தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1தெசலோனிக்கேயர் 3:7
சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்; எந்த உலக இன்பங்களிலும் நாம் விழாமல் ஜாக்கிரதையாக நம்மை பரிசுத்தப்படுத்த வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் முழுமையும் ஜாதிகளின் கிரியைகளுக்கு இடம் கொடாதபடி கிறிஸ்துவின் ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 சாமுவேல் 11:1-10
மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.
அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.
அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.
அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.
உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது மறு வருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்கு புறப்படும் வருஷம் வந்த போது யோவாபையும், அவனோடேக்கூட தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும் அம்மோன் புத்திரரை அழிக்கவும்,ரப்பாவை முற்றுகைப் போடவும் அனுப்பினான்; அப்போது தாவீது எருசலேமிலே இருந்து விட்டான். ஒரு நாள் சாயங்காலத்தில் தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை உப்பரிகையின் மேல் உலாவிக்கொண்டிருக்கும் போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு வெகு சவுந்தரிவதியாயிருந்த ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து காண்கிறான். அப்பொழுது தாவீது அந்த ஸ்திரீ தாவீது யார் என்று விசாரிக்க ஆட்களை அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும் ஏத்தியனாகிய உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வாருங்கள் என்று சொல்லியனுப்பின போது, அவள் அவனிடத்தில் வந்தாள். அப்போது அவன் அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி தன்னை சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பினான். அப்பொழுது ஏத்தியனாகிய உரியாவை தாவீதிடத்தில் வரும்படி சொல்ல, யோவாபிடத்தில் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவை தாவீதினிடத்தில் அனுப்புகிறான். அப்போது உரியா தாவீதினிடத்தில் வந்த போது, தாவீது உரியாவிடம் சகசெய்தியையும், யுத்தத்தின் செய்தியையும் விசாரித்தவனாக உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்கு போய், பாத சுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவனுக்கு அனுப்பபட்டது. ஆனாலும் உரியா தன் வீட்டிற்கு போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே ஆண்டவனுடைய எல்லா சேவகரோடுங் கூட படுத்துக்கொண்டிருந்தான். உரிய வீட்டிற்கு போக வில்லை என்ற செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது, தாவீது உரியாவை நோக்கி; நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்கு போகாதிருக்கிறது என்ன என்றான்.
அதற்கு உரியா,
2 சாமுவேல்11:11
உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
மேற்கூறபட்ட வார்த்தைகளை அவன் கூறிய பின்பு, தாவீது உரியாவை நோக்கி:இன்றைக்கும் நீ இங்கே இரு; நாளைக்கு உன்னை அனுப்பி விடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றைக்கும், மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
பிரியமானவர்களே, இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது தாவீது இஸ்ரவேலையும, யூதாவையும் அரசாண்டு வரும் போது, எல்லா காரியங்களிலும் கர்த்தர் அவனோடுகூட இருந்து காப்பாற்றுகிறார் என்பதனை வாசிக்கிறோம். மேலும் அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள், அவனை சேவிக்கிறார்கள்,அவனுக்கு கப்பங்கட்டுகிறார்கள். இப்படியாக கர்த்தர் அவனுக்கு வீட்டை கட்டி ஆசீர்வதித்து இருக்கும் போது, அவன் இஸ்ரவேலரையும், யோவாபையும் அவன் சேவகரையும் அம்மோனியரோடு யு்தத்திற்கு அனுப்பி விட்டு, தான் அவனுடைய அரண்மனையின் உப்பரிகையின் மேல் உலாவிக்கொண்டிருக்கிறான். அப்போது ஸ்நானம் பண்ணிக்கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து காண்கிறான். ஆனால் உடனே அவன் அவள்மேல் மாம்ச இச்சைக்கொள்கிறான் என்பதை வாசிக்கிறோம். மேலும் அவன் வெட்கமான துர் கிரியை செய்ய துணிகிறான். அவ்விதம் அவன் தன் பரிசுத்த வாழ்வை கெடுத்துக்கொள்கிறான். இதனை நாம் பார்க்கும் போது கர்த்தர் தாவீதுடைய பரிசுத்தத்தை பரிசோதிக்கிறவர் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்விதம் அநேக கர்த்தரின் ஊழியகாரர்கள், தாங்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்வு கண்டவுடன் பலவிதமான இச்சைகளில் விழுவார்கள். இவ்விதமான வாழ்வு மனுஷர்களில் நடக்கிறதால் தேவனே அந்த சிங்காசனத்தை எடுக்கிறார். மேலும் எந்த மனுஷனும் தேவனுடைய சிங்காசனத்திற்கு ஒப்பாக வரமுடியாது என்பது நிச்சயமாக விளங்குகிறது.
ஆதலால்,
மத்தேயு 4:1-11
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார். இங்கு நாம் பார்க்கும் போது தோவாலயத்தின் உப்பரிகையின் மேல் நிறுத்துகிறதை பார்க்கிறோம். மேலும் பிசாசு மூன்று தடவை ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி கீழே தள்ளும்படி முயற்சி செய்கிறான். ஆனால் எந்த காரணத்தாலும் இயேசு உலக உல்லாசமான இன்பங்களில் விழுந்து விடவில்லை.
ஆதலால் பிரியமானவர்களே எவ்விதமான உலகத்தின் சிற்றின்பங்களில் நாம் விழுந்து விடாதபடி ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொண்டு தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும். நாம் ஆராதனையில் பங்குக் கொள்ளாமல் இருப்போமானால் தாவீதை போல பாவத்துக்குள்ளாக விழுந்து விடுவோம். ஆண்டவரை ஆராதிப்பது நாம் அந்நிய ஜாதியாரோடு யுத்தம் செய்து, நம் உள்ளத்தின் துர் கிரியைகள் மாற்றப்பட்டு தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்கிறோம் என்பதை கர்த்தர் இஸ்ரவேல் சபை அந்நிய ஜனத்தோடு யுத்தம் செய்கிறதை திருஷ்டாந்தப்படுத்துகிறார். தாவீது யுத்தத்திற்கு போகாமல் இருந்ததால் தன்னை கெடுத்துக்கொள்கிறான். ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் ஒவ்வொருவரும் பாதாளத்தில் விழுந்து போகாமல் காலையிலும், மாலையிலும் கர்த்தரின் சபையில் கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்; அப்போது கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்தி ஆசீர்வதிப்பார். இவ்விதமாக நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.