தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 77:14-15
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.
யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.
நம்முடைய ஆத்துமா மீட்பு - கிறிஸ்துவால்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதிகள் உங்கள் யாவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம். யோசேப்புடைய வாழ்க்கையில் தன் சகோதரர்கள் பொறாமையினால் யோசேப்பை இஸ்ரவேலருக்கு விற்கிறதை பார்க்கிறோம். அதே போல் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றும், கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் தங்கியிருக்கிறார் என்று அறிந்தும் பொறாமையினால் அவருடைய ஜனத்தாரால் அவர் பகைக்கப்பட்டு,புறக்கணிக்கப் படுகிறார் என்று பார்க்கிறோம். ஆனால் அநேகம் பேர் அவர் அதிகாரமுடையவராய் போதித்தபடியினாலும், அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ததினாலும் பிசாசுகள் துரத்துகிறார்,வியாதியுள்ளவர்களுக்கு சுகமளிக்கிறார் என்றதாலும், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினதினாலும் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்ஆனால் அவர் வேதபாரகராலும், பரிசேயராலும், யூதராலும் துன்பப்படுத்தப்படுகிறதை நாம் பார்க்கிறோம்.இவ்விதமாக நம் வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் சத்துருவால் மிகவும் துன்பப்படுத்தப்படுவோம். ஆனால் இயேசுகிறிஸ்து எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்து உலகத்தில் வெற்றி கண்டார். உலகத்தை ஜெயித்தார். நம்மையும் உலகம் பகைக்கும் அதனால் தான் இயேசு சொல்லுகிறார்.உலகம் என்னை பகைத்தது,உலகம் உங்களையும் பகைக்கும் என்று சொல்கிறார்.
யோசேப்பை பொறாமையினால் இஸ்மவேலருடைய கையில் விற்று இஸ்மவேலர் எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்தியார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
பின்பு யோசேப்பை காட்டு மிருகம் பட்சித்தது என்று யாக்கோபு நினைக்கும்படியாக யோசேப்பின் அங்கியை வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்தை தோய்த்து அனுப்புகிறதை பார்க்கிறோம்.
ஆனால் ,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார் என்றால் அவருடைய வஸ்திரம் ஏன் இரத்ததால் தோய்க்கப்பட்டது என்றால் நம்முடைய ஆடம்பரமான பாவ வாழ்க்கை தான் அதற்கு காரணம்.
என்னவெனில் யோசேப்புக்கு பலவருண அங்கியை யாக்கோபு உடுத்தியதால் தேவன் அவனை சகோதரர் கையில் ஒப்புக் கொடுக்கிற திருஷ்டாந்தம் விளங்குகிறது. அதுபோல் நம் பாவங்கள், சாபங்கள் எல்லாவற்றிற்காகவும் நம் இயேசு சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுக்கபடுகிறார் என்பது தெரியவருகிறது. அவர் மூலம் நமக்கு நல்ல ஒரு இரட்சிப்பை தேவன் அருளி செய்கிறார் என்பது மிக முக்கியமான காரியம்.
ஏசாயா 63:1-5
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.
உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன?
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.
நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.
இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் நம் ஆத்துமாவை இரட்சிக்கும் படியாக நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே நம்மளில் இருந்து எழுந்தளிவருகிறவராக, சாயந்திர்ந்த வஸ்திரங்களுடையவராக, அந்த வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரம் போல் வஸ்த்திரங்கள் எல்லாம் இரத்தகறைகளால் கறைபடுத்தி கொண்டவராக அவருடைய உக்கிரத்திலே நம்மை மிதித்து நமக்குள்ளில் இருந்த அவருடைய ஆத்துமாக்களை மீட்டு எடுத்து வெளிப்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது.
நம்மை ஏதோமாகிய துன்மார்க்க கிரியைகளிலிருந்து விடுவித்து இரட்சிக்கிறார்.உண்மையான இரட்சிப்பு நமக்கு வந்தால் மட்டுமே நம் வாழ்வில் சந்தோஷம் விளங்கும். உண்மையான ஆத்தும இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் எல்லா பழைய பாவ சுபாவங்கள் மரிக்கவேண்டும்.மரித்து நம் ஆத்மா கிறிஸ்துவோடு எழும்ப வேண்டும் அதுதான் நம் ஆத்துமா உயிர்ப்பு.அவருடைய வசனத்தினால் நம்மை உயிர்ப்பிக்க வேண்டும்.மேலும்,
வெளிப்படுத்தின விசேஷம்14:14-16
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.
அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்ட
இதுதான் நம் ஆத்மா அறுவடையாகிய மீட்பு,
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளை பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வந்தான்.
அக்கினியின் மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்து கருக்குள்ள அரிவாளை பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சபழங்கள் பழுத்திருக்கிறது,உமது அரிவாளை நீட்டி குலைகளை அறுத்து விடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
அப்பொழுது அந்த தூதன் அரிவாளை பூமியின் மேல் நீட்டி திராட்சபழங்களை அறுத்து தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலையில் போட்டான்.
நகரத்திற்கு புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது.அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்கள் மட்டும் பெருகி வந்தது.
இதனை வாசிக்கிற அன்பான தேவ ஜனமே,இதை கருத்தில் கொண்டு கவனமாக வாசித்து தியானியுங்கள்.ஏனென்றால் அநேகர் இரட்சிக்கப்பட்டோம் என்று இருக்கிறோம். தேவனுடைய கோபாக்கினையாக ஆலை என்று நாம் ஒவ்வொருவரும் தேவன் ஆலையை கோபத்தோடும் மிதிக்கிறார். என்றால் திராட்சப்பழம் நம்முடைய ஆத்துமா. அதிலிருந்து பெருகி வருகிற இரத்தம் நம் பாவ கறைகள். மிதிக்கிறவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய வஸ்திரத்தை நம் பாவ செயல்கள் கறைப்படுத்திவிடுகிறது. எல்லா பாவங்களையும் அவருடைய வசனத்தால் நாம் சுத்திகரிக்கும் போது அவர் இரத்தம் நம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நாம் அனுதினம் நம் வாழ்க்கையில் சுத்திகரிப்பை பெற்று அவருடைய பரிசுத்த வசனத்தால் நம்மை பரிசுத்தப்படுத்துவோமானால் நம்முடைய ஆத்தும மீட்பு அருமையாயிருக்கும்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
ஜெபிப்போம்.
-தொடர்ச்சி நாளை.