தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 10:29
கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்மை விட்டு போன பலன்களை மீண்டும் ஜாக்கிரதையாக இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எந்த சூழ்நிலமையிலும் தேவனிடத்தில் ஆலோசனை கேட்டு யுத்தம் மேற்க்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் ,
2 சாமுவேல் 3:1
சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது தாவீதின் குடும்பத்திற்கும், சவுலின் குடும்பத்திற்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது. தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டு போனார்கள். மேலும் எப்ரோனிலே தாவீது வந்து தங்கியிருக்கையில் அவனுக்கு பிறந்த குமாரர் .
2 சாமுவேல் 3:2-5
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
மேற்கூறப்பட்டவர்கள் தாவீதுக்கு எப்ரோனில் பிறந்தவர்கள். சவுலின் குடும்பத்துக்கும், தாவீதின் குடும்பத்துக்கும் யுத்தம் நடந்து வருகிற போது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே பலத்தவனானான். சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ற மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரிடம் என் தகப்பனுடைய மறுமனையாட்டியிடம் பிரவேசித்தது என்ன என்று கேட்டதற்கு, அப்னேர் கோபமடைந்து இஸ்போசேத்திடம் உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல், இந்நாள் மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும், சிநேகிதருக்கும், தயவு செய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான நாய்தலையா? என்று கேட்டு, அவன் சொன்னது நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்ட பண்ணி தாவீதின் சிங்காசனத்தை தாண் முதல் பெயர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலின் மேலும், யூதாவின் மேலும் நிலைநிறுத்தும்படிக்கு, கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்கு செய்யாமற் போனால் தேவன் அப்னேருக்கு அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யகடவர் என்றான். அப்பொழுது அவன் அப்னேருக்கு பயப்பட்டதினால் அவனு்க்கு மறுமொழி ஒன்றும் சொல்லாதிருந்தான்.
பின்பு அப்னேர், 2 சாமுவேல் 3:12
அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் அப்னேர் இஸ்போசேத்திடம் உள்ள கோபத்தினால் ஸ்தானாபதிகளை தாவீதினிடத்தில் அனுப்பி அப்னேரோடே உடன்படிக்கை பண்ணும்படியாகவும், இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப என் கை உம்மோடிருக்கும் என்று சொல்ல சொன்னான். அதற்கு தாவீது, நல்லது தான், நான் உன்னோடே உடன்படிக்கை பண்ணுவேன். ஆனாலும் கேட்கிற காரியம் என்னவெனில் என்னை பார்க்க வரும் போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை உன்னோடு அழைத்து வரவேண்டும்; அதற்கு முன்பு நீ என் முகத்தை காண்பதில்லை என்று சொல்ல சொன்னான். ஏனென்றால் தாவீது சொல்கிறான் பெலிஸ்தருடைய நூறு நுனிதோல்களைப் பரிசமாக கொடுத்து விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பி விடும் என்று சொல்லி அனுப்புகிறான்.
பிரியமானவர்களே, இங்கு தியானிக்கும் போது இஸ்ரவேலையும், யூதாவையும் ஒன்றாக்கும்படியாக கர்த்தர் முகாந்தரத்தை ஒருக்குகிறார். சவுலின் படைதலைவனாகிய அப்னேர், சவுலின் மரணத்திற்கு பிறகு இஸ்போசத்தை ராஜாவாக்கினதால் இஸ்ரவேலும், யூதவும் பிரிந்து யுத்தம் செய்கிறது. ஆனால் அப்னேரை வைத்து தான் கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த ஆணையை நிறைவேற்றும் படியாகவும், தாவீதின் சிங்காசனத்தை இஸ்ரவேலின் மேலும், யூதாவின் மேலும் நிலை நிறுத்தும் படியாக முகாந்தரம் கொண்டு வருகிறார். அல்லாமலும் தாவீதை விட்டு போன மனைவியை மீட்கும்படியாக கர்த்தர் சமயம் வாய்க்கபண்ணுகிறார். ஆனால் அப்னேர் இஸ்ரவேலோடு உடன்படிக்கை பண்ண சொல்லும் போது, அதன் ஆதாரத்திற்கு நூறு பெலிஸ்தரின் நுனி தோல்களை பரிசமாக கொடுத்து பெற்றுக்கொண்ட மனைவியை மீண்டும் அடைவதற்காக அவன் ஸ்தானாபதிகளை இஸ்போசேத்திடம் சொல்வதற்கு சொல்லி அனுப்புகிறான். இவ்விதமாக ஏதாவது தருணத்தினால் மணவாட்டி சபை நம்மை விட்டு மாறியிருக்குமானால், ஏதாவது நாம் நினைக்காத நேரத்தில் கர்த்தர்; நாம் உண்மையுள்ளவர்களாக இருப்போமானால் நாம் இழந்த பலனை மீண்டும் தந்தருள்வார். இவ்விதமாக மீண்டும் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.