நம்முடைய ஆத்துமா - காக்கப்படுதல்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 13, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஆமோஸ் 5:14-15

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.

நம்முடைய ஆத்துமா - காக்கப்படுதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,கழிந்த நாளில் கிறிஸ்துவால் உள்ள நம்முடைய ஆத்துமாவின் மீட்பை குறித்து சில காரியங்கள் நாம் தியானித்தோம். மேலும் யோசேப்பை தேவன் எகிப்திற்கு அனுப்பிவிடுகிறதை நாம் பார்க்க முடிகிறது.அவ்விதம் எகிப்திற்கு தன் சகோதரரால் விற்கப்பட்ட யோசேப்பு போத்திபாருடைய வீட்டு விசாரணைகாரனும், அவருடைய ஊழியகாரனுமாக வைத்து வீட்டில் உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவிக்கிறான்.

அடுத்தபடியாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தேவன் இவ்வுலகத்தின் துர்கிரியைகளிலிருந்து அவருடைய இரத்தத்தால் நமக்கு ஒரு ஆத்துமா மீட்பை தருகிறார்.ஆனால் நாம் மிகவும் பாதுகாத்து கொள்ள வேண்டும் ஏனென்றால் நமக்கு தேவன் ஒரு யோசேப்பை திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார்.எப்படியெனில் யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

சில நாள் சென்றபின்பு அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டு அவனை வஞ்சிக்க நினைக்கிறாள்.

அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்கவில்லை.அவன் சொல்கிறான் இந்த வீட்டில் இருக்கிறவைகளில் யாதொன்றையும் குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல் எல்லாவற்றையும் என் கையில் ஒப்புவித்திருக்கிறார்.

ஆதியாகமம் 39:9

இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.

இப்படியிருக்க அவன் ஒரு வேலை செய்ய வீட்டுக்குள் போன போது அவனை இழுத்து கொண்டாள். ஆனால் அவனோ தன் வஸ்திரத்தை விட்டு வெளியே ஓடி போனதை கண்ட போது அவள் தன் வீட்டு மனிதரை கூப்பிட்டு அவனை குற்றவாளியாக கூறுகிறது வேத வசனத்தில் பார்க்க முடிகிறது.

ஆனால் அவளோ தந்திரமாக,

ஆதியாகமம் 39:16-17

அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,

அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான்.

ஆதியாகமம் 39:18

அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.

தன் மனைவி சொன்னதை கேட்ட யோசேப்பின் எஜமான் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையில் ஒப்புவித்தான்.

ஆனால் யோசேப்பு தான் உண்மையுள்ளவனாய் இருந்தபடியால்,

ஆதியாகமம் 39:21

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் பாதாளக் குழியிலிருந்து தேவன் நம்மை தூக்கி மீட்டு எடுத்த பிறகு நம் ஆத்துமாவுக்கு விரோதமாக வேசியானவள் கிரியை செய்வாள்.

 என்னவென்றால்,

நீதிமொழிகள் 7:10-23

அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.

சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள்; சந்துகள் தோறும் பதிவிருப்பாள்.

அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:

சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.

ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.

என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.

வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.

பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்டநாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,

தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள். உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,

ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.

இவ்விதமாக வேசியானவள் நம் ஆத்துமாவை வஞ்சித்து லோக இன்பங்களுக்குள் இழுத்து சென்று விடுவாள்.மேலும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்ய வைத்து விடுவாள். இதைத்தான் யோசேப்பு மூலம் தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். மற்றும் உலக அலங்காரம், மேட்டிமையான எண்ணங்கள், மாம்ச சிந்தைகள் இவ்விதமாக நாம் ஆத்துமா கர்த்தரை விட்டு பின் மாறிப்போகும்.

ஆதலால்,பிரியமானவர்களே நாம் நம்முடைய ஆத்மீக வாழ்க்கையில் கிறிஸ்துவினோடு ஐக்கியப்பட்டு பிறகு கிருபையினின்று விழுந்து விடாதபடி காத்துக் கொள்ள வேண்டும். இவ்விதமாக நாம் வேசிதன ஆவிக்கு விலகி ஜீவிப்போமானால் நம்மை தேவனோடு நெருங்கவிடாதபடி சில வேளையில் யோசேப்புக்கு வந்த சிறைச்சாலை அனுபவத்தை போல நம்மை நம் வாழ்வில் சத்துரு நெருக்கம் தரலாம். ஆனால் ஒருபோதும் உண்மையில் மாறாமல், சத்தியத்தை விட்டு விலகாமல் இருப்போமானால் தேவன் நம்மோடு கூட இருந்து நம்மை யோசேப்பை வாழ்வில் உயர்த்தினது போல்,நம் வாழ்விலும் அநேக நன்மைகளால் தேவன் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார். நம் ஆத்துமா மரண பாதளத்திலிருந்து தப்புவிக்கபடும்.

நீதிமொழிகள் 7: 24-27

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.

அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.

அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.  அதனால் பிரியமானவர்களே, நம் ஆத்துமா பிசாசினால் வஞ்சிக்கப்படாத படிக்கு எப்போதும் பரிசுத்த பாதையில் நடந்து கொள்ள கவனமாயிருக்கவேண்டும். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 - தொடர்ச்சி   நாளை.