தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 4:6,7 

மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய மாம்சமும், மனதும் விரும்புகிறதை செய்யாமல் தேவனுடைய சித்தம் செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவிற்குள் புது ஜீவனுக்குரிய கிறிஸ்துவின் சாயல் பெற்று வாழ வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 சாமுவேல் 13:1-15 

இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.

தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.

அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.

அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.

அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான்.

தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,

சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.

அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

மேற்கூறப்பட்ட வசனங்களின் படி தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு சாலொமோன் என்ற குமாரன் பிறந்த பிறகு, தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு சொளந்தரியமுள்ள சகோதரி இருந்தாள், அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமார் மேல் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்பு செய்ய அவனுக்கு வருத்தமாயிருந்தது.  அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாபின் குமாரனாகிய யோனதாப் சிநேகிதனாயிருந்தான் ; அவன் மகா தந்திரவாதி.  அவன் அம்னோனை பார்த்து, நீ ராஜகுமாரனாக இருக்கிறாய்; ஆனால் நாளுக்கு நாள் எதினால் மெலிந்து போகிறாய் என்று எனக்கு சொல்ல மாட்டாயா என்றான்.   அதற்கு அவன் தன் சகோதரனாகிய அப்சலோமுக்கு தாமார் என்ற ஒரு சகோதரியின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.  அதன் பின்பு யோனதாப் அம்னோனிடம் நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையில படுத்துக் கொள்;  உன்னை பார்க்கும்படி ராஜா வரும்போது அவரிடம் என் சகோதரி தாமார் கையினால் நான் போஜனம் புசிக்க வேண்டும்; அவள் கையினால் இரண்டு பணியாரம் சமைத்து சாப்பிட  உத்தரவு தர வேண்டும் என்று கேட்கிறான்.  பின்பு தாவீது வீட்டுக்கு தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் தமையன் அம்னோன் வீட்டுக்கு போய் சமையல் பணி கொடு என்று சொல்லியனுப்புகிறான் .  தாமார் அம்னோன் வீட்டுக்கு போய், அவன் கட்டிலில் படுத்திருக்கும் போது மாவெடுத்து பிசைந்து அவன் கண்களுக்கு முன்பாக தட்டி, பணியாரங்களை சுட்டு, சட்டியை எடுத்து அவனுக்கு முன்பாக வைத்தாள்.; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்.  பின்பு அவன் எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்ற போது எல்லாரும் வெளியே போனார்கள்.  அப்பொழுது அம்னோன் தாமாரை பார்த்து; உன் கையினாலே அந்த பலாகாரத்தை சாப்பிடும்படியாக அறைவீட்டிலே கொண்டு வா என்றான்; அவள் அப்படியே அறை வீட்டிற்குள் போன போது, அதனை சாப்பிடும்படிக்கு கிட்டே கொண்டு வா என்றபோது, அவள் அருகே கொண்டு போன போது, அவளை அவன் பிடித்து; சகோதரியே என்னோடே சயனி என்றான்.  ஆனால் அவள் அவனிடம் வேண்டாம் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே; இஸ்ரவேலிலே இப்படி செய்யலாகாது;  இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தை செய்ய வேண்டாம்.  நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலில் மதிகெட்ட ஒருவனை போல் ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்கு தராமல் மறுக்கமாட்டார் என்று அவள் சொல்வதை கேட்க மாட்டேன் என்று அவளை பலவந்தமாய் பிடித்து; அவளோடே சயனித்து, அவளை கற்பழித்தான்.  பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான் அவன் அவளை விரும்பினதை பார்க்கிலும், வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்ததால், அவளிடம் நீ எழுந்து போய் விடு என்றான். 

