தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 12: 14, 15
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்குள்ளாக ஒரு போதும் நம்முடைய சத்துருக்களுக்கு எதிராக பொல்லாத எண்ணங்கள் எழும்பக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் தந்த இரட்சிப்பாகிய கேடகம் சத்துருக்களால் அவமதிக்கபடாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 2: 1 - 7
பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் கூட அவ்விடத்திற்குப் போனான்.
அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.
அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது,
தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.
இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச் சொன்னான்.
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளில் தாவீது சவுலுக்காக புலம்பல் பாடி தீர்ந்த பின்பு, கர்த்தரிடம் கேட்கிறான் நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர்: போ என்றார்; எவ்விடதிற்கு போகலாம் என்று தாவீது கேட்டதற்கு கர்த்தர் எப்ரோனுக்கு என்றார். பின்பு தாவீது அவனுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினாவோமோடும், கர்மேலின் ஊராளாகிய அபிகாயிலோடும் கூட அங்கு போகிறான். அன்றியும் அவனோடிருந்த மனுஷர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் கூட்டிக்கொண்டு போனான், அவர்கள் சுற்றூர்களிலே குடியேறினார்கள். அப்போழுது யூதாவின் மனுஷர் அங்கே வந்து தாவீதை யூதா வம்சத்தாரின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். கீலேயாத் தேசத்து யாபேசின் மனுஷர்கள் சவுலை அடக்கம் பண்ணினார்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபிறகு, தாவீது கீலேயாத் தேசத்து யாபேசின் மனுஷர்களிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி சொன்னது என்னவென்றால் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்த தயவை செய்தபடியினால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்றும், கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்த காரியத்தை செய்தபடியினால் நானும் இந்த நன்மைக்குதக்கதாக உங்களை நடத்துவேன் என்கிறான். மீண்டும் தாவீது யாபேசின் மனுஷரிடம், நீங்கள் உங்களை திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்த பின்பு யூதா வம்சத்தார் தாவீதை தங்கள் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார் என்று சொல்ல சொன்னான்.
பிரியமானவர்களே மேற்கூறிய கருத்துக்கள் என்னவெனில் நமக்கு சத்துருக்களாகயிருக்கிறவர்கள் எப்படிபட்ட பொல்லாப்பு செய்தாலும் நாம் அவர்களுக்கு எந்த பொல்லாப்பும் செய்யாமல் கர்த்தருக்கு பயந்து அவரையே பின்பற்றி வாழுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பது கர்த்தர் நமக்கு காட்டுகிற திருஷ்டாந்தம். நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் சவுல் தாவீதை எவ்வளவோ துன்படுத்தின பிறகும் சவுலின் மரணம் தாவீதுக்கு மிகவும் வேதனையைக்கொடுக்கிறது. அல்லாமலும் சவுலின் உடலை அடக்கம் பண்ணின யாபேசின் மனுஷர்களை தாவீது ஆசீர்வதிக்கிறதை பார்க்கிறோம். ஆனால் நம்மில் அநேகர் கர்த்தரை ஆராதிக்கிறவர்கள், அவர்கள் சத்துருக்கள் அழிந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அல்லாமலும் நம்முடைய சத்துருக்களுக்கு யாராவது உதவி செய்வார்களானால் அதனை கேள்விபட்ட உடனே அவர்களையும் வெறுக்கிறோம். அப்படிபட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் தாவீது யாபேசின் மனுஷர் சவுலுக்கு உதவியாக இருந்ததால் அவர்களை ஆசீர்வதிக்கிறான். இப்படியாக நமக்கு நல்வழி காட்டும்படியாக தாவீதை திருஷ்டாந்தபடுத்தி, நம்மிடத்தில் இருக்கிற பொல்லாத எண்ணங்களை கிறிஸ்துவினால் நம்மை விட்டு முற்றிலும் அகற்றுகிறார். பொல்லாத கிரியைகள் உள்ளவர்கள் கிறிஸ்துவினால் மீட்கபடவில்லை என்பது நிச்சயம் விளங்குகிறது; அதனை குறித்து
மத்தேயு 5 :44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில் நாம் எப்படி நம்முடைய சத்துருக்களிடத்தில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்றுகூறப்படுகிறது. இவ்விதமாக நம்முடைய சிந்தைகள் கிறிஸ்துவின் சிந்தைகளாக மாறும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.