தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 8:32
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சத்தியத்திற்கு சாட்சியாக வாழவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்கு மாறான தீமைகள் செய்யாதபடி ஜாக்கிரதையாக காணப்படவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 4:1-7
அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.
சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவரான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.
சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,
கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
அவன் தன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது, இவர்கள் உள்ளே போய், அவனைக் குத்திக் கொன்றுபோட்டு, அவன் தலையை வெட்டிப்போட்டார்கள்; பின்பு அவன் தலையை எடுத்துக்கொண்டு, இராமுழுதும் அந்தரவெளி வழியாய் நடந்து,
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதை சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுப்போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள். சவுலின் குமாரனுக்கு இரண்டு படைதலைவரான பானா, ரேகாப் என்பவர்கள் இருந்தார்கள்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோன் குமாரர்கள், பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் காணப்பட்டது. பேரோத்தியன் கித்தாயீமுக்கு ஓடிப்போய் அங்கே இந்நாள்வரைக்கும் சஞ்சரிக்கிறார்கள். மேலும் சவுலுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; அவன் கால் முடமாவதற்கு காரணம் என்னவென்றால்; சவுலும், யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரேலிலிருந்து வருகிற போது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போகிற போது அவசரத்தில் விழுந்து முடமானான்; அவனுடைய பெயர் மேவிப்போசேத். பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய பானாவும், ரேகாவும போய் மத்தியானவேளையில் வெயில் நேரத்தில் படுக்கையின் மேல் சயனித்திருக்கையில் அவன் வீட்டிற்குள் கோதுமை வாங்க வருகிறவர்கள் போல் நடுவீடுமட்டும் வந்து; இஸ்போசேத்தை வயிற்றிலே குத்திப் போட்டார்கள்; பின்பு அவர்கள் இருவரும் தப்பி ஓடிப்போனார்கள். அவன் தன் பள்ளி அறையிலே படுத்திருக்கும போது, இவர்கள் உள்ளே போய், அவனை குத்திக்கொன்று போட்டு; அவன் தலையை வெட்டி எடுத்து இரா முழுவதும் அந்தரவெளி வழியாய் நடந்து எப்ரோனிலிருக்கும் தாவீதினிடத்தில் இஸ்போசோத்தின் தலயை கொண்டு வந்து
2 சாமுவேல் 4:8
எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய பிராணனை வாங்கத்தேடின உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.
மேற்கூறிய வார்த்தைகளை கேட்ட தாவீது அவர்களுக்கு பிரதியுத்தரவாக என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் விலக்கி மீட்ட கர்த்தருடய ஜீவனை கொண்டு சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்லி சவுலும், யோனத்தானும் மரித்த செய்தியை நற்செய்தியாக சொல்ல தாவீதினிடத்தில் வந்தவனை சிக்லாகிலே கொன்றுப் போட்டதையும், தம்முடைய வீட்டிலே தமது படுக்கை அறையிலே படுத்திருந்த நீதிமானைக் கொலைசெய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்ய வேண்டும்? ஆதலால் இப்போதும் நான் அவருடைய இரத்தபழியை உங்கள் கைகளில் வாங்கி, உங்களை பூமியில் இராதபடி அழித்துப்போடுவேன் என்று சொல்லி அவர்களை கொல்லவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து, எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப் போடவும் தன் சேவகருக்கு கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம் பண்ணினார்கள்.
பிரியமானவர்களே இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும் போது தாவீதின் சிங்காசனத்திற்கு; (கிறிஸ்துவின் சரீரமாகிய சபை) விரோதமாக யார் செயல்பட்டாலும் கர்த்தர் அவர்களை நியாயந்தீர்க்கிறவர் என்பதையும், தாவீதின் சிங்காசனம் நம் உள்ளத்திலும், அதன் உணர்வுகள் நீதியுள்ளவைகளாக காணபபடவேண்டும் என்பதும், அவ்விதம் காணபடாமல் இருக்குமானால் சவுலின் ஆவி அவர்களில் வளர்ந்துக்கொண்டே இருக்கும் என்பதற்காக, திருஷ்டாந்தத்தோடு சவுலின் குமாரர்கள் கொல்லப்படுகிறார்கள்.ஏனென்றால் சவுலின் ஆவி ஒருவர் மேல் வந்து விட்டால் பொறாமை உள்ளத்தில் எழும்பி தாவீதின் சிங்காசனமாகிய கிறிஸ்துவின் சத்தியத்திற்கு விரோதமாக செயல்படுவார்கள். ஆதலால் நாம் ஒருபோதும் சத்தியத்திற்கு விரோதிகளாக இல்லாமல் சத்தியத்திற்கு சாட்சியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.