும், மற்றவர்களுக்கு தீமை செய்யாமல், தீமை செய்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்விதமாக நாம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.