தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 69:18

நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டிசபையாகிய நமக்கு கர்த்தர் தந்த இரட்சிப்பாகிய கேடகம் சத்துருக்களால் அவமதிக்கபடாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பிறருக்கு தீமை வரும்போது, அதனை குறித்து சந்தோஷப்படக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் ,

2 சாமுவேல் 1:18:27 

(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள்.

பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.

கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.

உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும் சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.

இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.

போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டுபோனாயே.

என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

மேற்க்கூறப்பட்டிருக்கிற வசனங்களின் கருத்துக்கள் என்னவெனில் தாவீது சவுலின் பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தான் பேரிலும் புலம்பல் பாடுகிறான்; மற்றும் வில் வித்தையை யூதபுத்திரருக்கு கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.  அல்லாமலும் அவன் புலம்பி பாடின பாட்டாவது இஸ்ரவேலர்களிடம் இருந்த கிருபையினாலாகிய இரட்சிப்பின் அலங்காரம் 

உயர்ந்த மலையாகிய கில்போவா மலையிலே அதமாயிற்று என்றும் 

அபிஷேகம் பெற்றவர்களாகிய  இஸ்ரவேலின் ராஜா

அவன் குமாரனாகிய பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள் என்றும்

 இதனை  கேட்கும் போது பெலிஸ்திய குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும்

விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும்

 காத் பட்டணத்தில் அறிவியாமலும்

அஸ்கலோன் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்

 கில்போவா மலைகளே,  உங்கள் மேல் பனியும் மழையும் பெய்யாமலும்

காணிக்கைக்கு  ஏற்ற பலன் தரும் வயல்கள் இராமலும் போவதாக

அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது

சவுலின் வாழ்வு தைலத்தால் அபிஷேகம் பண்ணபடாதது போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டது

 யோனத்தான் கொலையுண்டவர்களின் இரத்தத்தை குடியாமலும்

பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும் இதுவரை பின்வாங்கினதில்லை

சவுலின் பட்டயம் வெறுமையாக திரும்பினதில்லை

உயிரோடிருக்கையில் அவர்கள் இருவரும் பிரியமும் இன்பமுமாயிருந்தது போல

மரணத்திலும் அவர்கள் பிரிந்து போனதில்லை

கழுகுகளை பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருந்தார்கள்

இஸ்ரவேலின் குமாரத்திகளுக்கு இரத்தாம்பரத்தை சிறப்பாய் உடுப்பித்து 

பொன்னாபரணங்களை தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்

போர் முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே

உயரமான ஸ்தலங்களில் வெட்டுண்டு போனாயே

சகோதரனாகிய யோனத்தானே உனக்காக வியாகுலப்படுகிறேன்

நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியம்

ஸ்திரீகளின் சிநேகத்தை பார்க்கிலும் அதிகமாயிருந்தது

பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்

யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்து போயிற்று

 பிரியமானவர்களே இந்த பாட்டானது சவுலின் மரணமும், சிநேகிதனாகிய யோனத்தானுடைய மரணத்தையும் சந்தித்த தாவீது தன் வியாகுலத்தினால் பாடின பாட்டு.  இதனை கர்த்தர் திருஷடாந்தபடுத்துகிறார்; என்னவென்றால்  நாம் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, சீயோனின் உச்சியில் இருந்து ஆர்ப்பரித்த நாம் பொல்லாத ஜாதிகளுடைய செயல்களால் பாதிக்கப்பட்டு, பின் அவர்களால் கீழே தள்ளப்பட்டு முறிந்து  விழும்போது நம்முடைய ஜீவன் இழந்து விடுகிறோம்.  நம்முடைய பராக்கிரமம் நம்மை விட்டு மாற்றப்படுகிறது. யுத்தத்திற்கு கர்த்தர் நமக்கு தந்த கேடகமாகிய அபிஷேகம் அவமதிக்கப்படுகிறது; இதன் காரணம் நம்மிடம் உள்ள பொல்லாத செயல்கள் நிமித்தமாக கர்த்தரின் நாமம் அவமதிக்கப்படுகிறது என்பதனை கர்த்தர் சவுலை வைத்து திருஷ்டாந்தபடுத்துகிறார்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் தேவனுக்கு செய்கிற துரோகத்தினால் தேவன் நம்மை பார்த்து வேதனைபடுகிறவராயிருக்கிறார்.  மேலும் அதன் காரணமாக கர்த்தராகிய இயேசுவை தேவன் நம்மில் அபிஷேகம் செய்யப்பட்டவராக,  சிலுவையில்  வெற்றி சிறக்க வைக்கிறார்.  ஆதலால் அவரை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் எல்லாவித சத்துருக்களின் போராட்டத்திலும் வெற்றியை  அடைந்து, அதன் பலனாகிய நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள்.  இவ்விதமாக நாம் கிறிஸ்துவினிடத்தில் முழுமையான விசவாசமுள்ளவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.