தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப் பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சீயோனாக இருக்கும்படியாக கண்கள் திறக்கபட்டவர்களாகவும், கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சத்தியத்திற்கு சாட்சியாக வாழவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
IIசாமுவேல் 5:1-10
அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.
தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
மேற்க்கூறிய வசனங்களின் பிரகாரம் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் மரணத்திற்கும், சவுலின் சேவகராகிய அப்னேரின் மரணத்திற்கு பின்பு இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கும் தாவீதினிடத்தில் வந்து: இதோ நாங்கள் உம்முடைய எலும்பும், உம்முடைய மாம்சமுமானவர்கள். சவுல் எங்கள் மேல் ராஜாவாயிருக்கும் போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே, இஸ்ரவேலை நீ மேய்த்து இஸ்ரவேலின் மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்று சொன்னதுமன்றி; இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லாம் எப்ரோனிலிருக்கும் தாவீதிடத்தில் வந்தார்கள். பின்பு தாவீது ராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கைப் பண்ணின பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். தாவீது இஸ்ரவேலில் ராஜாவாகிற போது முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அவன் எப்ரோனிலே யூதாவின் மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் முப்பத்து மூன்று வருஷமும் ராஜ்யபாரம் பண்ணினான். தேசத்தில் குடியிருக்கிற எபூசியர் மேலே யுத்தம் பண்ண ராஜாவானவன் தன் மனுஷருடனேக்கூட எருசலேமுக்கு போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி; தாவீதை நோக்கி நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை, குருடரும், சப்பாணிகளும் உன்னை தடுப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையை பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. எவன் சாலகத்தின் வழியாய் ஏறி எபூசிரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறியடிக்கிறானோ அவன் தலைவனாயிருப்பான்; என்று தாவீது சொல்லியிருநதான்; அதனால் குருடரும், சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்வார்கள். அந்த கோட்டையிலே தாவீது வாசம் பண்ணி, அதனை தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ துவக்கி,உட்புற மட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலை கட்டினான். தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடிருந்தார்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகள் தியானிக்கும் போது நம்முடைய உள்ளத்தில் சவுலின் ஆவியால் உண்டாயிருந்த எல்லாப் பொல்லாப்புகளும் மாற்றபட்டு தாவீதின் சிங்காசனமாகிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபை உண்டாகுகிறது. இப்படியாக வருகிற அபிஷேகம் கர்த்தரால் நமக்கு தருகிற அபிஷேகம். இந்த ஸ்தலம் எப்ரோன் என்று கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். இந்த சரீரமாகிய சபைக்குள் எந்த எபூசியனும் இராதபடி கர்த்தர் யுத்தம் பண்ணுகிறார். எப்படியெனில் எபூசியன் என்றால் கண் திறக்கப்படாமல் இருக்கிறவர்களும், சப்பாணிகளும்; இவர்கள் கர்த்தரின் சொல்லுக்கு கீழ்படியாமல் கண் குருடாயிருப்பார்கள். இந்த காரியங்களை ஜெயிக்கிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
மத்தேயு 15:29-31
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகள் நம் உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆவியை உடைய ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிற விடுதலை; இப்படியாக பெற்றுக்கொள்ளும் போது தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. அப்போது நமக்கு தலையாயவர் கிறிஸ்து. அவரே எல்லாவற்றிற்கும் தலைமையானவர்; முதற்பேறானவராக நம்மில் உயிர்தெழும்புகிறார். மேலும் நம் உள்ளத்தில் கிறிஸ்து மற்ற ஜாதிகளையும் அவர் காலின் கீழ் மிதித்து பாதாளத்தையும், மரணத்தையும் ஜெயித்தவராக எழும்பினால் நாமே சீயோனாகிறோம்; நம்முடைய உள்ளான மனுஷன் சீயோன் நகரம். இதனை திருஷ்டாந்தப்படுத்தியே, தாவீது சீயோன் கோட்டையை பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று என்றும், அதற்கு பிறகு கண் திறக்கபடாதவர்களும், சப்பாணிகளும் (தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள்) அங்கு இல்லை என்பது விளங்குகிறது. இவ்விதமாக கிறிஸ்துவின் உயிர்தெழுதலை நம் உள்ளத்தில் பெற்றுக்கொண்டால், நாம் நீதியின் விளைச்சலை வர்த்திக்க செய்து, அனுதினம் ஆவிக்குரிய வளச்சியை அடைய முடியும். இவ்விதம் ஆவிக்குரிய காரியங்களில் உண்மையுள்ளவர்களாக இருக்கும்படியாக ஒப்புகொடுப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.