தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:167

என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் அறிந்து செயல்பட்டால் மட்டுமே ஆத்மீகத்தில் வளருவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நமக்குள்ளாக, நம்முடைய சத்துருக்களுக்கு எதிராக எந்த பொல்லாத எண்ணங்களும் எழும்பாதபடி காத்துக்கொள்ள வேண்டும். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

2 சாமுவேல் 2:8-17 

சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,

அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.

சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.

தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.

நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.

அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.

அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து, நமக்கு முன்பாகச் சிலம்பம்பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.

அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய்,

ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.

அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் தாவீது, சவுலின் உடலை எடுத்து அடக்கம் பண்ணின யாபேசின் மனுஷர்களை ஆசீர்வதித்தபிறகு, யூத வம்சத்தார் தாவீதை தங்கள் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணின பின்பு, சவுலின் படைதலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர், சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டு போய் அவனை கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்.  அப்னேர் அவனை ராஜாவாக்குகிற போது அவன் நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருஷம் மாத்திரம் ராஜ்யபாரம்பண்ணினான். யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதை பின்பற்றினார்கள்.  தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின் மேல் ஏழு வருடம் ராஜ்யபாரம் பண்ணினான்.  நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு மகனாயீமிலிருந்து கிபியோனுக்கு புறப்பட்டு போனான்.  அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும், தாவீதின் சேவகரும் புறப்பட்டு  போய் கிபியோனின் குளத்தண்டையில்  ஒருவருக்கொருவர் எதிர்பட்டு குளத்தின் அந்தபக்கத்தில் அப்னேர் கொண்டு வந்த மனுஷர்களும், குளத்திற்கு இந்த பக்கத்தில் யோவாப் கொண்டு வந்த மனுஷர்களும் இறங்கினார்கள்.  அப்போது அப்னேர் யோவாபை நோக்கி சொன்னது என்னவென்றால் வாலிபர்கள் நமக்கு முன்பாக எழும்பி சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப் சம்மதிக்கிறான். இரு திறத்தாரிலும் பன்னிரண்டு பேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய், ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி இப்படியாக ஒருமிக்க விழுந்தார்கள்; அந்த கிபியோனிலிருக்கிற ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது; அப்போது கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும், தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டா்கள். 

பிரியமானவர்களே, இங்கு நாம் தியானிக்கும் போது இஸ்ரவேலும், யூதாவுமாக இரண்டாக இருக்கிறதை பார்க்கிறோம். சவுல் மரித்தபிறகு அவன் குமாரனாகிய இஸ்போசேத்தை, சவுலின் படைதலைவனாகிய அப்னேர் ராஜாவாக்குகிறதை பார்க்கிறோம்.  ஏனென்றால் நம் உள்ளத்தில் பொல்லாத ஆவிக்கு இடம் கொடுப்போமனால், அந்த ஆவிக்குட்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் தங்கள் சொந்த விருப்பம் போல் தேவசபையை நடத்தி வருவார்கள்.  அவ்விதம் நடத்தி வரும் போது, தேவனுக்கு சித்தம் இல்லாத காரியத்தை செய்வார்கள்.  அப்படி செய்வதினால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இரட்சிப்பை இழந்து விடுவார்கள்.  ஏனென்றால்  தேவனை பற்றிய அறிவு அவர்களிடம் இல்லாததினால் சத்துருக்களோடு யுத்தம் மேற்க்கொள்ள முடியாமல் ஆத்மீக வாழ்வில் விழுந்து விடுகிறார்கள்.  அவ்விதம் ஆத்மீக வாழ்வில் விழாமல் இருக்கம்படியாக, நாம் எப்போதும் தாழ்மையும், கர்த்தருக்கு பயப்படுகிற பயமும் நமக்கு உண்டாயிருக்க வேண்டும்.  மேலும் கர்த்தருக்கு பயப்படுகிற பயமும், தாழ்மையும். சவுலின் படைதலைவனாகிய அப்னேருக்கு இல்லாமலிருந்ததால், அங்கு யுத்தம் கடினமாகிறது என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தி; நாம் அப்படியாக அல்ல எப்போதும் கர்த்தருடைய சித்தம் அறிந்து செய்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.