தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 கொரிந்தியர் 6:17 

அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய  உள்ளம் முழுமையும் ஜாதிகளின் கிரியைகளுக்கு இடம் கொடுக்காதபடி கிறிஸ்துவின் ஆவியினால் மட்டும் நிரப்பப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் அனுதினும் கிறிஸ்துவின் வசனமாகிய அப்பம் புசிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 10:1-9 

அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.

அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,

அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.

அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.

அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.

அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.

அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.

அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.

யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,

மேற்கூறிய வசனங்களில்  அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் என்பவன் மரித்துப் போனான்;  அவன் குமாரனாகிய ஆனூன் பட்டத்திற்கு வந்தான்.  அப்போது தாவீது ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்கு உதவி செய்தது போல நானும் ஆனூனூக்கு தயைச்செய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக ஆறுதல் சொல்ல தன் ஊழியக்காரரை அனுப்பினான்.  தாவீதின் மனுஷர் அம்மோன் புத்திரரின் தேசத்தில் வந்த போது, அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை பார்த்து, தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது; உம்முடைய தகப்பனாரை கனம்பண்ணுகிறதாய் தோன்றுகிறதோ? இந்த பட்டணத்தை ஆராந்து உளவு பார்த்து கவிழ்த்து போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை அனுப்பினான் என்று சொன்னார்கள்.  அப்போது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரை பிடித்து தாடியை சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்து விட்டு, மற்ற பாதியை கத்தரித்து விட்டு அனுப்பி விட்டான்.  இதனை அறிந்த தாவீது, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் எரிகோவிலிருந்து பிற்பாடு வாருங்கள் என்று சொல்ல சொன்னான்.  அப்போது அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதை கண்ட போது தாவீது யுத்தத்திற்கு புறபடுமுன்னே, அம்மோன் புத்திரர் கூலிப்படையை அழைத்தனுப்பினார்கள்.  

யாரெல்லாம் என்றால் 2 சாமுவேல் 10:6

அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்களை ஆனூன் அழைத்தனுப்பினான் என்று தாவீது கேள்விபட்ட உடனே யோவாபையும், பராக்கிரம சாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.  அம்மோன் புத்திரர் ஒலிமுகவாசலண்டையிலே அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும், ரேகாபிலிருந்து வந்த சீரியரும், இஷ்தோபிலும் வந்த மனுஷரும் வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.  ஆனால் யோவாப் இராணுவங்களின் படை தனக்கு முன்னும், பின்னும் இருக்கிறதை காண்கையில் இஸ்ரவேலிலே தெரிந்துக்கொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கை பிரித்து அதை சீரியருக்கு எதிராக அணி வகுத்து நிறுத்தி, மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக நிறுத்தும்படியாக தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து, சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உகவி செய்ய வருவேன் என்று சகோதரனாகிய அபிசாயிடம் கூறி தைரியமாயிரு: நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தை காட்டுவோம்: கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதை செய்வவாராக என்றான். யோவாபும்,அவனோடிருந்த ஜனங்களும் சீரியர் மேல் யுத்தம் பண்ண கிட்டினார்கள்: அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினா்கள்.  சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோனியர் கண்டபோது, அவர்கள் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடி பட்டணத்திற்குள் புகுந்தார்கள்.  பின்பு யோவாப் அம்மோன் புத்திரரை விட்டு திரும்பி எருசலேமுக்கு வந்தான்.  பின்பு தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சீரியர் கண்ட போது அவர்கள் ஒருமிக்கக்கூடினார்கள்.  ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரை அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்.  ஆதாரேசருடைய படை தலைவனாகிய சோபா அவர்களுக்கு முன்னாக  அனுப்பப்பட்டான்.  இந்த காரியம் தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு யோர்தானை கடந்து ஏலாமுக்கு வந்தான்.  சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக அணிவகுத்து நின்றார்கள்.  சீரியர் தாவீதுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.  தாவீது எழுநூறு இரத வீரரையும், நாற்பதினாயிரம் குதிரை வீரரையும் கொன்று, படை தலைவனாகிய சோபாவையும் வெட்டிப் போட்டான்.  அப்பொழுது ஆதாரேசரை சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதை கண்டு இஸ்ரவேலோடே சமதானம் பண்ணி அவர்களை சேவித்தார்கள்.  அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவி செய்ய சீரியர் பயப்பட்டார்கள். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டவைகளின் கருத்துக்கள் என்னவென்றால் இஸ்ரவேலரை; யார் நிந்தித்து வெட்கத்துட்படுவதற்கு காரணமாயிருக்கிறார்களோ, அவர்களை கர்த்தர் முற்றிலும் முறிந்தோடி விழப்பண்ணுகிறார் என்றும், மேலும் நம்முடைய ஆத்துமாவோடு போராடிக்கொண்டிருக்கிற  பாவ மாம்ச இச்சைகள் இவைகளை கர்த்தர் முறியடிக்கிறார் என்பதும் நாம் உண்மையான இஸ்ரவேலனாக இருப்போமானால் நம்முடைய உள்ளத்தை எந்த அசுத்த கிரியைகளாலும் வஞ்சிக்க முடியாது என்பதும், நாம் யாருடைய உள்ளத்திலும் அவ்வித புறஜாதிகளுடைய கிரியைகள் இருந்தால் கர்ததர் அதனை நமக்கு முன்னின்று துரத்தி, நம்முடைய உள்ளத்தை பரிசுத்தபடுத்தி தேவனோடு சமாதான உடன்படிக்கை பண்ணிகொள்ளும்படியாக கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆதலால் நாம் ஒரே கிறிஸ்துவின் ஆவியினால் உள்ளம் நிறையப்படும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.