தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எந்தவிதமான துணிகரமான பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நித்திய வீடாகும் படியாக பெலிஸ்தருடைய கிரியைகளை அழிப்போம் என்பதனை குறித்து நாம் தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
11சாமுவேல் 6:1-8
பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.
மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில், தாவீது பெலிஸ்தரை கேபா துவக்கி கேசர் எல்லைமட்டும் முறிய அடித்த பின்பு இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் முப்பதினாயிரம் பேரைக் கூட்டி கேரூபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுக்கொள்ளபடுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டு வரும்படி, அவனும், அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய் தேவனுடையப் பெட்டியை புது இரதத்தில் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்த புது இரதத்தை நடத்தினார்கள். அந்த இரதத்தை நடத்தி வரும்போது பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்தான். தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீத வாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும் கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு போனார்கள். ஆனால் நாகோனின் களம் இருந்த இடத்தில் வந்த போது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியை , தன் கையை நீட்டி அதனை பிடித்தான். கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபம் மூண்டது அவனுடைய துணிவினிமித்தம் கர்த்தர் அவனை அங்கு அடிக்கிறார்; அங்கே அவன் பெட்டியண்டையில் செத்தான். கர்த்தர் ஊசாவை அடி்தததினிமித்தம் விசானபட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்த நாள் மட்டும் வழங்கி வருகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான்.
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்துகள் என்னவென்றால் கர்த்தர் நம்மை அவருடைய வீடாக எழுப்பிய பின், கர்த்தருடைய பெட்டி என்பது கர்த்தரின் வசனத்திற்கு ஒப்பாக திருஷ்டாந்தப்படுத்துகிறார். நம்முடைய வாழ்வில் எப்போதும் கிறிஸ்துவின் வசனம் உள்ளத்தில் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்; அதனை தான் கர்த்தருடைய பெட்டி இரதத்தில் ஏற்றி மாடுகள் சுமந்து வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை நடத்தி வந்தவர்கள் பரிசுத்தம் இல்லாததால் மாடுகள் மிரளுகிறது; அதனை ஊசா துணிந்நு பிடித்ததினால் கர்த்தர் அந்த இடத்தில் வைத்தே அடிக்கிறார்; அவன் பெட்டியண்டையில் சாகிறான். இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறது என்னவென்றால் தேவனுடைய சபையை கர்த்தர் நடத்தி வருகிற விதம் எடுத்துகாட்டப்படுகிறது; அதனால்கர்த்தரின் வசனம் காத்துக்கொண்டு பரிசுத்தமாக கர்த்தரை பாடி, துதித்து, மகிமைபடுத்தி ஆராதிக்க வேண்டும் என்றும், பரிசுத்தமில்லாமல் அவரை தரிசிக்க முடியாது என்பதையும் காட்டுகிறார். மேலும் நாம் தேவனுக்கு முன்பாக ஒரு போதும் துணிந்து பாவம் செய்யக்கூடாது; ஆனால் துணிவோடு பாவம் செய்தால் கர்த்தரின் தண்டனை தீவிரமாய் நடக்கும்.மேலும் பரிசுத்தம் இல்லாமல் தேவனுக்கு ஆராதனை செலுத்தினால் கர்த்தர் நம்மை தண்டிக்கிறவராக காணப்படுகிறார். ஆதலால் நாம் ஒருபோதும் துணிந்து பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்வோம். மேலும் நாம் எப்போதும் பரிசுத்தமாக இருக்கும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.