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, நமக்குள் எந்த  மோகமும் வரக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.  அது மட்டுமல்லாமல் ஒரே குடும்பம் என்றாலே கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்பதனை நாம் அறிந்து, எப்போதும் பயத்தோடும், பக்தியோடும் கர்த்தரை சேவிக்க வேண்டும்.  மேலும் ஒரே குடும்பமாகிய சபைக்குள் வருகிறவர்களானாலும், அங்கு நிரந்தமாக இருக்கிறவர்களானாலும், எல்லாருக்கும் ஒரே தகப்பன் என்ற உணர்வு வேண்டும்; அவர்கள் எல்லாம் சகோதர சகோதரிகள்.  இங்கு நாம் பார்க்கும் போது அம்னோன் மோகம் கொண்டான்; ஆனால் அவனுக்கு சிநேகிதனாக இருந்த யோனதாப் தவறான பாதையில் அவனை நடத்துகிறான்; அதனால் அம்னோன் வாழ்க்கையில் பாவம் பெருகிறது.  இப்படிபட்ட துர் ஆலோசனை தருகிறவர்களை நாம் சிநேகிதர்களாக வைப்போமானால், நாமும் சிக்குண்டு பாவத்தில் விழுந்து; பின்பு அது நம் ஆத்துமாவுக்கு கெடுதியாகவும், பிராணனுக்கு ஆபத்தாகவும் தீரும்.  ஆதலால் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நாம் ஒருபோதும் பொல்லாத சிநேகிதர்களோடு இருக்க விரும்பக்கூடாது.  நம்முடைய உற்ற சிநேகிதனாகிய கிறிஸ்து நம்முடைய பாவ மோக இச்சைகளுக்காக கல்வாரியில் மரித்து மூன்றாம் நாள் நமக்காக உயிரோடெழும்பின கிறிஸ்து இன்றும் நம்மில் ஜீவிக்கிறார்.  ஆதலால் நம் உள்ளத்தில் வருகிற சாத்தானை ஜெயிக்கிறவர் கிறிஸ்து; எந்த ஒரு காரியமானாலும் நமக்கு அவர் சகோதரனாக, சிநேகிதனாகவும், எல்லாவற்றிற்கும் எல்லாவுமாகவும் இருக்கிறார்.  ஆதலால் எந்த ஒரு காரியத்தையும், நன்மையானாலும், தீமையானாலும் அவரிடம் சொல்ல வேண்டும்.  அப்படியானால் அவர் நமக்கு ஆலோசனை தருவார்; அந்த ஆலோசனை ஒரு போதும் நம்மை தீமையில் கொண்டு சேர்க்காமல் நன்மையை கண்டடைய செய்யும்.  

அதனை குறித்து,

சங்கீதம் 32:8 

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

மேற்கூறிய வசனம் நமக்கு நல்ல பாதையை காட்டுகிறது. அல்லாமலும் கர்த்தர் இதனை திருஷ்டாந்தபடுத்துகிறது என்னவென்றால்,

எபேசியர் 2:1-5 

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

 மேற்கூறப்பட்ட கர்த்தரின் வசனங்கள் நாம் ஏற்று கொண்டால்,  நமது மாம்சமும், மனதும் விரும்பினதை செய்யாமல், தேவன் விரும்புகிறதை செய்து அவரோடே உயிர்ப்பிக்கப்ட்டு,அவருக்குள் எழுந்திருந்து, உன்னதங்களிலே அவரோடேக்கூட உட்காரவும் செய்வோம்; இவ்விதமாய் நாம் கர்த்தருக்குள் ஆசீர்வதிக்கப்படுவோம்.  ஆதலால்அம்னோனுடைய மாம்ச கிரியைகளால் தாமாராகிய மனசு கெட்டுப்போகிறது; இந்த இரண்டு பேரும் ஒரே சரீரத்தின் அவயவங்கள்.  ஆதலால் இப்படிப்படடகாரியங்களில் சகோதரரே, மாம்சத்தின் படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்கு கடனாளிகளல்ல. 

ஆகையால்,

ரோமர் 8:13,14 

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

மேற்கூறிய வசனங்களின் படி நாம் தேவனுடைய புத்திரராகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.