தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6:35

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் கிறிஸ்துவின் வசனமாகிய அப்பம் புசிக்கிறவர்களாக  இருக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு நித்திய கீர்த்தியை உண்டாக்கும் படி அவர் பாதையில் நடக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாகிய நாம் தியானிக்க போகிற வசனம் என்னவென்றால்  

2 சாமுவேல் 9:1- 13

யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.

அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.

அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.

அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.

சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.

அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.

ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.

ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.

சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலேசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.

மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.

மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் சனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் தாவீது, யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் யாராவது சவுலின் வீட்டாரில் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று கேட்கும் போது, சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனை தாவீனிடத்தில்  அழைத்து வந்தார்கள்; தாவீது அவனிடம் நீ தானா சீபா என்று கேட்டதற்கு; அவன் அடியேன்தான் என்கிறான்.  அப்பொழுது ராஜா: தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயை செய்யும்படி, அவன் வீட்டாரில் யாதொருவன் மீதியாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவிடம் இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்று சொன்னான்.  அப்போது ராஜா சீபாவிடம் அவன் எங்கே என்று கேட்டதற்கு சீபா; ராஜாவிடம் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில்  இருக்கிறான் என்றான்.  தாவீது அவனை மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.  யோனத்தானின் குமாரன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்த போது அவன் முகங்குப்புற விழுந்து தாவீதை வணங்கினான்.  தாவீது அவனை மேவிபோசேத் என்று அழைக்க அவன் இதோ அடியேன் என்றான்.  அப்போது தாவீது அவனைப் பார்த்து; நீ பயப்படாதே, உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்கு தயை செய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் திரும்ப கொடுப்பேன்; நீ என் பந்தியிலிருப்பாய் என்றபோது மேவிபோசேத் அவனை வணங்கி செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கி பார்க்கிறதற்கு உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.  அப்போது ராஜா சீபாவை அழைப்பித்து, அவனிடம் சொன்னது சவுலுக்கும், அவன் வீட்டார் யாவருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.  ஆகையால் நீ உன் குமாரரையும், உன் வேலைகாரர்களையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தை பயிரிட்டு; அதின் பலனை சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபேசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான். சீபாவுக்கு பதினைந்து குமாரரும், இருபதுவேலைக்காரரும் இருந்தார்கள்.  ஆனால் தாவீது ராஜா இட்ட கட்டளைக்கு சீபா தவறாமல் அடியேன் செய்வேன் என்றான். அப்போது ராஜா, ராஜகுமாரரில் ஒருவனைப்போல மேவிமோசேத் என் பந்தியில் சனம் பண்ணுவான் என்றான். மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான்.  சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள். மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம்சனம் பண்ணுகிறவனாயிருந்தபடியால் எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் தாவீது கேட்கிறான்;  கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தமாக யோனத்தான் நிமித்தமாக தயவுசெய்ய தக்கவன் யார் என்றான், நாம் ஒவ்வொருவருக்கும தயவு செய்கிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; என்னவென்றால் நாம் கர்த்தருக்காக உழைத்தும், அவருக்கு ஊழியம் செய்துமிருந்தாலும், கர்த்தர் அதனை ஒரு போதும் மறக்காமல், நம்முடய உலக வாழ்வு முடிந்தாலும், நம்முடைய வீட்டிலுள்ளவர்களிடம், தேவன்நமக்கு இரங்குகிறார்.  அந்த இரக்கத்தின் மேல் கர்த்தர் மிகுந்த தயவு காட்டுகிறார்.  அது மட்டுமில்லாமல் அந்த வீட்டிலிருந்து கொள்ளையாடின நிலபுலன்கள், பொருட்கள் இவற்றையெல்லாம் அதனதின் தலைமுறைகளுக்கு திரும்ப கொடுக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் அந்த தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படும்படியாக அனுதினம் பரலோக அப்பமாகிய கிறிஸ்துவின் வசனத்தினால் திருப்தியளிக்கிறார்.  மேலும் நீதிமான்களின் பிள்ளைகள் அப்பத்திற்கு இரந்து திரிவதில்லை என்று கர்த்தரின் வசனம் சொல்லுகிறது.  

இதனை குறித்து, சங்கீதம் 37:23-27 

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.

மேற்கூறிய வசன பிரகாரம்  நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் பிரியமான ஊழியர்களாக இருப்போமானால் நம்முடைய சந்ததிகள் ஆசீர்வதிக்கபடுவார்கள் என்பதும், அனுதினம் கர்த்தரின் அப்பம் புசிக்கிறவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ளவேண்டும். ஆதலால் நாமும் புதிய எருசலேமாக ஆசீர்வாதமாக  இருக்கும்படியாக;  கர்த்தருக்காக உண்மையாக ஊழியம் செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.