தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 4: 8

சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரால் பாதுகாக்கப்படுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கர்த்தர் நம்மை நித்திய வீடாக மாற்றுகிறார் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 8:1-8

இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,

அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,

தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் தாவீதின் வீடு என்று சொல்லப்படுவது, நித்திய வீட்டின் திருஷ்டாந்தமாக விளக்கப்படுகிறது.  ஏனென்றால் அது கர்த்தருக்கு முன்பாக நிலைநிற்கிற வீடாக, என்றென்றைக்கும் கர்த்தர்க்கு முன்பாக இருக்கிற வீடாகவும், ஆசீர்வதிக்கப்பட்ட வீடாகவும் கர்த்தருடைய மகிமை அதில் விளங்குகிறதாகவும் இருக்கிறது; அது தான் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு திருஷ்டாந்தம்.  மேலும் நாம் பார்க்கும் போது தாவீது இயேசுவை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறார்.  இவ்விதமாக தாவீது தேவனால் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கிறான். இதற்கு பின்பு தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனை காப்பாற்றினார் என்று வசனத்தில் வாசிக்கிறோம்.  என்னவென்றால் இதன் பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களை கீழ்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக் கொண்டான்.  அவன் மோவாபியரையும்  முறிய அடித்து, அவர்களை தரைமட்டும் பணியப் பண்ணி, அவர்கள் மேல் நூல் போட்டு, இரண்டு பங்கு மனுஷரை கொன்றுப்போட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்.  இவ்விதமாய் மோவாபியர் தாவீதை சேவித்து, அவனுக்கு கப்பங்கட்டுகிறவர்களானார்கள். ரேகாபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையை திரும்ப தன் வசமாக்கிக் கொள்ளபோகையில், தாவீதுஅவனையும் முறிய அடித்து அவனுக்கு இருந்த எல்லா இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு மற்றவைகளையெல்லாம்  துண்டித்து போட்டான்; இதனை கண்ட தமஸ்கு பட்டணத்தாராகிய சீரியர் சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசாருக்கு உதவி செய்ய வந்தார்கள். தாவீது சீரியரில் இருபத்தீராயிரம் பேரை வெட்டிப்போட்டு சீரியாவிலே தாணையங்களை வைத்தான்.  சீரியர் தாவீதை சேவித்து அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடமெல்லாம் கர்த்தர் தாவீதை காப்பாற்றினார். ஆதாதேசருடைய பொற் பரிசைகளை தாவீது எடுத்து அதை எருசலேமுக்கு கொண்டு வந்தான்.  மேலும் ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும், பேரேத்தாயிலுமிருந்து தாவீது மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். 

பிரியமானவர்களே  மேற்கூறப்பட்ட வசனங்களில் நாம் தியானிக்கும் போது கர்த்தருடைய சத்தத்திற்கு நாம் கீழ்படிந்து நித்திய வீடாகும் போது, நம்மை முழுமையும் சத்துருவின் போராட்டத்திலிருந்து வெற்றி சிறக்க பண்ணுகிறவராயிருக்கிறார். அதுவுமட்டுமல்லாமல் பெலிஸ்தியன் ஒரு போதும் நம்மை மேற்க்கொள்ள கர்த்தர் விடமாட்டார். ஏனென்றால் நம்மில் கர்த்தர் எப்போதும் வாசம் பண்ணுவார், எப்படியென்றால் பெலிஸ்திய கிரியைகளாகிய உலக அலங்காரங்கள் அழிக்கப்பட்டு,மாம்ச சிந்தைகளை அவர் கீழ்படுத்தி நம்முடைய உள்ளத்தில் அநேக முக்கியமான இடங்களை கர்த்தர் பிடித்து கொள்ளுகிறார், பின்பு நம்மில் இருக்கிற பெருமையான காரியங்கள் தான் மோவாபியருக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  மேலும்  மோவாபின் கிரியைகள் உள்ளத்திற்குள் இருக்குமானால் நம்முடைய ஆவிக்குரிய கனிகள் நஷ்டமடையும். மேலும் கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்; 

அதனை குறித்து,

ஏசாயா 15:5-9 

என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.

நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது.

ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.

கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கூறப்பட்டவைகள் மூலம் கர்த்தர் நம்மை தண்டிக்கிறாரென்பதனை நாம் அறிந்து நம்முடைய வாழ்விலிருக்கிற பெருமைகளை அகற்ற வேண்டும்;அதற்காகவே கர் த்தர் நமக்கு தாவீதை வைத்து திருஷ்டாந்தபடுத்துகிறார்.  இவ்விதமாக சீரியராகிய ஜாதிகளின் கிரியைகளையும் அழித்து நமக்குள் கிறிஸ்து வெளிப்பட்டு உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறார்.  இவ்விதமாக கர்த்தர் நம்மை எல்லா இடங்களிலும் காப்பாற்றுகிறார்.  அதுமட்டுமல்ல கர்த்தர் தம்முடைய சத்தியத்தின் படி நடக்கவும், நம்மேல் அவருடைய ஆலயத்தின்  மகிமையையும் விளங்க பண்ணுகிறார்.  இதனை போல் நாம் எப்போதும் கர்த்தருக்கு பிரியமான ஆராதனை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.