தேவனுக்கே மகிமையுண்டாவதாக
பிலிப்பியர் 3:3
ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எந்த சூழ்நிலைமையிலும் தேவனிடத்தில் ஆலோசனையைப் பெற்று ஆவிக்குரிய யுத்தம் மேற்க்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் அறிந்து செயல்பட்டால் மட்டுமே ஆத்மீகத்தில் வளருவோம் என்பதனை குறித்து தியானித்தோம். அதென்னவென்றால் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை, சவுலின் படைதலைவனாகிய அப்னேர் கர்த்தரின் ஆலோசனையை கேட்காமல் இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினான். பின்பு இஸ்ரவேலும், யூதா கோத்திரமும் இரண்டாகத்தான் இருந்து யுத்தம் செய்தார்கள்.
அடுத்தபடியாக 2 சாமுவேல் 2:18-20
அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான்; அவன்: நான்தான் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் நடந்த யுத்தத்தில் அப்னேரும், இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறியடிக்கப்பட்டார்கள். அங்கே செருயாவின் மூன்று குமாரர்களாகிய யோவாபும், அபிசாயும், ஆசகேலும் இருந்தார்கள்; அதில் ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றை போல ஓடுகிறவனாயிருந்தான். அவன் அப்னேரை பின்தொடர்ந்து வலது இடது புறமாகிலும் விலகாமல் துரத்திக் கொண்டு போனான். அப்போது அப்னேர் பின்னாக திரும்பி பார்த்து ஆசகேல் அல்லவா என்று கேட்க, அவன் நான்தான் என்றான்.
அப்போது அப்னேர் ஆசகேலிடம் சொன்ன வார்த்தையாவது
2 சாமுவேல் 2:21,22
அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை அப்னேர் சொன்னபிறகு ஆசகேல் விலகி போகமாட்டேன் என்று சொல்கிறான். ஆசகேல் விலகி போகாததை கண்ட அப்னேர்
2 சாமுவேல் 2:23-32
ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.
அப்பொழுது அப்னேரைப் பின்சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு: பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.
அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும், யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.
அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அவாந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.
யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.
அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.
அவன் ஈட்டியின் பின்புற அலகினால் ஆசகேலின் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; ஆசகேல் அங்கே தானே விழுந்து செத்தான். ஆசகேல் விழுந்து கிடக்கிற இடத்திலே வந்தவர்கள் அங்கே தரித்திருந்தார்கள். அப்போதும் யோவாபும், அபிசாயும் சூரியன் அஸ்தமிக்கும் மட்டும் அப்னேரை பின் தொடர்ந்தார்கள். கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடு மட்டும் வந்தார்கள். அப்னேரை பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாக கூடி ஒரு மலையின் உச்சியில் நின்றார்கள். அப்போது அப்னேர் யோவாபிடம், பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ; முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, எந்தமட்டும் சகோதரரை விட்டு பின் வாங்கும்படி ஜனங்களுக்கு சொல்லாதிருப்பீரோ என்று சொல்லவும், யோவாப் இன்று காலைமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் தங்கள் சகோதரரை பின் தொடராமல் அந்த நேரமே திரும்பி விடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான். யோவாப் எக்காளம் ஊதுகையில் ஜனங்கள் இஸ்ரவேலரை தொடராமலும், யுத்தம் பண்ணாமலும் நின்று விட்டார்கள். அன்று இராமுழுவதும் அப்னேரும், அவன் மனுஷரும், அவாந்தரவெளியாய் யோர்தானை கடந்து, பித்ரோனை உருவ நடந்து, மக்னாயீமுக்கு போனார்கள். பின்பு யோவாப் அப்னேரை தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவர செய்த போது; தாவீதின் சேவகரில் பத்தொன்பது பேரும், ஆசகேலும் குறைந்திருந்தார்கள். ஆனால் தாவீதின் மனுஷரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும் முந்நூற்றறுபது பேரை மடங்கடித்தார்கள். ஆசகேலை எடுத்து , பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள். யோவாபும், அவன்மனுஷரும் இராமுழுவதும நடந்து எப்ரோனிலே வந்து சேர்ந்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்னவென்றால் தேவ சபைகளில் வருகிற பிரிவினைகளை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். எல்லா சபைகளிலும் இருத்திறத்தார் உண்டு அதில் ஓரு பக்கத்தார் ஆவிக்குரிய ஆராதனையையும், மற்றவர்கள் பரிசுத்த ஆவியால் நடத்தபடாதவர்களும் உண்டு. பரிசுத்த ஆவியால் நடத்தபடுகிறவர்கள் உள்ளான மனுஷனில் பெலன் பெற்றவர்கள்; மற்றவர்கள் அப்னேரின் கூட்டத்தார்; சொந்த சிந்தனையில் செய்கிறவர்கள். இவ்விருத்திறத்தரும் பிரிந்து காணப்படுகிறார்கள். ஆவிக்குரிய யுத்தம் செய்கிறவர்கள் யூதா கோத்திரத்தாராகிய தாவீதின் மனுஷர்களும், அவர்களை குறித்து கர்த்தருடைய வசனம்
ரோமர் 2:28,29
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
மேற்கூறப்பட்ட வசனத்தின்படி வாழ்கிறவர்கள், இருதயம் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக கிறிஸ்துவுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாயிருக்கும். மேலும் அவர்கள் சகோதரர்களாக இருந்தாலும் ஆவிக்குரியவர்கள் தான் வாக்குதத்தத்தை சுதந்தரிப்பார்கள். இப்படியாக நாம் ஒவ்வொருவரும் வாக்குதத்தத்தை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.