தேவனுக்கே மகிமையுண்டாவதாக
II கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நித்திய வீடாகும் படியாக பெலிஸ்திய கிரியைகளை அழிப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சீயோனாக இருக்கும்படியாக கண்கள் திறக்கபட்டவர்களாகவும், கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது
IIசாமுவேல் 5:11-25
தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,
அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,
எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள்.
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படிவந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.
பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.
தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.
மேற்கூறிய வசனங்களில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியில், நாம் சீயோனாக மாறுவது எப்படி என்பதை குறித்து நமக்கு கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி விளக்குகிறார். சீயோனாக மாறிய பின் தான் நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக விளங்குகிறோம். அவ்விதம் நாம் மாறிவிட்டால் தீருவின்ராஜா நம் உள்ளத்தில் வருவான் என்பதனை குறிதது கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் தாவீது சீயோன் கோட்டையை பிடித்து, அந்த இடத்தை தாவீதின் நகரம் ஆக்கின பின்பு தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், கேதுரு மரங்களையும், கல் தச்சரையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டை கட்டினார்கள். கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்து அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு எருசலேமில் இன்னும் அதிமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; அதோடு அதிக குமாரரும குமாரத்திகளும் பிறந்தார்கள். எருசலேமில் பிறந்தவர்கள்
IIசாமுவேல் 5:14-16
எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,மேலும் தாவீது இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான் என்று பெலிஸ்தர்கள் அறிந்த போது, அவனை தேடும்படி வந்தார்கள். ஆனால் தாவீது ஒரு அரணிப்பான இடத்திற்கு போனான். பெலிஸ்தர்கள் ரெப்பாயீம் பள்ளதாக்கில் பாளமிறங்கினதை அறிந்த தாவீது;கர்த்தரிடத்தில் பெலிஸ்தருக்கு விரோதமாக போகலாமா? அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று கேட்டதற்கு; அவர் நீ போகலாம், அவர்களை நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்றார். அப்போது தாவீது
IIசாமுவேல் 5:20, 21
தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது பெலிஸ்தரை துரத்தியடிக்கிறதை எழுதப்பட்டிருக்கிறது. அவ்விதமாக துரத்தி அடித்த இடத்திற்கு பாகால் பிராசீம் எனறு பேரிட்டான். அல்லாமலும் பெலிஸ்தர்கள் தங்கள் விக்கிரகங்களை விட்டு ஓடிப்போனார்கள் அவைகளை தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள். பெலிஸ்தர்கள் திரும்பவும் ரெப்பாயீம் பள்ளதாக்கிலே பாளயமிறங்கினார்கள். தாவீது மீண்டும் கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு கர்த்தர் நேராக போகாமல் அவர்களுக்கு பின்னாலே சுற்றி, முசுகட்டை செடிகளுக்கு எதிரேயிருந்து அவர்கள் மேல் பாய்ந்து, அந்த செடியின் நுனியிலே செல்கிற இரைச்சலைக் கேட்டு, சீக்கிரமாய் எழுந்து போய், பெலிஸ்தரை முறியடிக்க கர்த்தர் உனக்கு முன்பாக கடந்து போவார் என்று கட்டளையிட்ட பிரகாரம், தாவீது செய்து பெலிஸ்தரை கேபா துவக்கிக் கேசேர் எல்லை மட்டும் முறிய அடித்தான்.
பிரியமானவர்களே கர்த்தர் நம்மை அவருடைய வீடாக மாற்றுவதும் , அது நித்திய வீடாகிய புதிய எருசலேமாகவும், நாம் ஆசீர்வதிக்கப்படும் போது முதலில் பெலிஸ்திய ஆவிகள் நம்மை ஆவிக்குரிய கனிகளை அழிக்கும்படி நம் உள்ளத்தில் கிரியை செய்து, பல உலக ஆசைகளை கொண்டு வந்து நம்மை கிறிஸ்துவை விட்டு தூரமாக செய்யும். மேலும் எப்போதெல்லாம் நாம் உலகத்தையும், உலகத்தின் ஆசைகளையும் விட்டு ஜெயம் பெற்றுக்கொள்கிறோமோ; அப்போதெல்லாம் மீண்டும், மீண்டும் உலக ஆசை இச்சைகளை மனதில் எழுப்பிக் கொண்டிருக்கும்; அதனைத்தான் மீண்டும் மீண்டுமாக தாவீதின் வாழ்வில் பெலிஸ்தியன் பாளயமிறங்குகிறான் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனை திருஷ்டாந்தப்படுத்தியே தாவீது ஜெயம் பெற்று பாகால்பிராசீம் என்று பெயரிட்டு அங்குள்ள விக்கிரகங்களை அக்கினியால் சுட்டெரிக்கிறான். இவ்விதமாக நம் உள்ளத்திலும் உள்ள விக்கிரகங்களை கர்த்தர் சுட்டெரிக்கும்படியாக பரிசுத்த அக்கினியானவர், நம் உள்ளத்தில் இறங்கி அன்னிய அக்கினியை சுட்டெரித்து, நம்மை சுத்தம் செய்து,பரிசுத்தப்படுத்துவார். இவ்விதமாக நாம் பரிசுத்தபடும்போது, நம்மை புது எருசலேமாக கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.பின்பு இதன் மூலம் கர்த்தரின் வசனம் அநேக உள்ளங்களில் கடந்து போய், அவர்களை உருவாக்கி,அநேக குமாரரும் குமாரத்திகளையும் கிறிஸ்து பெற்றெடுக்கிறார். ஆதலால் பெலிஸ்தரை ஜாக்கிரதையாக நாம் நம்முடைய உள்ளத்திலிருந்து துரத்துகிறவர்களாக இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து பெலிஸ்திய கிரியைகளை அழிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.