தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 63:14

கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு நித்திய கீர்த்தியை உண்டாக்கும் படி அவர் பாதையில் நடப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தரால் பாதுகாக்கப்படுவோம் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுததப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 8:9-10 

தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,

ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

மேற்கூறிய வசனங்களில் தாவீது ஆதாதேசாருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய  தோயீக் கேட்ட போது, ஆதாதேசார் தோயீயின் மேல் எப்பொழுதும் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தபடியால், தாவீதின் சுக செய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசாரோடே யுத்தம் பண்ணி அவனை முறி அடித்ததினால் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை தாவீதினிடத்தில் அனுப்பினான்.   மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும், பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளை அனுப்பினான். 

மேலும் தாவீது  2 சாமுவேல் 8:11-12 

அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,

ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.

மேற்கூறப்பட்டவைகள் என்னவென்றால் யோராம் கொண்டு வந்தவைகளை, மற்ற ராஜாக்களிடத்தில் கொள்ளையிட்டவைகளிலும் எடுத்து வெள்ளியோடும், பொன்னோடும் கர்த்தருக்கு பிரதீஷ்டைப்பண்ணினான். பின்பு தாவீது சீரியராகிய பதினெண்ணாயிரம் பேரை உப்பு பள்ளதாக்கிலே முறியடித்ததினால் கீர்த்திப்பெற்றான்.   ஏதோமிலே தாணையங்களை வைத்தான்; ஆதலால் ஏதோமில் உள்ளவர்கள் எல்லாரும் தாவீதை சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனை காப்பாற்றினார்.  இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின் மேலும் ராஜாவாயிருந்தான்.  அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நீதியும், நியாயமும் செய்தான்.  

மேலும்  2 சாமுவேல் 8:16-18 

செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.

யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்கள் யாரென்றால், இராணுவ தலைவனும், மந்திரியும், ஆசாரியர்களும், சம்பிரதியும், தலைவனும், பிரதானியுமாய் தாவீதுக்கு இருந்தார்கள். 

மேற்கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் எல்லா தேசத்து  ராஜாக்களுக்கும் மேலாக உன்னதத்தில் உயர்ந்தவராக எல்லா ராஜாக்களையும் ஜெயித்தவராக நம் உள்ளத்தில் வெளிப்படுவார் என்பதையும், மேலும் பெலிஸ்தரும், சோபாவும், ஆமாத்தும், ஏதோமியரும்,சீரியரும், கர்த்தருக்கு முன்பாக வந்து பணிந்துக்கொள்வார்கள் என்பதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப் படுத்துகிறது என்னவென்றால், நாம் ஒவ்வொருவருடைய உள்ளங்களும் இவ்வித ஜாதிகளுடைய சிந்தைகளால் சிதறப்பட்டால், நாம் கர்த்தரை முழு உள்ளத்தோடு ஆராதிக்காமல் மனதை வேறு சிந்தைகளுக்கு போய் உலகத்தோடு ஒட்டினவர்களாக கர்த்தரை விட்டு தூரம் போவோம். அல்லாமலும் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக்கொண்ட கிருபைகளை இழந்து விடுவோம். ஆதலால் கர்த்தராகிய கிறிஸ்து நித்திய கீர்த்தியாக நம்மில் மகிமைப்படும்படியாக எல்லா ஜாதிகளின் செயல்களை கர்த்தர் நம்மிடத்திலிருந்து மாற்றும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.