தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 84:4
உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நித்திய வீடாக மாற்றுகிறார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து நீங்காத நித்திய கிருபையை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 7:18-21
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக்குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே.
இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர்.
உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவுசெய்தீர்.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளில் கர்த்தர் நாத்தானோடு தாவீதினிடத்தில் அறிவிக்க வேண்டிய காரியத்தை அறிவிக்க சொல்லி முடித்த பின்பு நாத்தான் அந்த காரியங்களை தாவீதினிடத்தில் சொல்லி முடித்த பின்பு, தாவீது ராஜா, கர்த்தரின் சமூகத்தில் உட்பிரவேசித்து சொன்னது கர்த்தர் தாவீதுக்கு செய்த நன்மைகளை சொல்லி, இவ்விதமாக கர்த்தர் தாவீதுக்கு செய்ய நான் எம்மாத்திரம்? என்று சொல்லி தாவீது கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்கு கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் உம்முடைய அடியானுடைய வீட்டை குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்து செய்தியை மனுஷர் முறைமையாய் சொன்னீரே என்று சொல்லி தான் இனி கர்த்தரிடத்தில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. கர்த்தராகிய ஆண்டவர் உமது அடியானை அறிவீர் என்று சொல்கிறான்.பின்னும் தாவீது உம்முடைய வாக்குதத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்த பெரிய காரியங்களையெல்லாம் அடியானுக்கு அறிவிக்கும்படிக்கு தயவு செய்தீர்.
ஆகையால் தாவீது,
2 சாமுவேல் 7:22-26
ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்குமுன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளினால் தாவீது கர்த்தரை மகிமைபடுத்துகிறான். எப்படியென்றால் கர்த்தர் எல்லாரிலும் பெரியவர் என்றும், அவர் மட்டும் தான் தேவன் என்றும், தேவரீருக்கு நிகரானவர் யாரும் இல்லை என்றும், பூலோகத்து ஜாதிகளில் இஸ்ரவேலாகிய ஒரே ஜாதியை தேவன் தமக்கு முன்பாக மீட்கிறதற்கும், தமக்கு கீரத்தி விளங்க பண்ணுவதற்கும், எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்த ஜனத்திற்கு முன்பாக பயங்கரமான காரியங்களை நடத்தி, தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும் மகிமையை விளங்க செய்ததையும், இஸ்ரவேலர் என்றைக்கும் தம்முடைய ஜனமாயிருப்பதற்கும், அவர்களை திடப்படுத்தி; கர்த்தரே அவர்களுக்கு தேவனானீர் என்றும், இப்போதும் உமது அடியேனையும்; அடியேனுடைய வீட்டை குறித்து சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலவரப்படுத்த தேவரீர் சொன்னபடி செய்தருளும் என்றான். அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் தேவனானீர் என்று சொல்லி, அவர் நாமம் என்றென்றைக்கும் மகிமையோடு விளங்கும்; அடியேனாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக. இவ்விதமாக தாவீது தேவனுக்கு முன்பாக விண்ணப்பம் பண்ணி; இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே,நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம், தேவரீர் உமது அடியேனுக்கு இந்த நல் விசேஷங்களை வாக்குதத்தம் பண்ணினீர். இப்போதும் உமது அடியேனின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தாகிய ஆண்டவராகிய தேவரீர் ,அதை சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உம்முடைய அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் கர்த்தர் உனக்கு வீடு கட்டுவேன் என்று சொன்னது நித்திய வீட்டின் திருஷ்டாந்தம். இவ்விதமான ஒரு பெரிய காரியம் நாம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் அருளுகிற ஈவு. இந்த ஈவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நாம் கர்த்தரின் சத்திய வார்த்தைகள் பிரகாரம் நடக்க வேண்டும். நம்மை முழுமையாக அர்ப்பணித்து, நாம் அவருடைய ஆலயமாக விளங்கி, அதனுள் நாம் மகிமையால் நிறைந்து,மறுரூபமாகி,ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்பவர்களாகவும், ஆதாயப்படுத்திக்கொண்ட தேவனுடைய ஜனங்களை தேவனுக்குள் திடப்படுத்தி, அவர்களுக்கு கர்த்தர் தாமே தேவனாயிருப்பதும் இவ்விதமாக நாம் நம்மை ஆயத்தபடுத்திக்கொள்வோமானால் கர்த்தர் நமக்குள் நித்திய வீட்டை நிலைவரப்படுத்திக்கொள்ளும் போது, அவருடைய நாமம் நம்மில் மகிமைப்படுவதாக. அதனைக்குறித்து தாவீது திருஷ்டாந்தத்தோடு உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக என்றும், உனக்கு வீடு கட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்: ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தை செய்ய எனக்கு மனதைரியம் கிடைத்தது. இவ்விதமாக நாமும் கர்த்தரின் பாதத்தில் அறிக்கை செய்து அவர் வாக்குதத்தத்தை சுதந்தரித்து கொள்ளும்படியாக
2 சாமுவேல் 7:29
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளினால், அவ்விதம் நாமும் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.