தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 100:1

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய வசனங்கள் உட்கொண்டு ஆத்துமாவில் கெம்பீர சத்தத்தோடு கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எந்தவிதமான துணிகரமான பாவம் செய்யாதபடி நம்மை காத்துக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றல் 

2 சாமுவேல் 6:8-15 

அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.

தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,

அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கையில் ஊசா துணிகரமான பாவத்தை கர்த்தருக்கு முன்பாக செய்ததினால் கர்த்தர் அவனை அடித்து அவன் செத்து போனான் என்பதனை அறிகிறோம்.  மேலும் தாவீது அதனால் விசனபட்டு அந்த இடத்திற்கு பேரேஸ் ஊசா என்கிற பெயரிடுகிறான்.  அல்லாமலும் கர்த்தர் ஊசாவை அடித்ததினால் தாவீது பயந்து தேவனுடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி அதை தன்னுடைய வீட்டிற்கு கொண்டு போக மனதில்லாமல் கித்தியனாகிய ஓபேத் ஏதோமுடைய வீட்டிலே கொண்டு போய் வைத்தான்.  ஆனால் அங்கு கர்த்தடைய பெட்டி மூன்று மாதம் வரைக்கும் இருக்கையில் கர்த்தர் ஓபேத் ஏதோமையும், அவன் வீட்டார் அடைவரையும் ஆசீர்வதித்தார்.  தேவனுடைய பெட்டியின் காரணமாக கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டை ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்ட போது; தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத் ஏதோமுடைய வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியோடே கொண்டு வந்தார்கள்.  கர்த்தருடைய பெட்டியைச் சமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்த போது, மாடுகளையும் ஆடுகளையும் பலியிட்டான்.  தாவீது சணல் நூல் ஏபோத்தை தரித்துக்கொண்டு, தன் முழு பலத்தையும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.  அப்படியே தாவீதும் இஸ்ரவேல் புத்திரராகிய சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியை கெம்பீர சத்தத்தத்தடும் எக்காள தொனியோடும் கொண்டு வந்தார்கள்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின் கருத்து  என்னவென்றால், கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்துக்கு காட்டிய பாதைகளின் விளக்கங்கள்  கர்த்தருடைய வசனத்தின் படி நாம் நடக்கும் போது நம்முடைய  உள்ளமாகிய வீடு ஆவிக்குரிய கனிகளினாலும், வரங்களினாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்பதையும். அதனை அநேகர்அறியாமல் இருக்கிறதால் உள்ளமாகிய வீட்டில் அவருடைய வசனத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை தாவீது கர்த்தருக்கு பயந்து அவன் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறான் என்பதனை திருஷ்டாந்தபடுத்துகிறார்; ஆனால் ஓபேத் ஏதோமின் வீட்டில் தேவனுடை பெட்டி வைக்கபட்டதால் அந்த வீடு ஆசீர்வதிக்கப்பட்டதை அறிந்து அதனை மகிழ்ச்சியோடு தாவீதின் நகரத்திற்கு கொண்டு வந்தான். இவை கர்த்தருக்கு வசன பிரகாரம் சத்தியத்தின்படி நாம் நம்மை காணிக்கையாக செலுத்தி அர்பணித்து, நம்முடைய முழு பலத்தோடும், முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், கெம்பீர சத்தத்தோடு கர்த்தரை ஆர்ப்பரிக்க வேண்டும் என்பதற்காக விளக்குகிறார்.  இவ்விதமாக நாம் உள்ளான மனுஷனில் பெலனடைந்து, நம் ஆத்துமாவில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.