தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1கொரிந்தியர் 12:25

சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்கு மாறான தீமைகள் செய்யாதபடி ஜாக்கிரதையாக காணப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகுவோம் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 3:23-30 

யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.

அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

நேரின் குமாரனாகிய அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம்போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.

யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.

அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக்கொன்றுபோட்டான்.

தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.

அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும், ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை என்றான்.

அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்னவெனில் தாவீதின் சேவகரும் யோவாபும் தாங்கள் கொள்ளயிட்ட பொருட்களுடன் தாவீதினிடத்தில் வரும்போது நேரின் குமாரனாகிய அப்னேர் அங்கு ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், தாவீது அவனை சமாதானத்தோடே போக விட்டான் என்றும் அவனுக்கு அறிவித்தார்கள்.  அதனை அறிந்த யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து; என்ன செய்தீர்; உம்மிடத்தில் வந்த அப்னேரை நீர் போகவிட்டது என்ன? அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்  பின்பு யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே, தாவீதுக்கு தெரியாமல் அப்னேரை கூட்டிக்கொண்டு வர ஆட்களை அனுப்பினான்.  அவர்கள் சீரா என்னும் துரவு மட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.  அப்னோர் எப்ரோனுக்கு வரும் போது யோவாபும் அவனோடே இரகசியமாய் பேசுகிறவனை போல் அழைத்துக்கொண்ட போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தபழியை வாங்கும்படியாக அவனை வயிற்றிலே குத்திக் கொன்று போட்டான்.  இதனை தாவீது கேட்டபோது அப்னேரின் இரத்தத்திற்காக, என் மேலும், என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை என்றும்; அது யோவாபினுடைய தலையின் மேலும், அவன் தகப்பனுடைய குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும், ஒருக்காலும் ஒழிந்து போவதல்லை என்றான்.   அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும், அவன் சகோதரன் அபிசாயும் அவனை சங்காரம் பண்ணினார்கள்.  

மேலும் தாவீது

2 சாமுவேல் 3:31-36 

தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.

அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில், ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.

ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?

உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.

பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து அப்பம் புசியும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும், வேறெதையாகிலும், ருசிபார்த்தால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.

மேற்கூறிய வார்த்தையால் அப்னேருடைய மரணத்திற்காக தாவீது அழுததை கவனித்த ஜனங்கள் அப்னேரை கொன்றுபோட்டது ராஜாவினாலுண்டாதல்ல என்று  அந்நாளிலே இஸ்ரவேலரும், எல்லா ஜனங்களும் அறிந்துக் கொண்டார்கள்.  பின்னும் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி சொன்னது; இன்றைய தினம் இஸ்ரவேலின் பிரபுவும், பெரிய மனுஷனாகிய ஒருவன்விழுந்தான் என்று அறியீர்களா? என்று சொல்லவும், நான் ராஜாவாக அபிஷேகம்பண்ணபட்டவனாயிருந்தபோதிலும்; நான் இன்னும் பலவீனன்; செருயாவின் குமாரனாகிய இந்த மனுஷர் என பலத்துக்கு மிஞ்சினர்களாயிருக்கிறார்கள், அந்த பொல்லாப்பைச் செய்தவனுக்குக் கர்த்தர் அவன் பொல்லாப்புக்குதக்கதாய் பலனளிப்பாராக என்றான். 

பிரியமானவர்களே இந்த வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் கர்த்தரால் இஸ்ரவேலையும், யூதாவையும் ஒன்றாக இணைக்கும் படியாக நேரின் குமாரனகிய அப்னேரை ஆயத்தபடுத்தி தாவீதிடத்தில் அனுப்பும் போது, தாவீதின் சேர்வைகாராகிய யோவாப் பொறாமைக்கொண்டு அப்னேரை கொலைசெய்கிறான்.  இவை எதற்கு திருஷ்டாந்தம் என்னவென்றால் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக மாறும் முன்பாக போராட்டங்கள் பலமாக  வரும்.  அது தாவீதின் வசமும் வருகிறது என்றால் நம்முடைய உள்ளான மனுஷனில் நிச்சயமாக கடந்து வரும்.  ஆனால் நாம் அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் நம்முடைய உள்ளான சரீரம், கிறிஸ்துவின் சரீரமாக மாறுவதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் நம்மை ஆயத்தபடுத்தும்போது பொல்லாத துர் போராட்டங்கள் நம்முடைய ஆத்துமாவை நெருக்கி அதனை கொல்லும்படி ஏவும்.  அவ்விதம் நாம் நெருக்கப்படும்போது, நாம் விழுந்து போவோம்; கர்த்தர் தந்த கிருபைகளையும் இழந்து விடுவோம்.  ஆனால் சத்துருவானவன் கிறிஸ்துவின் சரீரத்தை அழிக்க யாரை உபயோகபடுத்துகிறானோ: அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் நிரந்தரமாக சபிக்கிறார். ஆனால் தம்முடைய பிள்ளைகளுக்காக துக்கிக்கிறார். அதுபோல் நாமும் மற்றவர்களுக்கு பொல்லாப்பு செய்தால் கர்த்தர் நமக்கும் பொல்லாப்புக்கு தக்கதாய் சரிகட்டுவார். ஆதலால் நாம் யாருக்கும் பொல்லாங்கு செய்யாதபடி ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.