தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 78:67-69
அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா,
ஆட்டுகுட்டி அடிக்கப்படுதல்: -திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் சபைக்குள்ளாக துன்மார்க்கம் எழும்பகூடாது என்பது பற்றி சில கருத்துக்கள் தியானித்தோம் துன்மார்க்கர் நீதிமானை பகைப்பார்கள்.
யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு விரோதமாக சதியோசனை செய்கிறதை அவன் சகோதரன்,
ஆதியாகமம் 37 :21
ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
அவர்களை நோக்கி அவனைக் கொல்ல வேண்டாம்.நீங்கள் இரத்தம் சிந்தலாகாது,நீங்கள் அவன் மேல் கை வையாமல் இந்த குழியில் போட்டு விடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் அவனை அவர்கள் கைக்கு தப்புவித்தான்.
அதனால் அவன் உடுத்தியிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து,அந்த தண்ணீர் இல்லாத குழியில் போட்டு விட்டார்கள்.அது வெறுங்குழியாயிருந்தது.
பின்பு அவர்கள் போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேல் கூட்டத்தைக் கண்டார்கள்.அவர்கள் பிசின் தைலத்தையும்,
கந்தவர்க்கங்களையும் வெள்ளை போளத்தையும் ஒட்டகத்தின் மேல் ஏற்றிக் எகிப்திற்கு கொண்டு போகும்படி வந்ததை கண்டார்கள்.
அப்பொழுது யூதா எனப்பட்ட சகோதரன் தன் சகோதரர்களிடம் நம்முடைய சகோதரனை கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம் என்று சொல்லி அவனை இஸ்மவேலருக்கு விற்று போடுவோம் வாருங்கள்.நமது கை அவன் மேல் படாதிருப்பதாக,அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாயிருக்கிறானே என்றான்.அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.
இவ்விதமாக சொன்னதை கேட்டு அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிற போது அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு கொண்டு போனார்கள்.
ஆனால், ரூபன் குழியில் வந்து பார்த்தபோது யோசேப்பு குழியில் இல்லாததினால் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு தன் சகோதரரிடத்தில் இளைஞன் இல்லையே, ஐயோ ! நான். எங்கே போவேன் என்றான்.
ஆதியாகமம் 37:32
பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, துக்கித்துக்கொண்டிருந்தான்.
அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும்,தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு யோசேப்பு மூலம் திருஷ்டாந்தபடுத்துகிற காரியம் என்னவென்றால் இஸ்ரவேல் சபை துன்மார்க்க ஜீவிதத்திலிருந்து விடுதலை பெற்று தேவனோடு ஐக்கிய படும்படியாக தேவன் தரிசனத்தோடு யோசேப்பை இளம் பிராயத்திலிருந்து நடத்தி வந்து தன் சகோதரரால் பகைக்கப்பட்டு எகிப்திற்கு விற்கப்பட்டு,அங்கு கொண்டு போகபடுகிறான். அவன் எகிப்திற்கு கொண்டு போக பட்டதினால் எகிப்தில் பார்வோனின் பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்துக்கு கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.
ஆதியாகமம் 39:2-5
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:
யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் யோசேப்பை ஜீவரட்சனைக்காக எகிப்திற்கு அனுப்பிவிடுகிறார் என்பதும் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு,தன் தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் ஒரு பெரிய ரட்சிப்பை அருளும் படியாக தேவன் யோசேப்பை முன்குறித்து திருஷ்டாந்தப்படுகிறார்.
எப்படியெனில் யோசேப்பின் அங்கியை வெள்ளாட்டுகடாவின் இரத்ததால் தோய்த்து எடுத்தார்கள். ஏனெனில் நமக்காக குமாரனாகிய கிறிஸ்து ஆட்டுக்குட்டியாக பலியிடப்படுவார் என்பதும்,
வெளிப்படுத்துதல் 19:13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
என்றும் எழுதபட்டிருக்கிறது.
மேலும் பன்னிரண்டு கோத்திரத்திலும் முத்திரைப்போடப்பட்டவர்கள் யாரென்றால் தங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் மட்டுமே. அதனால் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் கிறிஸ்துவின் இரத்தத்தால் மாத்திரமே மீட்பு உண்டு என்பதை தேவன் நமக்கு ஜீவரட்சனைக்காக யோசேப்பை எகிப்திற்கு கொண்டு வந்து நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறாரே அல்லாமல் இது உலக பழக்கவழக்கங்களை பற்றியது அல்ல,என்பது தெரியவருகிறது.
இவ்விதமாக ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தால் தோய்த்து வெளுத்தவர்கள் மட்டுமே.
வெளிப்படுத்துதல் 7:15-17
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்
இவ்விதமாக, தேவன் யாவரையும் ஆசீர்வதிக்கிறார். ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை.